> என் ராஜபாட்டை : வினவு

.....

.
Showing posts with label வினவு. Show all posts
Showing posts with label வினவு. Show all posts

Tuesday, November 29, 2011

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்





சமிபத்தில் திரு பத்ரி அவர்களின் நடிகர் அஜித்பற்றி ஒரு பதிவை நான் பிரசுரம் செய்திருந்தேன். அந்த பதிவை பற்றியும் , பதிவர்கள் பற்றியும் மிகவும் மட்டகரமாக வினவு தளம் ஒரு கட்டுரை எழுதியுள்ளது. அதில் இருந்து சில பகுதிகளும், சில கேள்விகளும்.


//பத்ரியின் இந்த பதிவை 42 பதிவர்கள் லைக்கியிருக்க, 21 பதிவர்கள் பகிர்ந்து பாராட்டியிருக்கிறார்கள். பத்ரியின் வலைப்பதிவிலும் தனது உணர்ச்சிகளை பதிவு செய்திருக்கின்றனர். கருவளையத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் அந்த மூகப்பூச்சுக் கலைஞர் ஈடுபடும் போது பேசிய உரையாடல் இந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்று தோற்கடிக்க முடியாதவன் என இப்பதிவுக்கு பெயரிட்ட பத்ரிக்கு தெரியாமல் இருந்திருக்காது. ஆனாலும் இதற்காகவே தன்னை சினிமா ப்ரியன், தலயின் ரசிகன் என்று அஜித்தின் இரசிகர்கள் நம்புவது உண்மையில்லையென சற்று வெட்கத்துடன் என்றாலும் வெளிப்படையாகவே மறுக்கிறார் பத்ரி. என்ன இருந்தாலும் இரசிகர்கள் எனப்படுவோர் பெஞ்ச் டிக்கெட் வர்க்கம்தானே? ஒரு சினிமா நடிகனின் இரசிகன் என்ற அடையாளத்தை நமது அறிஞர் பெருமக்கள் மலிவாகவே கருதுவதை தவறு என்று சொல்ல முடியாதில்லையா? //


வினவுவில் இந்த கட்டுரையை எழுதியவர் கட்டில் ரகமா?( பெஞ்ச்!!) ரசிகனை இழிவுபடுத்த இவருக்கு என்ன உரிமை உள்ளது?


// ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமது ஊதியம் அதாவது தினசரி பேட்டா உயர்த்தப்படாத நிலையில் போராடப் போவதாக பெப்சி அதாவது தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் அறிவித்திருந்ததை எத்தனை பேர் அறிவீர்கள்?
//

எங்க ஊருல பஸ் ஸ்டாண்ட் சரியில்ல அது உங்களுக்கு தெரியுமா? உலகில் உள்ள அனைத்து பிரசனையும் ஒருவர் அறிந்து வைத்திருக்க வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். எனக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியாது, உங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியாது..

// தொழிலாளர்களின் சம்பளத்தை நியாயமாக உயர்த்தாமல் நான் நடிக்கமாட்டேன் என்று தலயோ, தளபதியோ, உலக நாயகனோ, சூப்பரோ பேசினார்களா? இல்லை அவர்கள் ஏன் பேசவில்லை என்று பதிவுலகம்தான் துள்ளிக் குதித்ததா?
//

இது லூசுதனமான வாதம். இப்ப பஸ் கட்டணம் உயர்ந்ததுக்கு ஏன் நீங்கள் சாகும்வரை உண்ணாவிருதம் இருக்ககூடாது?

// அந்த சினிமா உலகில் சில கோடிகளை சம்பளமாக வாங்கும் அஜித் இல்லையா? அவரும் அதற்கு காரணமில்லையா? கேட்டால் அதற்கு அவர் என்ன செய்வார், அதெல்லாம் தயாரிப்பாளரது பிரச்சினை என்று நமது புத்திசாலி பதிவர்கள் கேட்பார்கள்.
//

உங்களிடம் வேலைபார்பவர்களுக்கு நீங்கள் ஏன் சம்பளம் தருகிறிர்கள்? திறமைக்கும், மார்கெட்க்கும்தான் மரியாதை. உங்களுக்கு வரும் அளவு என் வலைக்கு பார்வையாளர்கள் ஏன் வருவதில்லை எது நியாயமா என நான் கேட்டால் அது எவ்வளவு கேனதனமான இருக்குமோ அதுபோல இருக்கு உங்கள் கேள்வி.

// படைப்பாளிகளான முதலாளிகளின் யோக்கியதையை தோலுரித்து ரூ.2 விலையில் ஒரு சிறு வெளியீடு கொண்டு வந்து கிட்டத்தட்ட 10,000 பிரதிகள் தொழிலாளிகளிடம் விற்பனை செய்யப்பட்டன (வினவிலும் விரைவில் வெளியிடுகிறோம்). கூட்டம் முடிந்ததும் துணை நடிகைகள், ஏனைய தொழிலாளர்கள், பெப்சி நிர்வாகிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்ததும் நினைவுக்கு வருகிறது.
//

ஏன் புத்தகத்தை இலவசமாக அளிக்கவேண்டியதுதானே? ஒரு 2 ரூபாய் புத்தகத்தை இலவசமாக தர துப்பில்லை, 190 ரூபாய் பிரியானி போட்டவரை குற்றம் சொல்ல வெட்கமா இல்லை.

// தமிழ் சினிமா நட்சத்திரங்களின் வள்ளல் கதைகள் குறித்து எம்.ஜி.ஆர் தொட்டு விஜயகாந்த் வரை ஏராளமுண்டு. ராமாவரம் தோட்டத்தில் புரட்சித் தலைவர் போடாத விருந்தா, சாப்பிடாத ஆட்களா? விஜயகாந்த் கொடுக்காத அயர்னிங் மிஷினா, மூன்று சக்கர வண்டியா? இல்லை அகரம் பவுண்டேஷனுக்கு அழைத்தால் ஸ்விட்சுடு ஆஃப் (ஆதாரம் அண்ணன் உண்மைத் தமிழன்) என்று வந்தாலும் சூர்யாவின் வள்ளல்தனத்தை வியக்காத பதிவர்களா? எழுதாத பத்திரிகையாளர்களா? யாரிடம் கதை விடுகிறீர்கள்?
//

அண்ணே நீங்க தினமும் 100 பேருக்கு நல்ல உணவும், வருடா வருடம் 100 குழந்தைக்கு படிப்பு செலவையும் செய்ரிங்களா? நீங்களே நன்கொடை தாருங்கள் என பிச்சை எடுக்குறிங்க, இதுல நல்லது செய்றவங்களை கிண்டல் பண்ணுறிங்க.

// ஆனால் தொழிலாளிகள் கூட என்றாவது ஒரு நாள் திருந்துவார்கள். ஆனானப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கிக் குளித்த அமெரிக்க மக்களே திருந்தவில்லையா என்ன? அதே நேரம் பத்ரியோ இல்லை பதிவர்களோ இந்த மட்டன் பிரியாணி மனிதாபிமானத்திலிருந்து திருந்துவார்கள் என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறதா? தெரியவில்லை!//

நாங்க திருந்துறது இருக்கட்டும், நீங்கள் எப்ப திருந்த போறிங்க?
அடுத்தவங்களை குறைமட்டுமே சொல்லுவது ஒரு சைக்கோ குணம். முடிந்தால் நல்லது செய்யுங்கள் , நல்லது செய்வோறை பாரட்ட கற்றுகொள்ளுங்கள். இல்லை மூடிகிட்டு சும்மா இருங்க.

டிஸ்கி: அந்த பதிவின் Link
டிஸ்கி 2: பதிவுலகில் யாரிடமும் சண்டை போடகூடாது என நினைத்தேன். நம் பதிவர்களை மட்டமாக பேசியதை பார்த்து கோவம் வந்துவிட்டது.