நண்பர்களே பதிவிற்குள் போகும் முன் உங்கள் கருத்தை (VOTE)SIDE இல் உள்ள ஓட்டு படையில் செலுத்தவும் .
விஸ்வருபம் படத்தை பற்றிதான்கடந்த இரண்டு நாளாக இணையத்திலும் , வெளியிலும் அதிகம் விவாதிக்கபடுகிறது . முஸ்லிம் நண்பர்கள் இந்த படம் தங்களை , தங்கள் மதத்தை கேவலபடுத்துகிறது எனவும் அதனால் இதை தடை செய்தது சரி எனவும் வாதிடுகிறனர் .
மற்றவர்கள் (பல முஸ்லிம் நண்பர்களையும் சேர்த்து ) இந்த படத்துக்கு தடை விதிப்பது சரியல்ல . இது கருத்து சுததிரகுத்தை பறிப்பது எனவும் அதனால் இதை தடை செய்தது தவறு எனவும் கூறுகின்றனர் .
பொதுவான சிலர்( படத்தை பார்த்து விட்டு) இதில் முஸ்லிம் நண்பர்கள் ஆட்சேபம் செய்யும் அளவுக்கு ஒன்றும் இல்லை என சொல்கின்றனர் . படம் அருமை அல்லது மொக்கை என சொல்லும் நண்பர்கள் இதில் அடக்கம் .
படம் எடுக்க எத்தனையோ கதை இருக்க இதை என் எடுக்க வேண்டும் என சிலரும் , தாலிபானை தடை செய்ய சொல்லி போராடாமல் படத்தை தடை செய்ய சொல்வது நியாயமா என கேட்கின்றனர் .
எனது ( நமது ) வருத்தம் எல்லாம் நண்பர்களாக , அண்ணன் தம்பியாக பழகிய நாம் ஒரு படத்தால் எதிர் எதிர் துருவமாக மாறுவது வருத்தமாக உள்ளது . படம் சாதரணமாக வந்திருந்தாள் இவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்காது . பார்ப்போம் நாளை கோர்ட் என்ன சொல்கிறது என்று .

