> என் ராஜபாட்டை : function

.....

.
Showing posts with label function. Show all posts
Showing posts with label function. Show all posts

Wednesday, August 22, 2012

தேவதையை கரம்பிடித்து இரண்டு வருடம் ஓடிவிட்டதா !!!




22-08-2010 அன்று தான் அந்த சம்பவம் நடந்தது. ஆம் இந்த அப்பாவியின் பிரமசாரி பட்டம் தொலைந்து சம்சாரி ஆனா நாள் அது. என் அழகான தேவதையை திருச்சியில் கண்டுபிடித்தேன். அங்குதான் அவர் கரம் பிடித்தேன் .

இந்த இரண்டு வருடத்தில் இதுவரை நாங்கள் சண்டையே போட்டதில்லை .(வீட்டு செலவு , விசேஷத்திற்கு துணி எடுப்பது , உறவினர் இல்லத்திற்கு செல்வது , குடும்பத்தில் முக்கிய முடிவை எடுப்பது போன்ற சின்ன விஷயத்தை எல்லாம் அவள் பார்த்து கொள்ளுவாள் . இந்தியா பாகிஸ்தான் பிரச்னை , ஈழ பிரச்னை , விக்கிலிக்ஸ் பிரச்னை போன்ற பெரிய விஷயங்களை நான் பார்த்துகொள்ளுவேன்)


என்னை மாற்றினாள் :

சரியான நேரத்தில் உணவு , செல்லும் இடத்திற்கு ஏற்ப உடை அணியும் பழக்கத்தை கற்றுகொடுத்தாள் .

வீட்டுக்கு தேவையானதை செய்ய கற்றுகொடுத்தாள் .

செலவு செய்தால் அதை குறித்து வைத்துக்கொள்ள , அதில் எது வீண் செலவு என கண்டுபிடிக்க கற்றுகொடுத்தாள் .

பதிவுகளை எழுதி முடித்தபின் அதை திருத்தும் , வாசிக்கும் பழக்கத்தையும் , பிழைகளை திருத்தவும் கற்றுகொடுத்தாள் .

வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை வாசலில் செருப்புடன் விட்டு விட்டு வர வேண்டும் என கற்றுகொடுத்தாள் .

நான் ஊருக்கு தான் ஆசிரியர் அவள் தான் எனக்கு  ஆசிரியர் .


இந்த ஜென்மம் மற்றும் அல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரவேண்டும் இந்த உறவு ..


உங்கள் வாழ்த்துகளை எதிர்நோக்கும் ..

K.ராஜா சக்தி பிரியதர்ஷினி
செல்வன் R.S.சரண்