இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி கொடுக்க வலியுறுத்தி 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறோம் என கொளத்தூர் மணி கூறினார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, ஐ.நா. சபை அறிக்கையில் ஈழத்தில் போர் குற்றம் நடைபெற்று இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ராஜபக்சே மற்றும் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து கடந்த 5ந் தேதி முதல் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறோம் ஐ.நா.சபையின் அறிக்கைக்கு எதிராக 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்திற்கு வருமாறு ராஜபக்சே அழைப்பு விடுத்து இருக்கிறார்.
இந்தியா ஏற்கனவே செய்த தவறை மீண்டும் செய்யாமல் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை மனதில் கொண்டு இலங்கையின் போர் குற்றத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும். ஐ.நா.சபையின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று யார் குரல் கொடுத்தாலும் அதை வரவேற்க தயாராக இருக்கிறோம் என்றார்.
Thanks: kingtamil
Tweet |
எங்கே கையெழுத்து போடணும் சொல்லுங்க நான் போடுறேன்....
ReplyDelete/* இந்தியா இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை மனதில் கொண்டு இலங்கையின் போர் குற்றத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும் */
ReplyDeleteஅது சரி, வேலிக்கு ஒணான் சாட்சியா
கையெழுத்து வாங்கினால் தலையெழுத்து மாறிப்போகுமா?
ReplyDelete