> என் ராஜபாட்டை : இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - விமர்சனம்

.....

.

Wednesday, October 2, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - விமர்சனம்மூன்று தனி தனி கதைகள் இறுதியில் எப்படி ஒன்றாக இணைகிறது என்பதுதான் முதல் கதையின் ஹீரோ அஸ்வின்அவரது காதலி சுவாதிக்கும் இடையில் நடக்கும் சண்டையில் இவர் ஒரு விபத்தை செய்ய அதில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு ரத்தம் வேண்டும் . அதை எப்படி பெற்றார் என்பது ஒரு கதை .

இரண்டாவதில் சுமார் மூஞ்சி குமார் என செல்லமாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி அவரது (ஒருதலை ) காதலி நந்திதாக்கு காதல் வரவழைக்க செய்யும் கோமாளித்தனங்களும் , கலோபரங்களும் .

முன்றாவது கதையில் ஒரு பெண் (பொம்பளை ) தனது கள்ள காதலர்களுடன் (கவனிக்கவும் காதலனுடன் இல்லை காதலர்களுடன் ) இணைந்து தனது கணவனை போட்டு தள்ளிகிறார் . இவர்கள் கையில் சேதுபதியின் செல் கிடைகிறது .

இந்த மூன்று கதையும் கடைசியில் எப்படி எங்கே இணைகிறது என்பதை சிரிக்க  சிரிக்க சொல்லியிருக்கிறார்கள் .


+ பாயிண்ட்ஸ் :

விஜய் சேதுபதியின் நடிப்பு . படத்துக்கு படம் நடிப்பு மெருகேறுகிறது .

தனக்கு அதிகம் ஸ்கோப்  இல்லாத படம் என்றாலும் ஒத்துக்கொண்டு நடத்ததுக்கு சேதுபதிக்கு பாராட்டலாம் .

கட்டபஞ்சாயத்து ஆளாக வரும் சுகர் பேஷன்ட் பசுபதி . நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல வேடம் .

கடைசி 25 நிமிடங்கள் அதிரடி காமெடி .

அஸ்வினின்  அலட்டல் இல்லாத நடிப்பு

சுவாதியின் புன்னகை (!!!!!!!)

போஸ்டர் டிசைன்

சிந்திக்க துண்டாத தொடர் காமெடி

வில்லனாக இருப்பவர்களுடன் ஆண்டி நடத்தும் உரையாடல் - பாயிண்ட்ஸ் :

நெறைய காட்சிகளில் டாஸ்மாக்கில் தண்ணி அடிப்பது போல காட்டுவது . ஏற்கனவே நாட்டில் தன்னியாடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிட்டு .( அதுக்கு பிரதிபலனா கடைசியில் குடி குடியை கெடுக்கும்னு மெசேஜ் சொல்லிடாங்க )

ரோபோ சங்கரை கொஞ்ச நேரம் மட்டும் வைத்துகொண்டது , (அண்ணன் வந்தா ஸ்க்ரீனே பத்தமாட்டுது )

பாடல்கள் சுமார்தான் .

பின்னணி இசை பரவாயில்லை ரகம் ( காமெடி படத்திற்கு இதற்க்கு மேல் தேவையில்லை என நினைத்து விட்டார்கள் போல )

மலையாளியை காட்டிகொடுப்பவர்கள் போல காட்டியது . மலையாளத்தில் டப் பண்ணுனா தமிழன் காட்டி கொடுப்பதுபோல மாத்திடுவானுங்க .

இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் ஸ்லொவ் 

ஆனந்த விகடன் மார்க் : 43

குமுதம் : ஓகே

ராஜபாட்டை :  6.5/10

மொத்தத்தில் :

"மனசுவிட்டு சிரித்துவிட்டு ஏன் சிரித்தொம்னு யோசிக்க வேண்டாம்னு நினைப்பவர்கள் பார்க்கலாம் . கொடுத்த காசுக்கு நஷ்டம் இல்லை "


இதையும் படிக்கலாமே 

FREE CALL AND SMS APPLICATIONS FOR ANDROID
FREE CALL AND SMS APPLICATIONS FOR ANDROID
 FREE CALL AND SMS APPLICATIONS FOR ANDROID

6 comments:

 1. அவ்ளவு தான விஜய் சேதுபதி

  ReplyDelete
 2. சுவையான விமர்சனம்! நன்றி!

  ReplyDelete
 3. சுவையான விமர்சனம்! நன்றி!

  ReplyDelete
 4. தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 5. அந்த படத்த பாத்துட்டு தூங்கிட்டேன் ன்னு என் ப்ரென்ட் சொன்னாங்க, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட்...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...