புலி படம் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு இன்னொரு சிறப்பாக ஆண்ட்ராய்டு, விண்டோஸ் , மற்றும் ஐஓஎஸ் என அனைத்து தொழில்நுட்பங்களிலும் விளையாடும் கேம் உருவாக்கப்பட உள்ளது. ஏற்கனவே ‘கத்தி’ படத்திற்கு ஆண்ட்ராய்டு கேம் ரிலீஸ் செய்த ஸ்கைடௌ ஸ்டூடியோஸ் தான் ‘புலி படத்திற்கான கேமையும் உருவாக்கி வருகிறார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக படத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்ட்ரேடர்ஜி கேம் எனப்படும் , ஒரு கிராமம், போர் கருவிகள் உருவாக்கம், மற்றும் போர் களம் அமைத்தல் என உருவாக்கப்பட உள்ளது புலி கேம்.
இவ்வளவு நாளாக ரேஸ் அல்லது சண்டை கேமாக ஒவ்வொரு லெவலாக முன்னேறி வித்யாசமான பின்னணி என மட்டுமே இந்தியாவில் படங்களை அடிப்படையாகக் கொண்ட கேம்கள் உருவாக்கப்பட்டன. ‘கத்தி’, கப்பர் என இதில் பல கேம்கள் அடக்கம். இப்போது இந்தியப் படங்களில் முதல் முறையாக அரசர் கால கதையையும் உள்ளடக்கிய ‘புலி’ படத்தின் கேம் போர்களம் அமைத்தல் அதில் ஹீரோவாக விஜய் அரசனாக செயல்படுதல் என விளையாட்டு சுவாரஸ்யம் நிறைந்த கேமாக உருவாக உள்ளது. இதற்கான டீஸரும் விரைவில் வெளியிட உள்ளனர்
சினிமா பிரபலங்கள் பலருக்கும் அஜித்தைப் பிடிக்கும், ஆனால் அஜித்தின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் யார் தெரியுமா?. அஜித் தற்போது சிவா இயக்கத்தில் தல-56 படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவரின் இசையை அஜித் கேட்டுள்ளார்.இசை மட்டுமின்றி அனிருத் பணியாற்றும் முறையும் அஜித்திற்கு மிகவும் பிடித்து போயுள்ளது.
எனவே தல-57 படத்திற்கும் அனிருத்தையே இசையமைப்பாளராக்க அஜித் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.இதற்கு முன் அஜித்தின் குட் மியூசிக் லிஸ்டில் எப்போதும்யுவன் இருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் இப்போது அனிருத்தும் இணைந்துவிட்டார்.
நன்றி : விகடன்
Tweet |
பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete