> என் ராஜபாட்டை : செய்திகள்

.....

.
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Friday, September 14, 2012

சின்ன சின்ன விஷயங்கள் ...


நண்பர்களே உங்களுக்காக சில சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு ...


ஒலிம்பிக்கில் உள்ள மராத்தான் ஓட்டபந்தயத்தின் மொத்த தூரம்

26 மைல்   385 கஜம்


நீருக்குள்ளே குட்டி போடும் பாலினம்

திமிங்கலம் , டால்பின்


தமிழக அரசு சின்னத்தில் உள்ள கோவில்

ஸ்ரீவில்லி புத்தூர் கோபுரம் 


சதுரங்கம் அறிமுகமான நாடு

இங்கிலாந்து ( 1151)


பாரதரத்னா  விருதை முதலில் பெற்றவர்

ராஜாஜி


உலகில் மிக சிறிய குடியேற்ற நாடு
ஜிப்ரால்ட்ர் (பரப்பளவு : 2.5 சதுர மைல்  )


ஆஸ்கர் விருது அறிமிகமான வருடம்

1929


காந்திக்கு கோவில் உள்ள இடம்

கொத்தம் பாளையம் சேலம் 


இட்லியை கண்டுபிடித்தது

கர்நாடகம் 


கண்ணில்லாத உயிரினம்

மண்புழு 


கழுத்தில்லா உயிரினம்

தவளை

மானம் இல்லா உயிரினம்




காங்கிரஸ்



Friday, August 17, 2012

இந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ...





நண்பர்களே கிழே சில செய்திகள் உள்ளன. அவைகளை இதுவரை நீங்கள் கேள்விபட்டு இருக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு செய்தியாவது நீங்கள் படிக்கும் போது அட இது நமக்கு தெரியுமே என தோன்றினால் கூட நான் பதிவு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன் .

  1. மன்புழுவுக்கு கண் இல்லை என்பது தெரியும் ஆனால் அதுக்கு வாயும் கிடையாது தெரியுமா ?

  2. கணினியின் தந்தை சார்லஸ் பாப் பேஜ் என தெரியும் , அவரின் தந்தை பெயர் பேஜ் டி . மரியோ என்பது தெரியுமா ?


  3. ஷேக்ஸ்பியர் பிறந்த நாளும் , இறந்த நாளும் ஒன்றுதான் (23-04-1564/ 23/4/1616) என்பது தெரியும் இதுப்போல புகழ் பெற்றவர்கள் வால்ட் டிசினி மற்றும் சர் . சி .வி ராமன் என்பது தெரியுமா ?


  4. சாம்பல் நிற அணில் சரணாலயம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது எனபது தெரியும் , ஆணில்களுக்காக தனி கோவில் கேரளாவில் உள்ளது எனபது தெரியுமா ?


  5. மனித ரத்தத்தின் நிறம் சிவப்பு என தெரியும் , நத்தையின் ரத்த நிறம் கருப்பு என்பது தெரியுமா ?


  6. கருவுறுதல் நடைபெறாமல் பழங்கள் உருவாகும் முறைக்கு பாரத்தினே கார்பி என்று பெயர் எனபது தெரியும் , இலைகளே இல்லாமல் செடி உருவாக்கும் முறைக்கு லிப்ளினா டிமரப்பா என்று தெரியுமா ?


  7. இந்தியாவின் உயரிய விருது பாரத ரத்னா என்பது தெரியும் , அதை முதலில் பெற்றவர் காமராஜர் எனபது தெரியுமா ?


  8. இதுவரை மேலே படித்தவற்றில் தெரியும் என முடியும் அனைத்தும் உண்மை , ( சிவப்பு வண்ணத்தில் உள்ள  அனைத்தும்) தெரியுமா என முடியும் அனைத்தும் என் கற்பனை என்பது தெரியுமா ?





Saturday, March 10, 2012

கதம்பம்






அன்பு நண்பர்களே ! கதம்பம் என்ற பெயரில் எனக்கு பிடித்த , படித்த , அனுபவித்த சில விஷயங்களை உங்களுடன் பகிரலாம் என உள்ளேன். இனி அடிகடி கதம்பம் வரும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.



யானை தான் தலையில் மண்ணை போட்டுக்கொண்டது :

           உ.பி  தேர்தல் முடிவுகள் பல தலைவர்களுக்கு பாடம் கற்றுத்தந்து உள்ளது. மக்களுக்கு பயன்படாத மக்கள் கவலையை புரிந்து கொள்ளாமல் கோடி கணக்கில் ஆடம்பர செலவு செய்தால் மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள் என மாயாவதி இப்போது உணர்ந்து இருப்பார். இது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். அவரின் சின்னம் யானை. யானைக்கு சிலை வைத்தது ....................(தலைப்பை படியுங்கள்) சமம்.


ஏன் ? ஏன் ?? ஏன் ???

எந்த பேருந்திலும் ஏறினாலும் வயதானவர்கள் , கர்ப்பிணிகள் , குழந்தையுடன் உள்ளவர்கள் ஆண்களிடமே இடம் கேட்பது ஏன் ?

அதிலும் சிலர் காலியாக உள்ள இடத்தை கூட கவனிக்காமல் கொஞ்சம் எழுந்திரிங்கள் என்பது ஏன் ?

கொஞ்சம் இடம் தாரிங்களா என கூட கேட்காமல் தம்பி நீ எழுந்த்துகோ எவர்கள் உட்காரட்டும் என அதிகபிரசன்கிதனமாக சொல்வது ஏன் ?
இப்படி இடம் கேட்கும் பெண்கள் யாரும் ஆண்கள் நின்று கொண்டு வந்தால் இடம் தராமல் வெளியே வேடிக்கை பார்ப்பது ஏன் ?


சமிபத்தில் ரசித்த ஜோக் :

ஒரு கோழி பத்து முட்டை போட்டது அதுல ஒன்பது கோழி முட்டை ஒன்று வாத்து முட்டை எப்படி ?


பதில் : கோழி நடத்தை சரியில்லாதது .



படித்ததில் பிடித்தது :

ஐயா ,
அடுத்த மாதம் நடைபெறும்
நம் , மின் வாரிய
ஆண்டு விழாவிற்கு
ஐம்பது
பெட்ரோமாக்ஸ் லைட் வாங்க
அனுமதி வழங்குமாறு
தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன் ..

நன்றி
TNEB

அதிர்ச்சி :

1992 ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற உலக பூமி உச்சி மாநாட்டின் முசிவு படி தண்ணிரை தனியார் வசம ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி.

# பேசாம இந்தியாவை ஏதாவது தனியார் கம்பெனிக்கிட்ட ஒப்படசிடலாம் .



Saturday, October 8, 2011

தெரியுமா உங்களுக்கு ?





269 வாசாத்தி வழக்கில் குற்றவாளிகள் என நிருபிக்கபட்டவர்கள்.

                19 ஆண்டுகள் வாசாத்தி வழக்கு நடைப்பெற்றது.

70.2 % மக்கள் இன்னும் கிராமங்களில் வாழ்கின்றனர்.

89 % கிராமங்களில் பாதுக்காப்பான குடி நீர் இல்லை.

600 தனி தெலுங்கானா வேண்டி தற்கொலை செய்துகொண்டவர்கள்
எண்ணிக்கை.

156 ஸ்ரீ ரங்கம் கோவில் அமைனந்துள்ள இடத்தின் ஏக்கர் அளவு.


663 -  கோடி முல்லை பெரியாரில் அனைக்கட்ட கேரள அரசு
செய்யும் செலவு.

40   வினாடிக்கு ஒருவர் புகைபிடிப்பதால் இறக்கிறார்.

26 ரூபாய் செலவு செய்தால் அவன் வருமைகோட்டுக்கு கீழ் இல்லை
என்கிறது மத்திய அரசு.

1996 மெட்ராஸ் சென்னை என மாற்ற பட்ட ஆண்டு

1889 பாரீஸ் இல் ஈஃபல் டவர் கட்டப்பட்டது.

104  கபில்தேவ் எழுதிய சுயசரிதையின் பக்கங்கள்.


Tuesday, July 26, 2011

எல்லோரும் வாங்க, ஒரு முக்கியமான விஷயம்

1.தேமுதிகவின் அதிகாரபூர்வ வெப்சைட்டான http://www.dmdkparty.com – ல் தங்களது கட்சியின் 29 சட்ட மன்ற உறுப்பினர்களின் இ – மெயில் முகவரியை வெளியிட்டுள்ளார். இதில் தேமுதிக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் முகவரியும் அடக்கமாகும்.

மெயில் அனுப்ப தெரியாதவங்களுக்கு புறா வழங்க படும் 

======================================================================  


2. தற்போது மீண்டும் சீமானுடன் குடும்பம் நடத்தியதற்காக ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் விஜயலட்சுமி.

வீடியோ ஆதாரம் எதாவது உண்டா ? ( சி .பி )

 =====================================================================
3. உங்களை பணம் கேட்டு சிலர் மிரட்டியதாக முன்பு ஒருமுறை கூறியிருந்தீர்களே, அது யார் என்று இப்போது சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இல்லை, நான் உங்களிடம் சொல்ல முடியாது. யார் யார் மிரட்டினார்கள் என்பதை நான் கமிஷனரிடம் சொல்லியிருக்கிறேன் என்றார் ரஞ்சிதா.

படமே பாத்துடோம் ஆளு யார்னு சொல்லாடி என்ன கவலை

=======================================================================
4. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார்.

அங்கேயும் சூரியனுக்கு பிரச்சனையா ?
========================================================================

5. ராங்நம்பர் உருவாக்கிய காதல்: எதிர்ப்பை மீறி திருமணத்தில் முடிந்தது

ராங் நம்பர் தான் ஆனா ராங் நபர் இல்ல .. வாழ்த்துகள்
=======================================================================

6. நில மோசடி: 2 அதிமுகவினருக்கு கல்தா- ஜெயலலிதா அதிரடி


அம்மானா சும்மாவா ?
 
டிஸ்கி : தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்க கூடாதாம் . அதான் இப்டி ..