> என் ராஜபாட்டை : இந்த தீபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா ?

.....

.

Tuesday, October 29, 2013

இந்த தீபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா ?

இந்த திபாவளிக்கு நமது வெட்டி பிளாகர் சந்தையில் பல புதிய வெடிகளை அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளோம் . கிழே உள்ளவற்றில் எது பிடித்துள்ளது என சொல்லுங்கள் அதை உங்களுக்கு இலவசமாக அனுப்பிவைக்கிறேன்.


1.         நஸ்ரியா வெடி.

இந்த வெடிமுழுவதும் நன்றாக துணியை சுற்றி திரி மட்டும் தெரியும் வண்ணம் வெடிக்க வேண்டும் . இல்லை என்றால் வெடிக்காது நம்மை பார்த்து நையாண்டி செய்யும் . பதிவர் ஆ.வி க்காக ஸ்பெஷல்லாக செய்தது .

2.      சிபி வெடி :

இந்த வெடிக்கு மேல எதாவது காப்பி டம்பளர் வைத்தால்தான்  வெடிக்கும்.

3.      ஆரூர் மூனா வெடி:

இந்த வெடியை பக்கத்துல போய் "அரே ஊ சம்போ சத்தமா சொல்லணும் . அப்பத்தான் வெடிக்கும் .

4.      விஜய்காந்த் ராக்கெட்:

குவாட்டர் பாட்டில் உள்ளே வைத்துதான் விட வேண்டும். விடும் முன்பு அதன் தலையில் நன்றாக தட்ட வேண்டும்

5.      அஜித் வெடி:

பற்ற வைத்த பின் அரை கிலோ மீட்டர் நடத்து போய்தான் வெடிக்கும். பின்னணி இசை வைத்தால் நலம் .

6.      காங்கிரஸ்  புஷ்வாணம்  :

இதை பற்றவைக்கும் முன் அருகில் சில்லறை காசு வைக்கவேண்டும் . இத்தாலியில் இருந்து சிக்னல் இருந்தால்தான் எரியும் .

7.       2G வெடி

இது எப்ப வெடிக்கும், எப்படி வெடிக்கும், வெடிக்குமானு தெரியாம ஒரே சஸ்பென்சா இருக்கும்.

8.      விஜய் வெடி

இது நம்ம வீட்டில் வெடிக்குமா , அடுத்த வீட்டில் வேடிக்குமானு தெரியாது . பத்தவைத்த பின் ஒரு பன்ச் டயலாக் சொல்லிட்டுதான் வெடிக்கும்( சில சமயம் புஷ்னு போகும்).

9.      பண்னிகுட்டி அனுகுண்டு :

வெடிக்கும் போது பயடேட்டா சொல்லிகிட்டே வெடிக்கும். ஒரு மலையை(நான் மலைனு சொன்னது தமிழ் மணம்னு நிங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல) கூட சரித்துவிடும்.

10.     கருணாநிதி வெடி

இந்த வெடியை குடும்பத்துடன்  மட்டும்தான் கொலுத்த வேண்டும். வெடி சத்தம் கூட அந்த அந்த குடுப்பத்திற்க்கு மட்டும்தான் கேட்கும்.

     12. காமெடி கும்மி வெடி :

                    இது எதுக்காக வெடிக்கும் , யார் மேல வேடிக்கும்னே தெரியாது . 
                பத்தவச்சவங்க மேலேயே வெடிக்கும் . வெடிக்காட்டி சிரிப்பு சத்தம்
               வரும் . யாருக்கும் தொல்லை இல்லாத வெடி .
    
    13. கண்ணாடி மச்சான் "சீனு " வெடி 

               வெடிக்கும் முன் தான் எப்படி வெடிக்க போகிறேன் என 15 பக்கத்துக்கு விளக்கம் சொல்லிவிட்டு தான் வெடிக்கவேண்டும் . அப்பத்தான் வெடிக்கும் . பெண்கள் வெடித்தால் உடனே வெடிக்கும் என்பது இதன் ஸ்பெஷல் .


  டிஸ்கி ; இது போல உங்களிடம் எதாவது வெடி இருந்தால் சொல்லுங்கள்,
   எங்கள் கம்பெனி வாங்கிகொள்ளும்.10 comments:

 1. சீனு ஏற்கனவே மிளகாய் பட்டாசு போலதான் இருக்கார்.

  ReplyDelete
 2. பட்டாசில் இவ்வளவு ராஜா ட்ரிக்ஸ் பிராண்ட் வகைகள் ?அருமையாக வெடிக்கிறது !

  ReplyDelete
 3. ரொம்ப நல்லா இருந்தது இந்த ராஜா பிராண்ட் சிரிப்பு வெடிகள்

  ReplyDelete
 4. நல்லா இருக்குதுங்க... :) சூப்பர்

  ReplyDelete
 5. டமால் டுமீல் ...நம்ம ராக்கெட் ராஜா பாலகணேஷ் சார் வெடி ஒண்ணு இருக்குப்பா...முதல்ல மின்னல் மின்னும் ..அப்புறம் இடி மாதிரி வெடி வெடிக்கும்...

  ReplyDelete
 6. ஹாரி சார்..எங்கள் பள்ளியின் வலைப்பூவையும் வலைத்தளமாக மாற்ற உதவ்வும்..எவ்வளவு செலவாகும்...

  ReplyDelete
 7. சூப்பர் காமெடி வெடி....

  ReplyDelete
 8. Well, I hope you're happy. You've managed to impress me, the unimpressionable one. My friends will make fun of me for this. You did well.

  yepi

  friv 2

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...