ஆஸ்திரேலியாவில் இந்து கடவுள்களை அவமதிப்பது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் பெண் கடவுள் லட்சுமியின் படத்தை நீச்சல் உடையில் பொறித்து சிட்னியில் நடந்த பேஷன் ஷோவில் உலா விட்டனர். அதற்கு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய பின் மன்னிப்பு கேட்கப்பட்டது. இந்நிலையில் விநாயகரை அவமதித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் வருகிற 29-ந்தேதி திருவிழா நடக்கிறது.
இதை தொடர்ந்து அங்குள்ள ஒரு நிறுவனம் ஒரு காமெடி நாடகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதில், இந்து கடவுள் விநாயகரை கேலி கிண்டல் செய்து காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது விநாயகரை கைது செய்யும் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி உளவுத்துறை அவரிடம் விசாரணை நடத்தி துன்புறுத்துவது போன்ற கதை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரபரப்பு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த இந்து பிரமுகர் ராஜன்சேத் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். விநாயகர் உலகம் முழுவதும் வாழும் இந்துக்களின் கடவுள். அவரை ஹிட்டலரின் நாஜி உளவுத்துறை விசாரணை நடத்துவது போன்று கற்பனை செய்து பார்ப்பது கற்பனைக்கும் எட்டாதது. விநாயகரை கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபட வேண்டுமே தவிர மேடையில் ஏற்றி கேலி செய்து சிரிக்ககூடாது.
அவர் ஒரு கேலி பொருள் அல்ல. இந்துக்களால் வணங்கப்படும் கடவுள் என தெரிவித்துள்ளார். இது குறித்து நாடக தயாரிப்பாளர் ஆலிஷ் நாஷ், இந்துக்களை அவமதிப்பது எங்கள் நோக்கம் அல்ல. மக்களை மகிழ்விப்பதற்காக தான் இந்த நாடகத்தை நடத்துகிறோம். அந்த காட்சிகளை மிகவும் கவனத்துடன் கையாள இருக்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.
நன்றி : KINGTAMIL.Com
Tweet |
என்னது மக்களை மகிழ்விப்பதற்க்கு இந்து கடவுள்த்தான் கிடைத்தார்களா?என்ன இது கொடுமை
ReplyDeleteஇப்பவாவது முதல்ல வர விட்டீங்களே
ReplyDeleteகவன ஈர்ப்பு பெறும் பகிர்வு.
ReplyDelete@வைரை சதிஷ்welcome
ReplyDeleteபத்த வச்சுட்டீங்களா? என்ன நடக்குதுன்னே பாக்காம கூடி கும்மி அடிங்க
ReplyDeleteஇது தான் இனவெறியின் அடையாளமோ?
ReplyDeleteenna kodumai
ReplyDeleteசில கிராக்குங்க இதுவே வேலையா இருக்கும் போல
ReplyDeleteஆண்களே ,பெண்களே : நீங்கள் "அந்த" விசயத்தில் கில்லாடி ஆகணுமா?
அவங்களுக்கு இந்துவை அல்ல இந்தியாவை கேலி செய்ய வேண்டும்.அதுக்கு பிள்ளையார் மாட்டிக்கிட்டார்!பாவம்!
ReplyDeleteஅட புதுசா இருக்கே..
ReplyDeleteஇந்தியனையும் இந்தியாவையும் தாக்குவதே அனைத்து அயல் நாடுகளின் வேலையாக உள்ளது. இழிச்சவாயி இந்திய அரசாங்கம் ஒரு அறிக்கை கொடுத்டுவிட்டு வாயை மூடிக்கொள்ளும்.
ReplyDeleteஎல்லாருக்கும் விளையாட கடவுள் ஏம்பா கிடைக்கிறார்?
ReplyDeleteஅவர் தான் மௌனியா இருந்து எது சொன்னாலும் எதிர்த்து பேசமாட்டார் என்பதற்காகவா??
காமெடி-யா ஒரு வரம்புக்குள் இருந்தால்
ReplyDeleteரசிக்கலாம் ....
அப்பிடியா.....???
ReplyDeleteஎன்ன கொடுமை
ReplyDeleteஅட கொடுமையே
ReplyDeleteஇதென்ன புது கலாட்டா?
ReplyDeleteமதங்களை கொச்சைப் படுத்துவது அறிவுடைமையல்லவே....
ReplyDeleteகரூர மனம் படைத்தவர்களால்தான் அதெல்லாம் செய்ய முடிகிறது....
சரி ஓகே... ரெண்டு பேரும் மாறி மாறி டவுசரை கிழிச்சுக்கோங்க...
ReplyDeleteஇந்த செய்தியை கடந்த வாரமே தினமலர் & திணமனி ஆகிய பத்திரிக்கையில் வந்து நான் படித்துவிட்டேன். இருந்தாலும் நம் பதிவாளார்கள் யாராவது அதைப் பற்றி கருத்து சொல்லுவார்களா என்று எதிர்பார்த்தேன். உங்கள் பதிவு மூலம் கருத்து சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம் ஆஸ்திரேலியாகாரன் பண்ணினால் அது அவமதிப்பு நாம் அது போல பண்ணினால் அது நகைச்சுவை என்ன கொடுமையாட.... நாம் பார்க்கும் சினிமாக்களில் கடவுளை வைத்து பண்ணாத நகைச்சுவைகளா அல்லது தீபாவளி பண்டிகைகளில் வெடிக்கும் வெடிகளில் இல்லாத கடவுள் படங்களா இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஆஸ்திரேலியாவில் நடத்தப்போகும் ஒரு நாடக்திற்கு அதை பார்க்காத ஒரு அமெரிக்க ஆள் சொன்னதை வைச்சு வேடிக்கை ஆரம்பித்து இருக்கிறது இந்த மீடியா
அந்த நாடக ஆசிரியர் மிக தெளிவாக கூறியுள்ளார் இந்த நாடகம் இந்து மக்களை பாதிக்காத படி மிக கவனதுடன் கையாளப் பட்டு இருக்கிறது என்று. அதனால் இந்த விஷயத்தை ஊதி பெருசாக்காமல் இருக்க நம் பதிவாளர்களை கேட்டு கொள்கிறேன்
மாப்ள ஒரு வேலை இதுவும் கடவுளின் திருவிளையாடலோ!
ReplyDeleteஇவ்விடுகைக்கான முறையான உரிமத்தை KINGTAMIL.Com இலிருந்து பெற்றிருக்கின்றீர்களா?
ReplyDeleteமேலும் சொந்தமாக ஒரு கருத்துமின்றி, பிற தளங்களிலிருந்து ஒத்தி ஒட்டுவதாலேமட்டும் ஆகும் பதிவுகளைத் தமிழ்மணம் எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்கவிரும்பவில்லை. அதனாலே, இவ்விடுகை தமிழ்மணம் திரட்டலிருந்து நீக்கப்படுகின்றது. இப்படியான நிலை தொடருமானால், உங்கள் பதிவும் இதுபோன்ற பிறபதிவுகளும் தமிழ்மணத்திலிருந்து முற்றாகவே நீக்கப்படும்.
தொடர்ச்சியான புரிதலுக்கு நன்றி.