> என் ராஜபாட்டை : கர்மவீரர் காமராசர்

.....

.

Monday, July 14, 2014

கர்மவீரர் காமராசர்








கிங் மேக்கர் என்றும் கருப்பு தங்கம் என்றும் கல்விக்கண் திறந்த கர்ம வீரர் என்றும் மக்களால் பாராட்ட பெற்ற ஒரு உன்னத மக்கள் தலைவர் திரு காமராஜர் அவர்கள் . தனது சுயநலமில்ல உழைப்பால் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்தவர் இவர் . அரசில் ஒரு பதவிக்கு வந்த உடன் தனது குடும்பத்தில் உள்ளவர்களை எப்படி கோடிஸ்வரன் ஆக்கலாம் என நினைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் போல் இல்லாமல் தன் குடும்பத்துகேன வாழாமல் தமிழக மக்களையே தன் குடும்பம் என வாழ்ந்தவர் இவர் .


இன்று ஏழை குழந்தைகள் பசியின்றி பள்ளி செல்ல இவரின் மதிய உணவு திட்டமே காரணம் . பசிக்கும் குழந்தை எப்படி பாடத்தில் கவனம் வைப்பான் என சிந்தித்ததின் வெளிபாடே இந்த மத்திய உணவு திட்டம் . இந்த திட்டத்தை பற்றி ஒரு விளம்பரப்படம் எடுக்கலாம் என ஒரு அதிகாரி யோசனை சொல்ல அந்த படம் எடுக்க ஆகும் செலவுக்கு இன்னும் சில பள்ளிகள் திறக்கலாம் என்றார் .



திருச்சி BHEL திட்டம் இவரால் வந்ததே . பல அதிகாரிகள் பல இடங்களை பார்த்துவிட்டு அந்த தொழில்சாலை அமைய சரியான இடம் இல்லை என சொல்ல , காமராஜர் கொஞ்ச நேரம் யோசித்து "ஏன் திருச்சி இதுக்கு சரியாவருமே " என்றார் . அப்புறம் சோதனை செய்ததில் அந்த இடம் மிக பொருத்தம் என அறிந்தனர் .



தனதுகுடும்பத்துக்காக பணம் சேர்க்காத , தனது நலனை பார்க்காத , தான் செய்யும் சேவைகளை விளம்பரபடுத்தி கொள்ளாத , மக்களுக்கு எந்த திட்டம் நல்லது என யோசித்த , கடைசிவரை மக்களுக்காகவே வாழ்ந்து இறுதியில் அந்த மக்களாலேயே தோற்கடிக்கபட்ட  நல்ல மனிதர் காமராஜர் .

இவரின் பிறந்த நாள் நாளை :(15-07-2014)

இவரை பற்றிய நூலை தரவிறக்கம் செய்ய : 

 CLICK HERE



இவரை பற்றிய நூலை தரவிறக்கம் செய்ய :   CLICK HERE 


இதையும் படிக்கலாமே :

8 comments:

  1. ஆனால் அவர் கட்சிக காரர்களே அவரை கேவலப் படுத்துகிறார்கள்

    ReplyDelete
  2. காம்ராஜர் பிறந்த நாள் சிறப்பு பதிவு அருமை.

    ReplyDelete
  3. காமராஜரை பற்றிய தகவல்கள் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. காமராஜரை பற்றிய தகவல்கள் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. காமராசர் இல்லையேல் இன்று நாம் ஏது

    ReplyDelete
  6. இந்த திட்டத்தை பற்றி ஒரு விளம்பரப்படம் எடுக்கலாம் என ஒரு அதிகாரி யோசனை சொல்ல அந்த படம் எடுக்க ஆகும் செலவுக்கு இன்னும் சில பள்ளிகள் திறக்கலாம் என்றார் .// எவ்வளவு உயர்ந்த சிந்தனை!! பாருங்கள்! இப்போது பெயர் தாங்கி வரும் "விளம்பரங்கள்" நினைவுக்கு வருகின்றன!

    நல்ல ஒரு பதிவு நண்பரே!

    ReplyDelete
  7. காமராஜரைப்பற்றிய நல்லதொரு பதிவு நண்பரே நானும் இவரைப்பற்றி காமராஜர் என்ற தலைப்பில் ஒருபதிவிட்டேன் கடந்த ஒருமாதத்திற்க்கு முன்பு இவரது பிறந்தநாள் ஞாபகம் எனக்கு வரவே இல்லை.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...