ஐயா கும்புடுறேன்( இது உங்கள் ஸ்டைல்தான்)
முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். ஆமாம் நீங்க தமிழ்மணத்தில் இரண்டாம் இடம் பிடித்தமைக்கு. தமிழ்மணத்தில் முதல் 20 ல் இடம் பிடிப்பதே அரிதான நேரத்தில் இரண்டாம் இடம் என்பது சாதனைதான். மீண்டும் வாழ்த்துகள், வளருங்கள், தொடருங்கள்.
இந்த கடிதம் எழுதகாரனமே மேலே சொன்ன விஷயத்திற்க்கு நீங்கள் போட்ட பதிவும், அதில் சொன்ன சில விஷயங்களும் தான். நீங்கள் கடுமையாக சாடிய விஷயம் copy & paste பற்றி.
“விகடன் போன்ற முன்னனி இத்ழ்களின் படைப்புகளை திருடி பதிவு போட்டி ஹிட்ஸை எகிறசெய்தல்! “
எல்லா விஷயமும் எல்லருக்கும் தெரியும் என சொல்ல முடியாது. நான் பேருந்தில் செல்லும் போது கடையில் விகடன் அல்லது முன்னனி இதழ்களின் விளம்பரங்களை பார்க்கும் போது வாங்க தூண்டும் அல்லது படிக்க தூண்டும். அந்த ஒரு விஷயத்துகாக அந்த இதழை வாங்கவேண்டுமா என தோன்றும். இந்த நேரத்தில் கைகுடுப்பது நீங்கள் சொன்ன பதிவர்கள்தான்.
அவர்கள் திருடவில்லை, தனக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர். இது எப்படி தவறு ஆகும். சொந்த சரக்கை மட்டும்தான் எழுதவேண்டும் எனில் நீங்கள் உதாரனத்திற்க்கு திருகுறள், ராமாயனம் , etc என எதிலிருந்தும் எடுக்க கூடாது.
“ விகடனை பதிவை சுட்டு, ஹிட்ஸ் வாங்கி நம்பர் ஓன்னாக வந்தேன் என்றால் நண்பர்கள் என்னை நாயினும் கடயனாக ம்திப்பர்.”
நீங்கள் யாரை மனதில் வைத்து இப்படி எழுதுகின்றிர்கள் என நன்றாக தெரிகிறது. அவர் copy & paste மட்டும் பன்னுவதில்லை. copy & paste வரும் ஹிட்ஸை விட அவரின் சொந்த பதிவிர்க்கு வரும் ஹிட்ஸ் அதிகம். சக பதிவரை இப்படி விமர்சிப்பது தவறு என்பது எனது எண்ணம்.
“ இனி தமிழ்மணத்தில் copy & paste க்கு இடம் இல்லை என தீர்மானம் எடுக்கவேண்டும்.”
தமிழ்மணம் இல்லை என்றால் பதிவுலகம் இருக்காதா? யாரும் பதிவே எழுதமாட்டார்களா? வடிவேலு பானியில் சொன்னால் “என்ன இது சின்னபிள்ளைதனமால இருக்கு?”
யாரும் பார்க்காத, பலருக்கு தெரியாத விஷயத்தை எதாவது ஒரு தளத்தில் அல்லது இதழில் படித்தால் அதை பகிர்வதில் என்ன தப்பு.
“copy & paste பண்னி பதிவுகள் போடும் ஒரு பதிவரை முன்னனி பதிவர் என அடையாளம் காட்டுவது தமிழ்மனத்திர்க்கு மாபெறும் அவமானம்”
Only copy & paste என்றால் நான் ஒத்துகொள்கிறேன். சொந்த பதிவுடன் , தமக்கு பிடித்த , ரசித்த , வாசித்த பதிவை copy & paste செய்வதை தவறு என சொல்லமுடியாது.
இவையனைத்தும் என் சொந்த கருத்து. தவறு எனில் மன்னிக்கவும்.
கொசுறு: நமது பதிவுக்கு வரும் கமெண்ட்க்கு பதில் கமெண்ட் என்று கமெண்ட் மேல கமெண்ட் போட்டு கமெண்ட் எண்ணிக்கையே அதிகரித்து காட்டுவது சரியா ?
அன்புடன்..
(தனது, & மற்றவர்) மகிழ்ச்சிகாக பதிவிடும் ஒரு பதிவர்.
Tweet |
சக பதிவர்களின் மனதை பிரதிபலிப்பதாகவே உங்கள் கருத்துக்கள் இருந்தது..
ReplyDeleteஉண்மையிலேயே சொந்த படைப்புகளுக்காகவே அதிகமாக ஹிட்ஸ் வாங்குபவரே அந்த தமிழ்மணத்தில் முதலிடம் பிடித்த பதிவர். அதை பொறாமையென்னும் குணமில்லா அனைவருமே ஒத்துக்கொள்வார்கள்.
தங்கள் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.
Your are absolutely right my lord.
ReplyDeleteஇனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteஉங்களின் ஆதங்கத்தினை உணர்கிறேன்.
அதே வேளை....
கொசுறு: நமது பதிவுக்கு வரும் கமெண்ட்க்கு பதில் கமெண்ட் என்று கமெண்ட் மேல கமெண்ட் போட்டு கமெண்ட் எண்ணிக்கையே அதிகரித்து காட்டுவது சரியா ?//
விவாத மேடைப் பதிவுகளுக்கு பதிவர்கள் கருத்துச் சொல்லும் போது பதில்க் கமெண்ட் போட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படுவது இயல்பானது.
இதனைத் தான் நான் செய்கிறேன். அதனால் தான் கமெண்டுகள் என் பதிவில் அதிகமாக காணப்படுகின்றன.
அப்படீன்னா பதிவர்கள் விவாதக் கருத்துக்களை வைக்கும் போது பதில் கமெண்ட் போடக் கூடாது என்று சொல்ல வாறீங்களா?
அடப்போங்கையா.....
ReplyDelete//தமிழ்மணம் இல்லை என்றால் பதிவுலகம் இருக்காதா? யாரும் பதிவே எழுதமாட்டார்களா?//
ReplyDeleteஹா ஹா செம கேள்வி மாப்ஸ்
மாப்ள பலே பலே...நடத்துங்க!
ReplyDeleteநீங்க சொல்றலயும் நியாயம் இருக்கத்தான் செய்யுது
ReplyDelete(தனது, & மற்றவர்) மகிழ்ச்சிகாக பதிவிடும் ஒரு பதிவர்.//
ReplyDeleteஇப்படிமுடிவெடுத்துட்டா யாருக்கும் பிரச்சினை இல்ல போங்க!
Onenu solluvatharku illai....
ReplyDeleteநல்லாதான் சமாளிக்கறீங்க போங்க..
ReplyDeleteபலே ராஜா மனசுல இருக்குறதை அப்பிடியே சொல்லீடீங்க.. அதுல சமாளிப்பு வேற..
ReplyDeleteகடைசி கேள்வி கொஞ்சம் யோசிக்க வேண்டியது
ஓஹோ
ReplyDeleteஎன்னய்யா இங்கே சண்டை...???
ReplyDeleteகாப்பி பேஸ்ட் போடும்போது, கீழே எழுதியவர்களுக்கு நன்றி போட்டால் போதுமானது என
ReplyDelete'பாலா பட்டரை" ஷங்கரே சொல்லிட்டாருங்கோ...
மொய்யிற்கு மொய் என்பதான பின்னூட்டங்கள் அல்லாமல் எத்தனை ஆக்கபூர்வமான பின்னூட்டங்கள் இடப்படுகின்றன என்பதுதான் முக்கியமானது.
ReplyDelete//
ReplyDelete(தனது, & மற்றவர்) மகிழ்ச்சிகாக பதிவிடும் ஒரு பதிவர்///
அட இது நல்லா இருக்கே இப்படி இருந்துட்டா பிரச்ச்னையில்ல போல.....................கோகுல் கருத்துதான் நமக்கும்
மற்றொருவருடைய பதிவை மீள்பதிவு செய்யும்போது அதற்குரியவரிற்கு அறியத்தந்துவிட்டு அல்லது குறைந்தபட்சம் மீள்பதிவில் அதன் மூலாதாரங்கள்பற்றிக்குறிப்பிட்டால் நல்லது.அதைவிடுத்து தானே எழுதியதுபோல பில்டப் கொடுப்பது பெரும் தவறு.
ReplyDeleteவணக்கம் பாஸ்.
ReplyDeleteசொல்லுகிறேன் என்று தப்பா நினைக்காதீர்கள்... விகடன் போன்ற பத்திரிகைகளில் இருந்து எடுத்து பதிவிடுவது ரெம்ப அப்பு நண்பா.... இதற்க்கு அவர்களிடம் அனுமதி வாங்கியா செய்கிறார்கள்????
அவர்களை உழைப்பை திருவது மிக கண்டனத்துக்கு உரியது. இது அவர்கள் பத்திரிக்கை விற்பனையையும் அல்லவா பாதிக்கும். நான் கூட சில பதிவுகளில் விகடனின் கட்டுரைகளை படித்து இனி ஏன் விகடன் வேண்டுவான் என்று சில இதழ்களை விட்டு உள்ளேன்.
நமது பதிவுக்கு வரும் கமெண்ட்க்கு பதில் கமெண்ட் என்று கமெண்ட் மேல கமெண்ட் போட்டு கமெண்ட் எண்ணிக்கையே அதிகரித்து காட்டுவது சரியா ?
ReplyDeleteவாழ்த்துக்கள்.
எதாவது சொல்லுங்க//////////
ReplyDeleteஓங்கேங்க :-)
/அந்த இதழை வாங்கவேண்டுமா என தோன்றும். இந்த நேரத்தில் கைகுடுப்பது நீங்கள் சொன்ன பதிவர்கள்தான்.//
தவறே இங்கிருந்து தான் சகோ ஆரம்பிக்குது. நீங்களே சொல்லிட்டீங்க பாருங்க. வாங்கணுமான்னு தோணும். ஆனா வாங்க வேணாம். ஏன்னா இந்த மாதிரி நேரத்துல தான் கைகுடுக்க பதிவர்கள் இருக்காங்களே.......
யாருமே உங்க புத்தகம் வாங்காம இலவசமாவே படிக்க ஆரம்பிச்சுட்டா உங்களுக்கு அடுத்து புத்தகம் எழுத தோன்றுமா? அல்லது அந்த உங்களின் நிறுவனம் தொடர்ந்து இயங்குமா?
(யாரோ ஒருவர் எழுத போறாங்க. அத 10 பேரு படிக்க போறாங்க. எல்லாருமேவா புத்தகம் வாங்காம போய்டுவாங்கன்னு சொல்லாதீங்க. அந்த நிறுவனத்தின் டார்க்கெட் நம்பர் குறையுமே...)
//
அவர்கள் திருடவில்லை, தனக்கு தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர். இது எப்படி தவறு ஆகும்//
கண்டிப்பா தவறு தான் சகோ. ஒருவனின் பல நாள் கடின உழைப்பு, அறிவு,நேரம்,சுயதேடுதல்,ஆர்வம், கவனித்து பிரித்தறிந்து ஆராய்ந்து பகுத்த நுண்ணிய வேலைகள் அடங்கிய ஒட்டு மொத்த ஆற்றலை அவன் விருப்பமின்றி எளிமையாக ஒரே நொடியில் காப்பி பேஸ்ட் செய்து அவனுக்கு கிடைக்கும் பாரட்டையோ வெகுமதியையோ, பணத்தையோ,ஊக்கத்தையோ சிறிதளவேனும் நாம் தடையாய் இருந்தால் அது தவறில்லையா சகோ. நீங்களே சொல்லுங்க. நீங்க வளர்த்த குழந்தை உங்களுக்கு தானே சொந்தம். அந்த குழந்தைக்கு கிடைக்கும் பாராட்டுக்களால் அடைய போகும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உங்களுக்கு தானே சேர வேண்டும். சம்பாதிக்கும் வயது வந்ததும் நீங்கள் வளர்த்த குழந்தையை நான் பறித்து சென்றால் யார் மீது சகோ குற்றம்?!
நீங்கள் பெயர் குறிப்பிட்டு பகிரங்கமாக தாக்கும் அந்த நபருக்கும் ஆதரவாக இதை எழுதவில்லை அல்லது யாரை மனதில் வைத்து இந்த தாக்குதல் அரங்கேறியதோ அவருக்கு எதிராக இதை எழுதவில்லை என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்.
ReplyDelete//சொந்த சரக்கை மட்டும்தான் எழுதவேண்டும் எனில் நீங்கள் உதாரனத்திற்க்கு திருகுறள், ராமாயனம் , etc என எதிலிருந்தும் எடுக்க கூடாது.//
இது தவறான புரிதல்........
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என எழுதப்பட்ட நூல்களுக்கும் சொந்தமாய் யோசித்து மூளையை சோர்வடைய செய்து எழுதிய சொந்த சரக்குக்கும் என்ன வித்தியாசம் என்பதை சகோ நீங்களே சொல்லுங்க. இப்ப திருவள்ளுவர் கிட்ட போயி சார் உங்க அறிவுரைய நா 10 பேருக்கு சொல்றேன்னு சொன்னா அவர் ஒத்துக்குறுவாரு. ஏன்னா பத்து பேர திருத்துறதுல அவரின் நோக்கம். ஆனா முழுக்க முழுக்க வியாபார ரீதியான அல்லது சுயமாய் நானே எழுதி நானே பாரட்டை பெற்று அந்த பாராட்டின் மூலம் கிடைக்கும் ஊக்கம் கொண்டு மேலும் மேலும் வளர துடிக்கும் எனக்கு நஷ்ட்டம் வந்தால்???????????
புக்க வாங்கி படிக்க உங்கனால முடியாத பட்சத்துல எங்க வெப்சைட்ல வந்து பாருங்கன்னு இறங்கி வந்த பிறகு அங்கே போய் படித்து அறிவை வளர்ப்பது தானே சிறந்த நேயம்.
ஏற்கனவே ஒரு வலைபதிவர் எழுதியதை நாமும் மீண்டும் நம் ப்ளாக்கில் போடுவது எப்படி சரியாகும்.
மேலும் நான் காப்பி பேஸ்ட் முழுவதுமாக எதிர்க்கவில்லை. மாறாக
எங்கோ ஒரு தளத்தில் ஒரு சகோதரி போட்ட சமையலை செய்து பார்த்து அந்த ருசி பிடித்து போக அதை அப்படியே அங்கிருந்து வெட்டி என் தளத்தில் ஒட்டி நீங்களும் செய்து பாருங்க என பதிவிடுவதை தவிர்த்து "ஆஹா......ஓஹோ........சமையல் சூப்பர். நீங்களும் செய்து பாருங்க" என லிங்க் கொடுப்பதில் உடன்படுகிறேன். அதுவும் காப்பி பேஸ்ட் இல்லாமல்/ அல்லது முழுவதுமாக பதிவை வெட்டி எடுக்காமல் சில வரிகளை மட்டும் எடுத்து மீதிய அங்கே போய் படிச்சுக்கோங்க என பதிவிடுவது தவறு என்ன இருக்கு? அதையேன் காப்பி பேஸ்ட் பதிவர்கள் செய்யல? அல்லது அந்த பதிவு பிடித்து இருந்தால் நாலேஜ் சேரிங் செய்ய விரும்பினால் அதையே உங்கள் கற்பனைகேற்ப மாற்றி உங்கள் திறமையை புகுத்தி போடுவதில் என்ன கஷ்ட்டம் வந்து விட போகிறது. எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது உண்மை தான். ஆனா படிச்ச ஒரு விஷயத்தை கூட கற்பனைக்கேற்ப மாற்றியமைக்க முடியாத அளவுக்கா நம் திறமை அடைபட்டு கிடக்கிறது??????
//நமது பதிவுக்கு வரும் கமெண்ட்க்கு பதில் கமெண்ட் என்று கமெண்ட் மேல கமெண்ட் போட்டு கமெண்ட் எண்ணிக்கையே அதிகரித்து காட்டுவது சரியா ?//
ReplyDeleteவிவாதம் சார்ந்த பதிவுகளை தவிர்த்து தேவையே இல்லாம மொக்கை போட்டு பின்னூட்டத்தை அதிகரித்து காட்டுவதை நானும் வெறுக்கிறேன்.
சில பதிவுகளை ஆர்வமாய் படித்து அதற்கான வாசகர்களின் கருத்து என்ன என்று அறிய ஆவலாய் வந்தால் எக்கச்சக்கமாய் கமென்ட்ஸ் இருக்கும் ஆனா பதிவின் கருவுக்கும் கமென்ட்க்கும் பொருத்தமில்லாமல்........ கண்கள் சோர்ந்து வெறுப்படைந்து பல பதிவர்களின் பதிவுகளை படித்து பின் போஸ்ட் எ கமென்ட் ஆப்சனை தேடி கமென்ட் போட்டு வந்துடுறேன் மற்றவர்கள் என்ன சொன்னாங்க என்பதை பார்க்காமலேயே...............
(நானும் இத்தகைய தவறு செய்திருந்தால் திருத்தவே முயற்சி செய்கிறேன் :-)
வணக்கம் ராஜா அண்ணே!எனக்கு கடிதம் எழுதினதுக்கு மிக்க நன்றி! நான் பதில் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன்!
ReplyDeleteநண்பர்களே அனைத்தையும் கூறிவிட்டார்கள்! சகோதரி ஆமினா, எனக்கு அறிமுகம் இல்லாவிட்டாலும், அவர் எனக்கு ஆதரவாக கமெண்டுகள் போடவில்லை என்றாலும், அவருக்கு எனது நன்றிகள்!
ஏனைய நண்பர்களுக்கும்தான்!!
சுயமாய் எழுதப்படும் பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்ற தமிழ்மணத்தின் முடிவு பாராட்டுக்குரியதே! இந்த முடிவால் பல மணிநேரங்களை செலவழித்து பல்வேறு தேடல்களுடன் எழுதுபவர்கள் நன்மையடைவார்கள். அதே போல சொந்தமாக எழுதியும், காபி பேஸ்ட் செய்பவர்களும் எந்த விதத்திலும் பாதிக்கபடமாட்டார்கள்.
ReplyDeleteஒரு பதிபவரின் உணர்சிகள்
ReplyDeleteஹா ஹா செம கேள்வி மாப்ஸ் சசிகுமார் இங்கே இந்த சைடுல பாட் பண்ணிட்டு நைசா தமிழ்மனம் போயி 'சார் நான் சசிகுமார் வந்தேமாதரம் வலைப்பூவை நடத்தி வருகிறேன். என்னுடைய பதிவுகள் இரண்டுமுறை திரட்ட படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. காரணம் 5 அல்லது 6 ஓட்டு வந்தவுடன் மறுபடியும் 0 இல் இருந்து ஆரம்பிக்கிறது. இதற்க்கு என்ன காரணமாக இருக்கும்.' கேள்வி போட்ரு. நல்ல வௌவால்யா நீயி
ReplyDeleteகாப்பி பேஸ்ட் போடும்போது, கீழே எழுதியவர்களுக்கு நன்றி போட்டால் போதுமானது என
ReplyDelete'பாலா பட்டரை" ஷங்கரே சொல்லிட்டாருங்கோ...
---
ஏம்பா பாலா பட்டரை சங்கரு இண்டடெல்சுவலு பிராப்பட்டி லாயரா? அந்த டம்மி சொல்லுதாம் இந்த மம்மி கும்முதாம். நல்லா வாயில வருது டோய். மத்தவன் தட்டுல தட்டி தின்னுர திருட்டுபசங்களா