> என் ராஜபாட்டை : ஆரம்பம்

.....

.

Monday, October 7, 2013

ஆரம்பம்
இப்போ நாம பதிவில் பார்க்க போவது நம்ம தல நடித்து திபாவளி அன்று   வெளிவர இருக்கும் ஆரம்பம் படம் பற்றிய செய்திகள் அல்ல .(இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பா !!) . நமது ராஜபாட்டை வலைத்தளம் 500 பின்தொடர்பவர்களை நெருங்குகிறது (நல்ல எழுதுற ஆளுங்களை யாரும் கண்டுகிறது இல்லை . உன்னை போல வென்னையதான் தொடர்கிறார்கள் என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கவில்லை ). அத்துடன் 6,00,000 ஹிட்ஸ் தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது .

இந்த சந்தோஷமான நேரத்தில் இன்னொரு சந்தோஷமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் .ராஜபாட்டை மூலம் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள் . பல ஊருகளில் ,முகம் தெரியாதவர்கள் கூட நண்பர்களாக கிடைத்ததில் மிக்க மகிஷ்சி . ஆனால் அடுத்த படியாக என்ன செய்யலாம் என்று ஒன்றும் தோன்றவில்லை . இந்நிலையில் நண்பர் அப்துல் பாசித் ஆங்கில வலைத்தளம் ஆரம்பியுங்கள் விளம்பரம் மூலம் கொஞ்சம் பணம் கிடைக்க  உண்டு என்றார் .


தமிழே நமக்கு தத்துகுத்து , இதுல இங்கிலீஷ் வேறயா என்று தோன்றியது . இங்கிலீஷ் மீடியத்தில் வேலைபார்ப்பதால் இங்கிலீஷ் "மீடியமாகதான் " வரும் . இருந்தாலும் எதோ ஒரு தைரியத்தில் (உங்களை நம்பி ) ஆரம்பித்துவிட்டேன் .(அப்பாடி தலைப்பு வந்துட்டு ).

எனவே நல்ல உள்ளங்கள் , நண்பன் நல்ல இருக்கணும் என நினைப்பவர்கள் (எப்பூடி !!!) கண்டிப்பாக (தயவு செய்து ) உங்கள் ஆதரவை தரவும் . இந்த தளத்தில் இனைததுபோல அதிலும் இணையவும் .

உங்கள் ஆதரவால் கொஞ்சம் நல்ல பதிவுகள் போட முயற்சிக்கிறேன் .(அப்பவும் முயர்ச்சிதானா ???). ஆட்சென்ஸ் கிடைத்ததும் வரும் விளம்பரங்களை கண்டிப்பாக நீங்கள் கிளிக் செய்வீர்கள் என எனக்கு தெரியும் . ஏனென்றால் பதிவுலகில் நல்லவர்களே அதிகம் .(யாருப்பா அது ஐஸ் ...ஐஸ் ..ன்னு கத்துறது .)
அந்த தளத்தின் லிங்க் :


தல ரசிகர்கள் மன்னிச்சு :2 comments:

  1. வாழ்த்துகள். இங்க்லீசு மீடியம் சாரா!?

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...