> என் ராஜபாட்டை : உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா ?

.....

.

Thursday, November 7, 2013

உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா ?



இன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , நாம் நல்ல பெயர் எடுக்கும் வகையிலும் குழந்தைகளை வளர்ப்பது என்பது இந்தியாவில் இருந்துஊழலை ஒழிப்பதற்கு சமம் . குழந்தைகளிடம் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் சாராம்சம் .


1. குழந்தையை கண்டிப்பாக அடுத்த குழந்தையுடன் ஒப்பிடாதிர்கள் . குழந்தை உங்களை அடுத்த பெற்றோருடன் ஒப்பிட்டால் பொறுத்து கொள்விர்களா ?


2. குழந்தைகளுடன் பேச , விளையாட நேரம் ஒதுக்குங்கள் . டிவி சிரியல் முக்கியமல்ல , எத்தனை நாள் கழித்து பார்த்தாலும் சிரியல் புரியும் . பெற்றவர்கள் தன்னிடம் பேச வேண்டும் என என்னும் குழ்\குழந்தைகள் அதிகம் .

3. குழந்தைகள் சொல்வதை கேளுன்க்கள் . அது சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகாய இருந்தாலும் கேளுங்கள் . அப்போதுதான் குழந்தை நன்றாக பேச வரும் . கூச்சம் போகும் .

4. பாராட்டுங்கள் . அது சின்னதாக ஏதாவது நல்ல விஷயம் செய்தாலும் பாராட்டுங்கள் . 


5. ஏதாவது தவறாக செய்தால் மென்மையாக கண்டியுங்கள் . அடித்துதான் ஒரு குழந்தையை நல்லவனாகக் முடியும் என்பது தவறு .

6. அடம்பிடிப்பதை கண்டியுங்கள் . அது கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து கெடுக்காதிர்கள் . ஏன் வாங்கி தரவில்லை என்பதை புரியவைக்க முயற்ச்சி செய்யுங்கள் .

7. பெண் குழந்தைகள் உடை விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள் . எத்தனை வயதானாலும் உங்களுக்கு அவள் குழந்தைதான் ஆனால் மற்றவர்கள் பார்வையில் ?


8. மற்றவர்களிடம் மரியாதையாக பேச கற்று கொடுங்கள் . முதலில் நாம் மரியாதையாக பேச வேண்டும் . நாம் மனைவியை வாடி என்றால் குழந்தையும் வாடி என்றுதான் சொல்லும் .

9. குழந்தை முன் சண்டை போடாதிர்கள் . அது அதன் மனதில் காயத்தை ஏற்படுத்தும் .

10. அடுத்த குழந்தையை பற்றி தவறான எண்ணம் நம் குழந்தை மனதில் புகுதாதிர்கள் .


11. அடுத்தவர்களுக்கு கொடுத்து உண்ணும் பழக்கத்தை கற்றுகொடுங்கள் . இன்றய நிலையில் நெறைய குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள்  சொல்லும் தவறான வார்த்தை " யாருக்கும் கொடுக்காம நீ மட்டும் சாப்பிடு " என்பதுதான்


எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் . உங்கள் கருத்தை சொல்லுங்கள் .

மாடல் : R.S.சரண்


படித்து விட்டிர்களா ?


ANDROID KITKAT பற்றி தெரியுமா ?

9 comments:

  1. அருமையான ஆலோசனைகள்! நன்றி!

    ReplyDelete
  2. இன்றைய பெற்றோர் கண்டிப்பாக இதனை உணர வேண்டும்.

    ReplyDelete
  3. இக்காலச் சூழலுக்கு ஏற்ற பயனுள்ள பதிவு நண்பரே.

    ReplyDelete
  4. அனுபவம் பேசுகிறதா வாத்தியாரே

    ReplyDelete
  5. உங்க சிங்கக் குட்டியை இப்படித்தான் வளர்க்கிறீர்களா? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. எழுத்து பிழைகளை திருத்தினால் இன்னும் நன்றாக இருக்கும் .

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...