> என் ராஜபாட்டை : இலங்கை

.....

.
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Saturday, August 11, 2012

TESO மானமுள்ள தமிழன் கவனத்திற்கு

ஈழ மக்கள் சிங்கள அரசால் பல கொடுமைக்கு ஆளான நேரம் பதுங்கு குழியே வாழ்கை என இருந்த நேரம் ....




தமிழின தலைவன் என சொல்லிகொள்ளும் இவர் அவர்களை காப்பதை விட தன குடும்பத்தை காப்பதிலும் , அமைச்சர் பதவி பெறுவதிலும் ஆர்வமாக இருந்தார்


போரில் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த போது தனது குடும்பத்தை சேர்த்து விழா எடுத்து கொண்டாடினார்


தமிழன் குடும்பன் அழியும் போது இவர் குடும்பம் சந்தோஷத்தில் மிதந்தது

மக்கள் மனதை மாற்ற இல்லை இல்லை ஏமாற்ற 15  நிமிடம் உண்ணா விருதம் என்ற நாடகத்தை நடத்தினார்


இவரின் சுயருபம் புரிந்த மக்கள் இவரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர் ..
இழந்த செல்வாக்கையும் , வாக்கு வங்கியையும் திரும்ப பெற என்ன செய்வது என யோசித்தார் 


பிரபாகரனின் தாயாரை கூட நாம அனுமதிக்க வில்லையே , மான முல்லா எந்த தமிழன்னும் நம்மை மதிக்க மாட்டானே என நினைத்தார்


அந்த கணத்தில் அவர் சிந்தையில் உதித்ததுதான் டெசோ ... இதைவைத்து மக்களை எளிதில் ஏமாற்றலாம் என முடிவு செய்தார்
போகிற போக்கை பார்த்தால் டெசோ சிறப்பு விருந்தினராக ராஜ பக்ஷே கூட வரலாம் ...


இந்த தமிழ் இன தலைவனை நம்புங்கள் கண்டிப்பா ஈழம் கிடைக்கும் ....( போங்கயா போய் புள்ளை குட்டிகளை படிக்க வையுங்கள் )

Friday, July 1, 2011

வயிற்றுக்காக தன்னையே விற்கும் நிலையில் முன்னாள் பெண் போராளிகளாம்!! கே.பி




என்னுடைய சக பெண் போராளி தனது வயிற்றுக்காக, தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, அவளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத எனக்கு, அவளது உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிதியை கைப்பற்றி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்கும் அதைப் பயன்படுத்த முயற்சி எடுப்பேன் எனத் தெரிவித்தார்
 
விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவருமான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன். முல்லைத்தீவில் அன்பு இல்லம் என்ற அனாதைகள் இல்லம் ஒன்றை இன்று ஆரம்பித்து வைத்த அவர், அதன் பின் அங்கிருந்து பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 'வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நிதியை போரின் பின்னர் பலர் தம்வசம் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.
 
அவர்களில் பெரும்பாலானவர்களை எனக்கு தெரியும். அவர்களிடம் இருந்து அந்தப் பணத்தைப் பெறுவது கடினமான காரியம். ஆனால் அதனைப் பெற்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்த நான் முயற்சி எடுப்பேன்'' என்று அவர் கூறினார். இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தான் தற்போது அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனாலும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் போன்ற சில மனிதாபிமானப் பணிகளைச் செய்வதற்கு தனக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஏனைய முன்னாள் உறுப்பினர்களை விரைவில் விடுதலை செய்வது தொடர்பில், இலங்கை அரச இயந்திரத்தின் செயல்பாடுகளில் ஒரு தாமதம் காணப்படுகிறது எனக் கூறிய கேபி, தமிழ் மற்றும் சிங்கள தீவிர போக்குடையவர்களின் அழுத்தமும் இந்த தாமதத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
 
“நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்'' என்ற சித்தாந்தத்தை ஆரம்பித்தவர்களில் தானும் ஒருவர் என்று கூறிய அவர், ஆனால், தற்போது காலம் மாறி விட்டது என்றும், தற்போதைக்கு முதலில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கே புலம்பெயர் தமிழர் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அரசியல் விவகாரங்கள் அதற்கு அடுத்ததாகவே பேசப்பட வேண்டும் என்றும் கூறினார்.
 
மேலும், என்னுடைய சக பெண் போராளி தனது வயிற்றுக்காக, தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, அவளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத எனக்கு, அவளது உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது'' என்றார் கேபி.
 
Thanks: Kingtamil.com

Saturday, May 21, 2011

ராஜபக்சேவுக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி 2 கோடி பேரிடம் கையெழுத்து: கொளத்தூர் மணி




இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி கொடுக்க வலியுறுத்தி 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறோம் என கொளத்தூர் மணி கூறினார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, ஐ.நா. சபை அறிக்கையில் ஈழத்தில் போர் குற்றம் நடைபெற்று இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
 
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ராஜபக்சே மற்றும் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து கடந்த 5ந் தேதி முதல் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறோம் ஐ.நா.சபையின் அறிக்கைக்கு எதிராக 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்திற்கு வருமாறு ராஜபக்சே அழைப்பு விடுத்து இருக்கிறார்.
 

இந்தியா ஏற்கனவே செய்த தவறை மீண்டும் செய்யாமல் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை மனதில் கொண்டு இலங்கையின் போர் குற்றத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும். ஐ.நா.சபையின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று யார் குரல் கொடுத்தாலும் அதை வரவேற்க தயாராக இருக்கிறோம் என்றார்.


Thanks: kingtamil