அன்பு நண்பர்களே ! கதம்பம் என்ற பெயரில் எனக்கு பிடித்த , படித்த , அனுபவித்த சில விஷயங்களை உங்களுடன் பகிரலாம் என உள்ளேன். இனி அடிகடி கதம்பம் வரும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.
யானை தான் தலையில் மண்ணை போட்டுக்கொண்டது :
உ.பி தேர்தல் முடிவுகள் பல தலைவர்களுக்கு பாடம் கற்றுத்தந்து உள்ளது. மக்களுக்கு பயன்படாத மக்கள் கவலையை புரிந்து கொள்ளாமல் கோடி கணக்கில் ஆடம்பர செலவு செய்தால் மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள் என மாயாவதி இப்போது உணர்ந்து இருப்பார். இது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். அவரின் சின்னம் யானை. யானைக்கு சிலை வைத்தது ....................(தலைப்பை படியுங்கள்) சமம்.
ஏன் ? ஏன் ?? ஏன் ???
எந்த பேருந்திலும் ஏறினாலும் வயதானவர்கள் , கர்ப்பிணிகள் , குழந்தையுடன் உள்ளவர்கள் ஆண்களிடமே இடம் கேட்பது ஏன் ?
அதிலும் சிலர் காலியாக உள்ள இடத்தை கூட கவனிக்காமல் கொஞ்சம் எழுந்திரிங்கள் என்பது ஏன் ?
கொஞ்சம் இடம் தாரிங்களா என கூட கேட்காமல் “தம்பி நீ எழுந்த்துகோ எவர்கள் உட்காரட்டும் “ என அதிகபிரசன்கிதனமாக சொல்வது ஏன் ?
இப்படி இடம் கேட்கும் பெண்கள் யாரும் ஆண்கள் நின்று கொண்டு வந்தால் இடம் தராமல் வெளியே வேடிக்கை பார்ப்பது ஏன் ?
சமிபத்தில் ரசித்த ஜோக் :
ஒரு கோழி பத்து முட்டை போட்டது அதுல ஒன்பது கோழி முட்டை ஒன்று வாத்து முட்டை எப்படி ?
பதில் : கோழி நடத்தை சரியில்லாதது .
படித்ததில் பிடித்தது :
ஐயா ,
அடுத்த மாதம் நடைபெறும்
நம் , மின் வாரிய
ஆண்டு விழாவிற்கு
ஐம்பது
“பெட்ரோமாக்ஸ்” லைட் வாங்க
அனுமதி வழங்குமாறு
தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன் ..
நன்றி
TNEB
அதிர்ச்சி :
1992 ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற உலக பூமி உச்சி மாநாட்டின் முசிவு படி தண்ணிரை தனியார் வசம ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி.
# பேசாம இந்தியாவை ஏதாவது தனியார் கம்பெனிக்கிட்ட ஒப்படசிடலாம் .





