> என் ராஜபாட்டை : காடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்?

.....

.

Tuesday, September 27, 2011

காடுவெட்டி குருவை கோணி பையுடன் அனுப்பினாரா ராமதாஸ்?

      
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற கோஷத்தோடு கிளம்பிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கடப்பாறை விழுங்கிய நிலைக்கு வந்துள்ளார். தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை வலைவீசித் தேட வேண்டிய நிலைக்குச் சென்றுள்ளது அவரது கட்சி.

வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்தான் செல்வாக்கை கொண்டுள்ள பா.ம.க., கடந்த 15 ஆண்டுகளாக தமக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு இருப்பது போன்ற பிரமை ஒன்றை பில்ட் பண்ணி வந்திருந்தது. அதற்குக் காரணம், கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் ஏதோ ஒரு கூட்டணியில் இருந்ததுதான்.ஆனால், 15 வருடங்களாக ஒரே கூட்டணியில் இருந்தால் போர் அடிக்கும் அல்லவா? அதனால், ‘இந்தப் பக்கம் ஒரு தாவல், அந்தப் பக்கம் ஒரு பாய்ச்சல்’ என்ற ஜிம்நாட்டிக்ஸ் வேலைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது. ஒருதடவை தி.மு.க. கூட்டணி, மறுதடவை அ.தி.மு.க. கூட்டணி என்று மாறிமாறி வந்ததில், இவர்களுக்கும் தமிழகம் தழுவிய அளவில் ஏதோ செல்வாக்கு இருப்பது போல தோற்றம் காட்ட முடிந்தது.

பா.ம.கா., பொருத்தமற்ற மாம்பழம் சின்னத்தை உதறிவிட்டு, பொருத்தமாக பென்டூலம் சின்னத்தை பெற்றிருக்கலாம். அந்தளவுக்கு கூச்சமில்லாமல் தாவக்கூடிய கட்சி அது.இப்போது, பா.ம.க. இளவரசருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை யாரும் கொடுக்காத விரக்தியில் திடீரென கடப்பாறையை விழுங்கப்போக, “சரிப்பா.. தனித்தே போட்டியிடுங்க” என்று தி.மு.க., அ.தி.மு.க. என்ற இவர்களது இரு முன்னாள் கூட்டாளிகளும் கழட்டி விட்டுவிட்டார்கள்.
போட்டியிடலாம். அதில் சிக்கல் இல்லை. பாதணிகளை வைத்து அரசாண்ட கதைபோல, இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் மாம்பழத்தையா வேட்பாளராக நிறுத்த முடியும்?

போட்டியிட ஆட்கள், அவசரமாக தேவையாக உள்ளது.வட மாவட்டங்களில் இவர்களுக்கு இன்னமும் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதனால், பதவிக் கனவுகளுடன் போட்டியிட ஆட்கள் முன்வருவார்கள். சேலம், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போதியளவு ஆட்கள் விருப்ப மனு கொடுத்திருப்பதாகத் தெரிகின்றது. மற்றைய மாவட்டங்களில், முக்கியமாக தென் மாவட்டங்களில்தான், மாம்பழம் என்றாலே அலறி ஓடுகிறார்கள். தென்மாவட்டங்களில் சகல இடங்களிலும் போட்டியிட வைக்கத் தேவையான வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கும், விருப்ப மனு கொடுத்துள்ளவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்டாது என்ற நிலையில் மிரண்டு போயுள்ளது கட்சி!

மற்றைய கட்சிகள் தத்தமது பட்டியல்களை வெளியிடத் தொடங்கிவிட்ட நிலையில், இவர்களும் வெளியிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முதல் லிஸ்ட்டை வெளியிடலாம். கொஞ்சம் சேர்ப்பு வேலைகள் செய்தால், இரண்டாவது லிஸ்ட்டையும் ஒப்பேற்றி விடலாம் என்று வைத்துங் கொள்ளுங்களேன்.மூன்றாவது லிஸ்ட்டுக்குத்தான் ஆள் பிடிக்க வேண்டியுள்ளது. 

ஆள்பிடிக்க, காடுவெட்டி குருவை கோணியுடன் அனுப்பவா முடியும்? உங்களிடம் நல்ல ஐடியா ஏதாவது இருந்தால், வைத்தியர் ஐயாவுக்கு கொடுங்கள், பிளீஸ்.

நன்றி : விறுவிறுப்பு.காம்

29 comments:

  1. உங்க ஊர் அரசியல் ஒன்னும் புரியலை பாஸ்..

    ReplyDelete
  2. அண்ணன் இனி பானி பூரித்தான் விக்கணும் போல...நன்றி விறுவிறுப்பு.காம் மற்றும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி மாப்ள !

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அழுகி போன மாம்பழம் சின்னம் இன்னும் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  5. நோ ஐடியா :)

    ReplyDelete
  6. வணக்கம், எல்லா ஓட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  7. //K.s.s.Rajh said...

    உங்க ஊர் அரசியல் ஒன்னும் புரியலை பாஸ்..//


    சேம் ப்ளட் ஹியர்

    ReplyDelete
  8. பெண்டுலம் சின்னம் நல்லா தானே இருக்கு ஹா ஹா ஹா

    ReplyDelete
  9. பேசாம கேரளாவுக்கு போயி ஒரு மந்திரவாதியை கூட்டிட்டு வரசொல்லுங்க ஹி ஹி...

    ReplyDelete
  10. அண்ணாத்தே பாவாம் .....இல்லியா .இந்த எலெக்சன் தான் எல்லோருக்கும்

    ReplyDelete
  11. டாக்டர் ராமதாஸ் நு சொல்றதை விட போலி டாக்டர்னு சொன்னா பொருத்தமா இருக்கும்.... அவுரு மாதிரியே அவுரு கட்சியும் போலிக் கட்சி...
    இதுல வேற இனி எந்த திராவிட கட்சிகளோடவும் கூட்டணி கிடையாதாம்...
    இது எப்டி இருக்குன்னா....
    "டே .. நான் என் பொண்டாட்டியை போட்டு கும்மு கும்முன்னு கும்மப்போறேன்..எவனாச்சும் நடுவுல வந்து தடுத்தீங்கன்னா, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்." நு மெரட்டிட்டு கடைசியில ரூமை சாத்தி பொண்டாட்டி போட்டு கும்முகும்முனு கும்முனாளாம்..
    அப்டி இருக்கு...

    ReplyDelete
  12. இனிய நண்பா,
    கலக்கல் பதிவு .
    சூப்பர் ....
    யானைக்குட்டி

    ReplyDelete
  13. இனிய நண்பா,
    கலக்கல் பதிவு .
    சூப்பர் ....
    யானைக்குட்டி

    ReplyDelete
  14. கலக்கல் பதிவு நண்பா

    ReplyDelete
  15. ஓ... தனியா நிக்கிறதுங்கறது இதுதானா?

    ReplyDelete
  16. நிறைய வருடம் வீணடித்து விட்டார்கள்.

    ReplyDelete
  17. பெண்டுலம் சின்னம்-ஹா ஹா !

    ReplyDelete
  18. அட ஒரு மைனஸ் ஒட்டு!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  19. உங்க ஊர் அரசியல் ஒன்னும் புரியலை பாஸ்..

    ReplyDelete
  20. முக்கியமாக தென் மாவட்டங்களில்தான், மாம்பழம் என்றாலே அலறி ஓடுகிறார்கள்.////தென் மாவட்டங்களில் தானே "மாம்பழம்" அதிகம்?அப்புறம் ஏன் அலறுகிறார்கள்?

    ReplyDelete
  21. ஆள்பிடிக்க,காடுவெட்டி குருவை கோணியுடன் அனுப்பவா முடியும்?///அதானே "மாம்பழம்" வாங்க வேணும்னா கோணிப்பை உதவும்!

    ReplyDelete
  22. அவருடைய கட்சியின் நிலையை முதலில் அவர் தெரிந்து கொள்ளட்டும். அதற்க்கு இந்த தேர்தல் அவருக்கு பெரிதும் உதவும்.

    ReplyDelete
  23. அரசியல் ஆய்வு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  24. பகிர்வுக்கு நன்றி சகோ ஓட்டெல்லாம் போட்டாச்சு ..........

    ReplyDelete
  25. do you have copyrights for this article from விறுவிறுப்பு.காம் ? until we know it well, we have removed this post from tamilmanam. if this sort of posts continue, we may have to remove your blog from tamilmanam aggregation. thank you very much for understanding.

    If tamilmanam sees more cut & paste posts, this bog will be removed from tamilmanam. hope you understand our stand and decision.
    thank you.

    on behalf of tamilmanam
    ramanitharan, k.

    ReplyDelete
  26. // பா.ம.கா., பொருத்தமற்ற மாம்பழம் சின்னத்தை உதறிவிட்டு, பொருத்தமாக பென்டூலம் சின்னத்தை பெற்றிருக்கலாம். அந்தளவுக்கு கூச்சமில்லாமல் தாவக்கூடிய கட்சி அது.. //

    :)))))))))

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...