> என் ராஜபாட்டை : வயிற்றுக்காக தன்னையே விற்கும் நிலையில் முன்னாள் பெண் போராளிகளாம்!! கே.பி

.....

.

Friday, July 1, 2011

வயிற்றுக்காக தன்னையே விற்கும் நிலையில் முன்னாள் பெண் போராளிகளாம்!! கே.பி




என்னுடைய சக பெண் போராளி தனது வயிற்றுக்காக, தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, அவளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத எனக்கு, அவளது உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிதியை கைப்பற்றி இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்கும் அதைப் பயன்படுத்த முயற்சி எடுப்பேன் எனத் தெரிவித்தார்
 
விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவருமான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன். முல்லைத்தீவில் அன்பு இல்லம் என்ற அனாதைகள் இல்லம் ஒன்றை இன்று ஆரம்பித்து வைத்த அவர், அதன் பின் அங்கிருந்து பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 'வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நிதியை போரின் பின்னர் பலர் தம்வசம் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.
 
அவர்களில் பெரும்பாலானவர்களை எனக்கு தெரியும். அவர்களிடம் இருந்து அந்தப் பணத்தைப் பெறுவது கடினமான காரியம். ஆனால் அதனைப் பெற்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படுத்த நான் முயற்சி எடுப்பேன்'' என்று அவர் கூறினார். இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தான் தற்போது அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆனாலும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் போன்ற சில மனிதாபிமானப் பணிகளைச் செய்வதற்கு தனக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஏனைய முன்னாள் உறுப்பினர்களை விரைவில் விடுதலை செய்வது தொடர்பில், இலங்கை அரச இயந்திரத்தின் செயல்பாடுகளில் ஒரு தாமதம் காணப்படுகிறது எனக் கூறிய கேபி, தமிழ் மற்றும் சிங்கள தீவிர போக்குடையவர்களின் அழுத்தமும் இந்த தாமதத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
 
“நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்'' என்ற சித்தாந்தத்தை ஆரம்பித்தவர்களில் தானும் ஒருவர் என்று கூறிய அவர், ஆனால், தற்போது காலம் மாறி விட்டது என்றும், தற்போதைக்கு முதலில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கே புலம்பெயர் தமிழர் ஆதரவு வழங்க வேண்டும் என்றும், அரசியல் விவகாரங்கள் அதற்கு அடுத்ததாகவே பேசப்பட வேண்டும் என்றும் கூறினார்.
 
மேலும், என்னுடைய சக பெண் போராளி தனது வயிற்றுக்காக, தன்னையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் போது, அவளுக்கு சாப்பாடு கொடுக்க முடியாத எனக்கு, அவளது உரிமைகளைப் பற்றிப் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது'' என்றார் கேபி.
 
Thanks: Kingtamil.com

13 comments:

  1. உன்குற்றம்மா என் குற்றமா யார நான் குற்றம் சொல்ல

    ReplyDelete
  2. செய்திப் பகிர்விற்கு நன்றி பாஸ்,

    ஒரு காலத்தில் அவர்கள் நிமிர்ந்து கம்பீரமாக நின்ற போது உதவியோர் எல்லாம் இன்று பாராமுகமாய் இருப்பது தான் வேதனையளிக்கிறது.

    ReplyDelete
  3. யாரு உண்மைய சொல்லுராங்கன்னே தெரியலையே ராஜா
    நல்ல பகிர்வு

    ReplyDelete
  4. பெரிய ஆளுங்கன்னாலே மாத்தி மாத்தி பேசுவாங்களோ!

    ReplyDelete
  5. செய்திப் பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  6. போரின் தாக்கம் அரசின் திட்டமிட்ட சதி

    ReplyDelete
  7. பேச்சு எல்லாம் இவருக்கு நல்லாத்தான் வருது
    ஆனா செய்கைதான் எல்லாம் வேறு மாதிரி
    இதத்தான் சொல்லுவாங்க
    ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுததாம்

    ReplyDelete
  8. இந்தாளின் துரோகத்துக்கு சமிபத்து உதாரணம்
    அம்மா ஆட்சிக்கு வந்ததும் இவரு உடனே பேட்டி கொடுக்குறாரு
    புலிகள் அம்மாவையும் போட்டுத்தள்ள முயன்றாங்க முடியாம போச்சுன்னு
    சரி இது உண்மையாகவே இருக்கட்டும்
    அத இப்போ அம்மா ஆட்சிக்கு வந்ததும் உடனே சொல்லிய காரணம் என்னன்னு
    அவரு மனச்சாட்சிக்கு (அது இருக்கா இன்னும் ) தெரியும்...

    ReplyDelete
  9. நல்லா தெரியுதுங்க சிலர் இப்படியும் அப்படியும் பேசுவாங்க ..
    சூழ்நிலைக்கு தகுந்த வேடம் கிடைத்தால்

    ReplyDelete
  10. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...