இளைய தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படம் “ துப்பாக்கி”. A.R.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் இது. நண்பன் வெற்றியை தொடர்ந்து இந்த படம் வருவதால் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது . இந்நிலையில் சமிபத்தில் இந்த படத்தின் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது . இதில் விஜய் புகைபிடிப்பது போல இருந்தது . இதை பார்த்ததும் பா .ம .க வின் ரத்தம் கொதித்து இந்த புகைப்படம் வெளியிடக்கூடாது , படத்தில் அந்த காட்சி இருக்க கூடாது என கண்டன அறிக்கைகள் வெளியிட்டது .
என்னை போல சாதாரண ரசிகனுக்கு , சாதாரண குடிமகனுக்கு தோன்றும் சில சந்தேகங்கள்.
- மங்காத்தா படத்தில் பல காட்சியில் அஜித் குடிப்பது போலவும் , புகைபிடிப்பது போலவும் உள்ளது . அந்த படம் வந்த சமயத்தில் பா .ம. க என்னசெய்த்து கொண்டிருந்தது.?
- அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்லி விட்டதால் அவரை எதிர்ப்பது தேவையில்லாதது . அவரால் பா .ம .க ஓட்டு பிரிய வாய்ப்பில்லை என எதிர்க்க வில்லையா ?
- விஜய் ரசிகர்களில் பலர் இளைஜ்ர்கள் . இவர்கள் விஜயின் கட்சிக்கு சென்று விட்டால் ஏற்கனவே ஓடிங்கி போய் இருக்கும் கட்சியின் தொண்டர் எண்ணிக்கை இன்னும் குறையும் என்ற பயமா ?
- விஜய் படங்கள் தவிர சமிபத்தில் வந்த எந்த படத்திலும் யாரும் புகைபிடிக்கவில்லையா ?
- புகைபிடிக்கும் , குடிக்கும் யாரும் பா .ம .க வில் உறுப்பினராக இருக்க கூடாது என சொல்ல தைரியம் உண்டா ? ( அப்படி சொல்லிட்டா தொண்டர்களே இல்லாதே கட்சியா மாறிடும் )
- பல தொலைகாட்சி தொடர்களிலே புகை , மது பயன்படுத்தும் காட்சிகள் வருது அதை எதிர்பதில்லையே ஏன் ?
ஏற்கனவே விஜயகாந்தை சீண்டி விட்டு அவரை எதிர்கட்சி தலைவராக மாற்றி விட்டிர்கள் , இப்ப விஜய், இவரை என்னவாக மாற்ற போகின்றிகள் ?
இதையும் படிக்கலாமே :
விஜய் அஜித் இணைந்து நடிக்க கதைதயார் : அம்புலி 3D பட இயக்குனர்ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டிபகுதி - 2
கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி
"A" - Jokes
Tweet |
அருள் வந்து பதில் சொல்லுவாரு உங்களுக்கு......நடிகர்கள் புகைபிடிப்பது போல் நடிப்பது தவறு என்பது என் கருத்து! அதனால் புகைபிடிக்கும் காட்சி பார்த்தால் பிடிக்கனும் போல தோனுது! நல்லத யார் சொன்னாலும் கேட்டுக்கனும்!
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான் , ஆனால் எதிர்த்தால் அனைவரையும் எதிர்க்க வேண்டும் . மாஸ் ஹீரோவா பார்த்து எதிர்ப்பது ஏன் ?
Deleteஇதுல ஏதே உள்குத்தல் உள் சொரிதல் எல்லாமே இருக்கு என எனக்குத்தோனுது...
ReplyDeleteதலைவா அப்படிலாம் இல்ல ...
Deleteஆஹா இப்பிடியும் பா ம க வரும்மா? யோவ் அந்த கட்சிதான் அட்ரஸ் இல்லாமல் போயிருச்சே ஹா ஹா ஹா ஹா....
ReplyDeleteதம்பி...திண்டிவனம் வழியாத்தானே வருவே ஹே ஹே!
ReplyDeleteநான் பாமக பற்றி பேச வரவில்லை.
ReplyDeleteஆனால், திரைப்படங்களில் புகை பிடிப்பது , மது அருந்துவது போல காட்டுவது என்னைப் பொறுத்தவரையில் தவறு!!
விஜய், அஜித் போன்றவர்களின் ரசிகர்கள் எத்தனையோ பேர் அவர்களது மேனரிசங்களைப் பின்பற்றுகிறனர். இது போன்றவற்றைப் பின்பற்றுவதால், அவர்கள் உடல்நலம் பாதிப்படுகிறது.
தங்கள் ரசிகர்களின் ஆரோக்கியம் மீது அவர்களுக்குக் கொஞ்சமாவது அக்கறை இருக்க வேண்டாமா?
நண்பா நீங்க சினிமாவை சினிமாவாக பாருங்கள், அதேபோல சினிமா ஹீரோக்களை சினிமா ஹீரோக்களா பாருங்கள் ஒரு பிரச்சனையும் வராது.....
Deleteவிஜய் ரசிகர்களில் பலர் இளைஜ்ர்கள்////// இது தவறு நண்பா விஜய்க்கு பெரும்பாலான ரசிகர்கள் பாடசாலை மாணவர்களும்,சிறுவர்களும்,பெண்களும்தான்...................................
ReplyDeleteமங்காத்தா படத்தில் பல காட்சியில் அஜித் குடிப்பது போலவும் , புகைபிடிப்பது போலவும் உள்ளது . அந்த படம் வந்த சமயத்தில் பா .ம. க என்னசெய்த்து கொண்டிருந்தது.?/////////////////// இதுக்கு விஜய் சொன்ன பஞ்தான் ரெம்ப பொருத்தமாக இருக்கு,,, அஜித் ஒருவாட்டி முடிவுபண்ணினா அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்................ (இந்த பஞ் தன்னைவிட அஜித்துக்குதான் அதிகம் பொருந்தும் என்று விஜயே ஒருதடவை சொல்லியிருக்கிறார்.....)
ReplyDeleteThanks Friend
ReplyDeleteநடிகர் விஜய் வாக்குறுதியை மீறுகிறார்:இதோ ஆதாரம்!
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2012/05/blog-post.html
Anbumani mails Ajith
http://www.indiaglitz.com/channels/tamil/article/54077.html
unga kelviyum-
ReplyDeletesarithaan!
ஏதாவது பரபரப்பை எற்படுத்திக்கொண்டிருந்தாத்தானே field-ல நாம இருக்குறது மக்களுக்கு தெரியும் ராஜா சார் ..!
ReplyDeleteபுகழ்பெற்ற மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது.
ReplyDeleteஉலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட "பாலிவுட்: பலியா அல்லது நண்பனா" எனும் ஆய்வில் இந்தியத் திரைப்படங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றன என்பதை தெளிவாக எடுத்துரைத்தது. கூடவே, சிகரெட் நிறுவனங்களிடம் திருட்டுத்தனமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு இக்காட்சிகள் திணிக்கப்படுகின்றன என்பதையும் அந்த ஆய்வு வெளிக்கொண்டுவந்தது.
ReplyDeleteஉலக சுகாதார நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட "புகையில்லா திரைப்படங்கள்: ஆதாரங்களில் இருந்து செயல்பாட்டுக்கு" எனும் நூலில் - திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் பெரும் கேடாக மாறிவிட்டதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது.
ReplyDelete"பாலிவுட் படங்களில் புகையிலை பயன்பாடும், விளம்பரமும், அவற்றால் இந்திய இளைஞர்களின் புகையிலைப் பழக்கமும்" எனும் 2011 ஆம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை, திரைப்படம் பார்க்கும் இந்திய இளைஞர்கள் புகையிலைக்கு அதிகம் அடிமையாவதை நிரூபித்துள்ளது.
ReplyDelete26.03.2012 அன்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "திரைப்படங்கள் மூலம் திணிக்கப்படும் மறைமுக புகையிலை விளம்பரங்கள் சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன". "திரைப்படங்களில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்தாவிட்டால், இந்திய அரசியல் அமைப்பின் 21 ஆம் பிரிவில் உறுதியளிக்கப்பட்டுள்ள குடிமக்களின் உயிர்வாழும் உரிமை பாதிக்கப்படும்", "திரைப்படங்களில் புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்தும் விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.
ReplyDelete"இனி திரைப்படங்களில் புகைபிடிக்க மாட்டேன்" என அவர் 2007 ஆம் ஆண்டில் அளித்த உறுதிமொழியை நடிகர் விஜய் மீறியுள்ளார்.
ReplyDelete2007 ஆம் ஆண்டு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் இனி புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஜய் உறுதியளித்த்தார். இந்த செய்தி 27.11.2007 அன்று தினத்தந்தி, தினகரன், தினமணி நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.
பத்திரிகை செய்திகளை இந்த இணைப்பில் காண்க:
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2012/05/blog-post.html
This comment has been removed by the author.
Delete5. புகைபிடிக்கும் , குடிக்கும் யாரும் பா .ம .க வில் உறுப்பினராக இருக்க கூடாது என சொல்ல தைரியம் உண்டா ? ( அப்படி சொல்லிட்டா தொண்டர்களே இல்லாதே கட்சியா மாறிடும் )
ReplyDelete>>>
நல்ல கேள்வி. ஆனா, பதில் சொல்வார் யார்?