> என் ராஜபாட்டை : மென்பொருள்

.....

.
Showing posts with label மென்பொருள். Show all posts
Showing posts with label மென்பொருள். Show all posts

Friday, December 13, 2013

அனைத்து மென்பொருளையும் ஒரே கிளிக்கில் UPDATE செய்ய வேண்டுமா ?


நாம் நமது கணினியில் பலவகையான மென்பொருள்களை பயன்படுத்தி வருகிறோம் . அவைகளை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் . அதாவதுUPDATE செய்ய வேண்டும் . அப்படி செய்யும்  போதுதான் அந்த மென்பொருளின் தற்போதைய புதிய வசதிகளை நாம் பயன்படுத்த முடியும் . 

உதாரணமாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நாம் எடுத்துகொள்ளலாம் . தினமும் பலவகையான புது புது வைரஸ் வந்துகொண்டே இருக்கிறது . இவற்றை எதிர்க்க வேண்டுமானால் நமது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் அடிக்கடி UPDATE செய்து புதிதாகக இருக்க வேண்டும் .

கணினியில் உள்ள ஒவ்வொரு மென்பொருளாக UPDATE செய்ய அதிக நேரம் பிடிக்கும் . இதற்க்கு மாற்றாக ஒரு தளம் உள்ளது இதில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து (99%) மென்பொருளையும் UPDATE செய்துகொள்ளமுடியும் .
அந்த தளம் தான் . http://ninite.com.


முதலில் இந்த தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள் .


கிழே உள்ளது போல ஒரு விண்டோ வரும் .


அதில் உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தெரிவு செய்யவும் .








GET INSTALLER  என்ற பட்டனை கிளிக் செய்யவும் .

உங்கள் மென்பொருள்கள் தானாக UPDATE ஆகும் .


நன்மைகள் :

  • ஒரே கிளிக்கில் அனைத்து மென்பொருளையும்  UPDATE செய்யலாம் .

  • நேரம் மிச்சம் .

  • ஏற்கனவே  UPDATE ஆக இருந்தால் தானாக விட்டுவிடும் .

  • வைரஸ் பிரச்சனை இல்லை .

  • இதுக்கு தனியாக டூல் பார் தேவை இல்லை .

  • எது சிறந்த VERSION என அதுவே தெரிவு செய்து கொள்ளும் .


டிஸ்கி :  பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .

Tuesday, September 24, 2013

உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்கள்


கணினி பயன்படுத்தும் நமக்கு பல மென்பொருள்கள் தேவைப்படும் . நாம் நமது கணினியில் நிறைய மென்பொருள்கள் சேமித்து அல்லது பதிந்து வைத்திருப்போம் . அனைத்தும் அனைத்து நேரமும் பயன்படாது . சில மென்பொருள்கள் நமது கணினியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் . அப்படி உங்கள்

Friday, March 9, 2012

உங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்பொருள்கள்- இலவசமாக (FILE RECOVER SOFTWARES)

 


நான் கணினியில் எண்ணற்ற கோப்புகள் , படங்கள் , பாடல்கள் , தகவல்கள் சேமித்து வைத்திருப்போம். நாம் இல்லாத நேரத்தில் யாராவது தவறுதலாக அந்த கோப்புகளை அழித்துவிட்டாலோ அல்லது நாமே வேண்டாம் என அழித்த கோப்பு மீண்டும் தேவைப்பட்டாலோ அவற்றை மீட்டு எடுக்க உதவ சில மென்பொருள்கள் உள்ளன. இன்று நாம் பார்க்க போவது அதுபோல பயன்படும் ஒரு மென்பொருள் தான்.


இது ஒரு எளிய மென்பொருள். பயன்படுத்துவதும் எளிது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும் .

இது ஒரு பிரபலமான மென்பொருள். பயன்படுத்துவதும் எளிது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்

3.    Recuva64
இது ஒரு மேற்கண்ட மென்பொருளின் வேறு பதிப்பு. இதுவும் பயன்படுத்துவதும் எளிது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்.


இது ஒரு மிக சிறந்த மென்பொருள். உங்களுக்கு தேவையான பைல்களை மட்டும் மீட்டு எடுக்கும் வசதி உள்ளது. இதனால் தேவையில்லாத கோப்புகளை தவிர்த்து தேவையான கோப்புகளை மட்டும் தேடலாம். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்

இத பதிவு பிடித்திருந்தால் facebook, G+ , Twitter இல் ஷேர் பண்ணவும்.