> என் ராஜபாட்டை : அனைத்து மென்பொருளையும் ஒரே கிளிக்கில் UPDATE செய்ய வேண்டுமா ?

.....

.

Friday, December 13, 2013

அனைத்து மென்பொருளையும் ஒரே கிளிக்கில் UPDATE செய்ய வேண்டுமா ?


நாம் நமது கணினியில் பலவகையான மென்பொருள்களை பயன்படுத்தி வருகிறோம் . அவைகளை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் . அதாவதுUPDATE செய்ய வேண்டும் . அப்படி செய்யும்  போதுதான் அந்த மென்பொருளின் தற்போதைய புதிய வசதிகளை நாம் பயன்படுத்த முடியும் . 

உதாரணமாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை நாம் எடுத்துகொள்ளலாம் . தினமும் பலவகையான புது புது வைரஸ் வந்துகொண்டே இருக்கிறது . இவற்றை எதிர்க்க வேண்டுமானால் நமது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் அடிக்கடி UPDATE செய்து புதிதாகக இருக்க வேண்டும் .

கணினியில் உள்ள ஒவ்வொரு மென்பொருளாக UPDATE செய்ய அதிக நேரம் பிடிக்கும் . இதற்க்கு மாற்றாக ஒரு தளம் உள்ளது இதில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து (99%) மென்பொருளையும் UPDATE செய்துகொள்ளமுடியும் .
அந்த தளம் தான் . http://ninite.com.


முதலில் இந்த தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள் .


கிழே உள்ளது போல ஒரு விண்டோ வரும் .


அதில் உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தெரிவு செய்யவும் .








GET INSTALLER  என்ற பட்டனை கிளிக் செய்யவும் .

உங்கள் மென்பொருள்கள் தானாக UPDATE ஆகும் .


நன்மைகள் :

  • ஒரே கிளிக்கில் அனைத்து மென்பொருளையும்  UPDATE செய்யலாம் .

  • நேரம் மிச்சம் .

  • ஏற்கனவே  UPDATE ஆக இருந்தால் தானாக விட்டுவிடும் .

  • வைரஸ் பிரச்சனை இல்லை .

  • இதுக்கு தனியாக டூல் பார் தேவை இல்லை .

  • எது சிறந்த VERSION என அதுவே தெரிவு செய்து கொள்ளும் .


டிஸ்கி :  பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .

5 comments:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...