> என் ராஜபாட்டை : பெண்கள் எல்லாம் தெய்வமா?

.....

.

Tuesday, September 13, 2011

பெண்கள் எல்லாம் தெய்வமா?




உணர்ந்தறிதல்


வெருண்டு உருண்டு
கண்கள் மருண்டு

காற்றும் நீருமாய்
நாசி நடுநடுங்க..

காது விரைக்கக்
கழுத்து அதிர்ந்து..

கால்கள் துவண்டு
கன்னங்கள் கிட்டித்து..

உடம்பு கிடுகிடுக்க
உள்ளுக்குள் வெடிவெடிக்க..

பெருமுச்சுக் குவியலில்
உயிர்முச்சுக் கலகலத்து..

இதுவரை கேட்டறியா
விதங்களில் கதறலிட்டு

முன்னுடம்பு குறுக்கி
பின்னுடம்பு பிதுக்கி

பூமிப்பந்தை ஒரு நிமிடம்
புதிதாகப் பிறக்கவிட்டு..

கன்று ஈன்று நாக்கிட்ட
காராம் பசு பார்த்து,
உடலெல்லாம் சிர்ப்போடி
உள்ளம் வியர்த்து
நின்றேன்

வீட்டில்

கர்ப்பிணியாய்

மனைவி !

(மனிதனுக்கு ஒரு பிறவிதான் ஆனால் பிரசவத்தின் பொழுது மறுபிறவி எடுக்கும் எல்லா பெண்களும் தெய்வம்தான்)


டிஸ்கி 1: இது கடந்த வாரம் ஆனந்தவிகடனில் ராஜ திருமகன் என்பவர்
            எழுதிய கவிதை.

டிஸ்கி 2: என் மனைவியின் வளைகாப்பிற்க்கு வந்தவர் கையில் இருந்த
            விகடனில் படித்தது.

டிஸ்கி 3: இது பிடிக்க என்ன காரணம் என சொல்லிதெரியவேண்டியதில்லை.


நாளை :
நமது பதிவை காப்பி செய்யாமல் தடுப்பது எப்படி ?
( இப்ப என் பதிவை   காப்பி பண்ணி பாருங்க )

 ====================================================

நேற்று :
என்ன நடக்குது நம்ம பதிவுலகில் ?

31 comments:

  1. இன்ய காலை வணக்கம் பாஸ்,
    தாய்மையின் உணர்வுதனைச் சொல்லும் கவிதை அருமை.

    ReplyDelete
  2. பசுவின் கன்று ஈணும் சம்பவத்தினை விடத் தாயானவள் ஒரு குழந்தையினைப் பெற்றெடுக்கும் செயல் எவ்வளவு கடினமானது என்பதனை இக் கவிதை சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  3. நல்ல கவிதை,
    ராஜா திருமகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. நல்ல செய்தி வாழ்த்துக்கள்.
    //பூமிப்பந்தை ஒரு நிமிடம் புதிதாய் பிறக்கவிட்டு//
    அருமை.
    பெண்களை தெய்வமாக போற்றும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள்.
    நன்றி பகிவுக்கு.

    ReplyDelete
  6. நிதர்சனம்...நன்றி மாப்ள!

    ReplyDelete
  7. Vazhthukkal.......
    Ellam nallapadiyaga nadakkum !!!

    ReplyDelete
  8. சுகப்பிரசவமாய் அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. தமிழ் மணம் ஆறு

    ReplyDelete
  10. வெண்ணை தின்கிறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத்தானா? அது எப்பிடி வீட்டுல இருக்குறப்ப பொண்டாட்டிய மதிக்கிறது கூட இல்ல வெளிய வேற எதையாவது பார்க்கும் போது பொண்டாட்டி ஞாபகம் வருதோ?

    அப்பயாவது வருதேன்னு சந்தோசப்படுங்கன்னு நீங்க சொல்லுறது காதுல விழுகுது.. ஹா ஹா ஹா

    நான் கூட அந்த கவிதையை படிச்சேன் (விகடன்ல) கவிதையை விட அது பக்கத்தில இருந்த படம் ஆயிரம் கவிதைக்கு சமம்..

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. பெண் தெய்வத்தை விட மேலானவர்
    இராமாநுசம்

    ReplyDelete
  13. தாய்மையின் புனிதத்தை சொல்லும் அழகான கவிதை

    ReplyDelete
  14. நல்ல பகிர்வு..

    உண்மைதான் நண்பா.

    ReplyDelete
  15. எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  16. மிக சிறப்பான பதிவு உண்மையில் ஆட்டுகல் நன்றி . அடுத்த உங்களின் இடுக்கைக்காக கத்திருப்போரில் நானும்....

    ReplyDelete
  17. நல்லா இருக்குங்க

    ReplyDelete
  18. நாளைய நாளை எதர்பார்த்து ...
    இன்றைய பதிவு அசத்தல்

    ReplyDelete
  19. பெண்கள் எல்லாம் தெய்வமா?



    உணர்ந்தறிதல்


    வெருண்டு உருண்டு
    கண்கள் மருண்டு

    காற்றும் நீருமாய்
    நாசி நடுநடுங்க..

    காது விரைக்கக்
    கழுத்து அதிர்ந்து..

    கால்கள் துவண்டு
    கன்னங்கள் கிட்டித்து..

    உடம்பு கிடுகிடுக்க
    உள்ளுக்குள் வெடிவெடிக்க..

    பெருமுச்சுக் குவியலில்
    உயிர்முச்சுக் கலகலத்து..

    இதுவரை கேட்டறியா
    விதங்களில் கதறலிட்டு…

    முன்னுடம்பு குறுக்கி
    பின்னுடம்பு பிதுக்கி…

    பூமிப்பந்தை ஒரு நிமிடம்
    புதிதாகப் பிறக்கவிட்டு..

    கன்று ஈன்று நாக்கிட்ட
    காராம் பசு பார்த்து,
    உடலெல்லாம் சிர்ப்போடி
    உள்ளம் வியர்த்து
    நின்றேன்

    வீட்டில்

    கர்ப்பிணியாய்

    மனைவி !

    (மனிதனுக்கு ஒரு பிறவிதான் ஆனால் பிரசவத்தின் பொழுது மறுபிறவி எடுக்கும் எல்லா பெண்களும் தெய்வம்தான்)


    டிஸ்கி 1: இது கடந்த வாரம் ஆனந்தவிகடனில் ராஜ திருமகன் என்பவர்
    எழுதிய கவிதை.

    டிஸ்கி 2: என் மனைவியின் வளைகாப்பிற்க்கு வந்தவர் கையில் இருந்த
    விகடனில் படித்தது.

    டிஸ்கி 3: இது பிடிக்க என்ன காரணம் என சொல்லிதெரியவேண்டியதில்லை.


    நாளை :
    நமது பதிவை காப்பி செய்யாமல் தடுப்பது எப்படி ?
    ( இப்ப என் பதிவை காப்பி பண்ணி பாருங்க )

    ReplyDelete
  20. உணர்வு மிக்க கவிதை.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் குட்டி ராஜா எப்ப வருவான்

    ReplyDelete
  22. உணர்வான கவிதை..,
    எழுதிய நண்பருக்கு என் வாழ்த்துகள்..
    பகிர்ந்த உங்களுக்கும் நன்றி..

    வாழ்த்துகள்.. நண்பரே...

    ReplyDelete
  23. வாழ்த்துகள் கவிதை super

    ReplyDelete
  24. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே...
    பிரசவிக்கையில் அனைத்து பெண்களும்
    தெய்வம்தான்.

    ReplyDelete
  25. பகிர்வுக்கும் வரப்போகும் குட்டிப்பூவிற்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  26. ராஜா,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...