2010 ஆகஸ்டு இல் இதே நாளில் தான் அந்தசம்பவம் நடந்தது . எனது வாழ்க்கையையே புரட்டிபோட்ட நிகழ்ச்சி அது . அதுதான் என்னை நானே உணரவைத்த நிகழ்ச்சி . என்னையும் இந்த உலகில் ஒரு பெரிய மனிதனாக மாற்றிய நிகழ்வு நடந்த நாள் இன்று .
என்னடா ஓவரா பில்டப் குடுக்குரானே ஏதாவது விருது கிருது வாங்க்கிய நாளா அல்லது ஏதாவது சாதனை செய்த நாளா என என்னிகின்றிர்களா ? ஆம் ஒரு அருமையான விருது கிடைத்த நாள் தான் . என்ன விருது தெரியுமா ?? சக்தி பிரியதர்ஷினி என்ற என் தேவதை கிடைத்த நாள் இன்று .
ஆம் இன்றுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டது . நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாங்கள் எல்லா வளமும் பெற உங்கள் வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் தேவை . நான் நன்றாக இருக்கவேண்டும் என நினைப்பதில் பெரும் பங்கு என் நண்பர்களாகிய உங்களுக்கு உண்டு அதான் உங்களிடம் வாழ்த்துக்கள் கேட்கிறேன் .
வாழ்த்துங்கள் வளர்கிறேன் ...
என் அப்பா அம்மாவை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி :



