அன்பு நண்பர்களே ! கதம்பம் என்ற பெயரில் எனக்கு பிடித்த , படித்த , அனுபவித்த சில விஷயங்களை உங்களுடன் பகிரலாம் என உள்ளேன். இனி அடிகடி கதம்பம் வரும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.
யானை தான் தலையில் மண்ணை போட்டுக்கொண்டது :
உ.பி தேர்தல் முடிவுகள் பல தலைவர்களுக்கு பாடம் கற்றுத்தந்து உள்ளது. மக்களுக்கு பயன்படாத மக்கள் கவலையை புரிந்து கொள்ளாமல் கோடி கணக்கில் ஆடம்பர செலவு செய்தால் மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள் என மாயாவதி இப்போது உணர்ந்து இருப்பார். இது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தும். அவரின் சின்னம் யானை. யானைக்கு சிலை வைத்தது ....................(தலைப்பை படியுங்கள்) சமம்.
ஏன் ? ஏன் ?? ஏன் ???
எந்த பேருந்திலும் ஏறினாலும் வயதானவர்கள் , கர்ப்பிணிகள் , குழந்தையுடன் உள்ளவர்கள் ஆண்களிடமே இடம் கேட்பது ஏன் ?
அதிலும் சிலர் காலியாக உள்ள இடத்தை கூட கவனிக்காமல் கொஞ்சம் எழுந்திரிங்கள் என்பது ஏன் ?
கொஞ்சம் இடம் தாரிங்களா என கூட கேட்காமல் “தம்பி நீ எழுந்த்துகோ எவர்கள் உட்காரட்டும் “ என அதிகபிரசன்கிதனமாக சொல்வது ஏன் ?
இப்படி இடம் கேட்கும் பெண்கள் யாரும் ஆண்கள் நின்று கொண்டு வந்தால் இடம் தராமல் வெளியே வேடிக்கை பார்ப்பது ஏன் ?
சமிபத்தில் ரசித்த ஜோக் :
ஒரு கோழி பத்து முட்டை போட்டது அதுல ஒன்பது கோழி முட்டை ஒன்று வாத்து முட்டை எப்படி ?
பதில் : கோழி நடத்தை சரியில்லாதது .
படித்ததில் பிடித்தது :
ஐயா ,
அடுத்த மாதம் நடைபெறும்
நம் , மின் வாரிய
ஆண்டு விழாவிற்கு
ஐம்பது
“பெட்ரோமாக்ஸ்” லைட் வாங்க
அனுமதி வழங்குமாறு
தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன் ..
நன்றி
TNEB
அதிர்ச்சி :
1992 ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற உலக பூமி உச்சி மாநாட்டின் முசிவு படி தண்ணிரை தனியார் வசம ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி.
# பேசாம இந்தியாவை ஏதாவது தனியார் கம்பெனிக்கிட்ட ஒப்படசிடலாம் .
Tweet |
கதம்பம்.. அசத்தல்...
ReplyDeleteநல்லா இருக்கு...
ReplyDelete:)))
கதம்பம் நல்லாவே இருக்கு. ஆண்கள் இரக்க சுபாவம் அதிகம் உள்ளவர்கள்ன்னு இடம் கேட்கிறவர்களுக்குத் தெரிஞ்சிருக்கு போல...!
ReplyDeleteகதம்பம் தலைப்பிற்கு ஏற்றார்போல மிக மிக அருமை
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
கதம்பம் தலைப்பிற்கு ஏற்றார்போல மிக மிக அருமை
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
அதிர்ச்சி தண்ணீரை தனியார் வசம் ஒப்படைப்பது......ஐயா ராசா அந்த படம் எங்க ஊர் கொடிவேரி அணை பீதிய கிளப்பாதிங்க...!
ReplyDeleteதஞ்சாவூர்க் கதம்பம்
ReplyDeleteகதம்பம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
ReplyDeleteகதம்பம் அருமை நண்பரே. அதிலும் ரெண்டாவது மேட்டர் ரொம்பநாளா எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு
ReplyDeleteகதம்பம் மிக அருமை
ReplyDeleteபெண்களை காட்டிலும் பெண்மையை மதிப்பது ஆண்கள்தான் இதற்க்கு இரண்டாவது கதம்பம் உதாரணம்...!
ReplyDeleteஅட சூப்பருங்க. நாங்க இனி தவறாம கதம்ப மணம் சுவாசிக் வந்துடுவோம்ல. அப்புறம் சகோ. பஸ்ல இந்த இடம் மேட்டரு அப்படியே நான் கேக்க நினைச்ச கேள்வி. அசத்தல்.
ReplyDeleteநல்லா இருக்கு சார்... தொடருங்க...
ReplyDeleteமணக்குதுங்க
ReplyDeleteகதம்பம் கலர்ஃபுல்லா இருக்குதுங்கோ
ReplyDeleteபஸ்ல போய் ரொம்ப நொந்த்டுட்டீங்களா சகோ?
ReplyDeleteபெட்ரோமாக்ஸ்” லைட்டே வேணுமா?இந்த பந்தம் எல்லாம் யூஸ் பண்ண மாட்டாங்களானா
ReplyDeleteகதம்பம் நன்றாகவுள்ளது நண்பா..
ReplyDelete