நண்பர்களே கிழே சில செய்திகள் உள்ளன. அவைகளை இதுவரை நீங்கள் கேள்விபட்டு இருக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு செய்தியாவது நீங்கள் படிக்கும் போது அட இது நமக்கு தெரியுமே என தோன்றினால் கூட நான் பதிவு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன் .
- மன்புழுவுக்கு கண் இல்லை என்பது தெரியும் ஆனால் அதுக்கு வாயும் கிடையாது தெரியுமா ?
- கணினியின் தந்தை சார்லஸ் பாப் பேஜ் என தெரியும் , அவரின் தந்தை பெயர் பேஜ் டி . மரியோ என்பது தெரியுமா ?
- ஷேக்ஸ்பியர் பிறந்த நாளும் , இறந்த நாளும் ஒன்றுதான் (23-04-1564/ 23/4/1616) என்பது தெரியும் இதுப்போல புகழ் பெற்றவர்கள் வால்ட் டிசினி மற்றும் சர் . சி .வி ராமன் என்பது தெரியுமா ?
- சாம்பல் நிற அணில் சரணாலயம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது எனபது தெரியும் , ஆணில்களுக்காக தனி கோவில் கேரளாவில் உள்ளது எனபது தெரியுமா ?
- மனித ரத்தத்தின் நிறம் சிவப்பு என தெரியும் , நத்தையின் ரத்த நிறம் கருப்பு என்பது தெரியுமா ?
- கருவுறுதல் நடைபெறாமல் பழங்கள் உருவாகும் முறைக்கு “பாரத்தினே கார்பி “ என்று பெயர் எனபது தெரியும் , இலைகளே இல்லாமல் செடி உருவாக்கும் முறைக்கு “லிப்ளினா டிமரப்பா “ என்று தெரியுமா ?
- இந்தியாவின் உயரிய விருது பாரத ரத்னா என்பது தெரியும் , அதை முதலில் பெற்றவர் காமராஜர் எனபது தெரியுமா ?
- இதுவரை மேலே படித்தவற்றில் தெரியும் என முடியும் அனைத்தும் உண்மை , ( சிவப்பு வண்ணத்தில் உள்ள அனைத்தும்) தெரியுமா என முடியும் அனைத்தும் என் கற்பனை என்பது தெரியுமா ?

