> என் ராஜபாட்டை

.....

.

Thursday, May 22, 2014

ஓவியன்







சில நாட்களுக்கு முன் பக்கத்துவீட்டு பையன் ஒரு பெண் டிரைவ் எடுத்துவந்து அதில் உள்ள சில ஓவியங்களை காட்டினான் . பார்த்தவுடன் அசந்துபோய்விட்டேன் . அவ்வளவு அழகான ஓவியங்கள் . எளிமையான அதே சமயம் அழனான பென்சில் ஓவியங்கள் . அந்த ஓவியரின் பெயர் கோபி . சென்னை ஓவிய கல்லூரியில் படித்துவருகிறார் .உங்கள் பார்வைக்கு அவரின் சில ஓவியங்கள் .













































இதை வரைந்த அழகிய கரங்கள் இவருடையதுதான் ...


இவரின் முகநூல் பக்கம் :GOPI OVN

Wednesday, May 14, 2014

ON-LINE இல் பொருட்கள் வாங்க சிறந்த தளங்கள்








               இப்போது பலர் ஆன் லையனில் பொருட்கள் வாங்குவதை விருப்பமாக கொண்டுள்ளனர் . காரணம் அலைச்சல் மிச்சம் , பலவகையான பொருகளை பார்த்துவான்கலாம் . நாம் விரும்பும் நேரத்தில் ஆடர் செய்யலாம் . பணத்தை செலுத்த பலவழிகள் உள்ளது என பல நன்மைகள் உள்ளது . எனவே ஆன் லையில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது . அப்படி வாங்க பலதளங்கள் உள்ளது அவற்றில் சிலவற்றை பார்ப்போம் .


AMAZON.IN


                  இப்போது மிகவும் பிரபலமாகிவரும் தளம் இது . இதில் இல்லாத பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு அனைத்துவகை பொருட்களும் கிடைகிறது .

நன்மைகள் :
  
  •    CASH ON DELIVERY (COD) வசதி இதில் உண்டு . நீங்கள் விரும்பிய பொருளை பெற்ற பின் பணத்தை கொடுத்தால் போதும் . இதனால் பணத்தை கட்டி ஏமாறும் கஷ்டம் இல்லை .
  • எப்பொழுது வேண்டுமானாலும் ஆடரை கேன்சல் செய்யலாம் . உங்களுக்கு பார்சல் கையில் வந்த பின்பு வேண்டாம் என கூட திருப்பி அனுப்பலாம் .
  • பார்சல் இப்போது எந்த இடத்தில் உள்ளது என அறிந்துகொள்ளும் வசதி .
  • SMS, E-MAIL மூலம் உங்கள் பொருள் இப்போது எங்கு உள்ளது என தகவல் வரும் .
  • 24 மணி நேர கஷ்டமர் கேர் உதவி .

இந்த தளம் செல்ல :   AMAZON.IN




TRADUS.COM


               அடுத்த பாதுகாப்பான , பெரிய ஆன் லைன் ஷாப்பிங் தளம் இது . இங்கு அனைத்து வகை மொபைல் , புத்தகம் , பெண்களுக்கான உடைகள் , குழந்தைகளுக்கான பொருட்கள் கிடைக்கும் .

நன்மைகள் :

  •  குறைந்த விலையில் பொருட்கள் .
  • ஆன் பெண் என பிரித்து தேடலாம் .
  • பயமில்லாமல் கிரடிட் கார்ட் பயன்படுத்தலாம் .

 இந்த தளம் செல்ல :  TRADUS.COM




SHOPCLUES.COM


           இதில் மொத்தமாகவும் , சில்லறையாகவும் பொருட்கள் வாங்கும் வசதியுள்ளது . சில பொருட்கள் மற்ற தளங்களைவிட மிக குறைவான விலையில் கிடைகிறது . இந்த தளத்தை போய் பாருங்கள் .

நன்மைகள் :

  •  சண்டே ஸ்பெஷல் என ஒரு ஆபர் சண்டே அன்று மட்டும் தருகிறார்கள் . பல பொருள்களின் விலைகள் அதிரடியாக குறைக்கபட்டு இருக்கும் .
  • அதிக பட்ச தள்ளுபடி உள்ளது 
  • விரைவான சேவை .

இந்த தளம் செல்ல : SHOPCLUES.COM


 
EBAY.COM


              மிகவும் பழமையான , அதிக மக்கள் பயன்படுத்தும் தளம் இது . மிகவும் நம்பிக்கையான தளம் இது . இதன் சேவை மிக விரைவானது மற்றும் பாதுகாப்பானது .


இந்த தளம் செல்ல : EBAY.COM




FLIPKART.COM



       தற்பொழுது முன்னிலையில் உள்ள ஆன் லையன் விற்பனையகம் இது . இங்கு இல்லாத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு பொருட்களும் , சலுகைகளும் கொட்டிக்கிடக்கிறது .

நன்மைகள் :

  • அப்ளிடேட் என்ற முறை மூலம் நீங்கள் உருப்பிணாரக் சேர்ந்து உங்கள் மூலம் யாராவது பொருள் வாங்கினால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும் .
  • விரைவான சேவை .
  • COD முறை உண்டு .
 
இந்த தளம் செல்ல : FLIPKART.COM


 



இது போல பலதள ங்கள் உள்ளது விரைவில் அவற்றையும் பார்ப்போம் .

Wednesday, May 7, 2014

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்திற்கு ....







வரும் வெள்ளிகிழமை (9-5-14) அன்று பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வெளிவருகிறது . முடிவுகள் அனைவருக்கும் நல்லதாக அமைய வாழ்த்துக்கள் . அப்படி அமையாவிட்டால் என்ன செய்யவேண்டும் என சில வார்த்தைகள் .

பெற்றோர்களுக்கு :


  • மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை , அதையும் தாண்டி வாழ்கை உள்ளதுன்னு குழந்தைகளுக்கு புரியவையுங்கள் .

  • இந்த மார்க் வச்சு மாடுதான் மேய்க்கலாம்னு கிண்டல் செய்யாதிர்கள் , குறைந்த மார்க் எடுத்த பலர் இன்று முதலாளிகளாகவும் , அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் அவர்களுடன் வேலையாளாகவும் இருக்கிறார்கள் .

  • தோல்வியடைந்த குழந்தைகளை திட்டாதிர்கள் , பின்பு அவர்கள் தவறான முடிவு எடுத்தபின் வருந்திபயனில்லை .

  • அடுத்து என்ன படிக்க வைக்க வேண்டும் என்பதை அவர்களுடன் பேசுங்கள் . உங்களுக்கு விருப்பமானதை அவர்கள் மீது திணிக்காதீர்கள் .

  • எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நான் காலேஜ் சீட் வாங்கிதரேன்னு சொல்லாதிங்க .

  • அவன் விரும்பும் படிப்பை தெரிவுசெய்ய அனுமதியுங்கள் ஆனால் ஈன அந்த படிப்பை தெரிவு செய்தார் என தெளிவாக கேளுங்கள் . சும்மா நண்பர்களுக்காக தெரிவு செய்தால் ஏற்றுகொள்ளாதிர்கள் .

மாணவர்களுக்கு :


  • மதிப்பெண் குறைந்தால் நாம் படிக்காமல் செய்த தவறுக்கு தண்டனை என நேனைத்துகொள்ளுங்கள் .

  • எக்காரணம் கொண்டும் தவறான முடிவு எடுக்காதீர்கள் . மார்ச் போனால் மே எழுதலாம் ஆனால் உயிர் போனால் ...?

  • அடுத்து என்ன படிக்கலாம் என பெற்றோருடன் கலந்தாலோசியுங்கள் . உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள் .

  • நண்பர்கள் சேருகிறார்கள் என எந்த படிப்பிலும் சேராதீர்கள் , அந்த படிப்பு வாய்புகள் நெறைந்ததா என பார்த்து சேருங்கள் .

  • இதுவரை படித்தது வேறுமாதிரி இனி படிப்பு வேற மாதிரி என்பதை உணர்ந்து படியுங்கள் .

  • நல்ல காலேஜ் , நல்ல படிப்பை தெரிவி செய்யுங்கள் .

  • உங்கள் சீனியர் மாணவர்கள் , ஆசிரியர் கருத்துகளை கேட்டு படிப்பை தெரிவு செய்யுங்கள் .

தேர்வு முடிவுகளை பார்க்க :

·       www.dge1.tn.nic.in

·       www.dge2.tn.nic.in

·       www.dge3.tn.nic.in

·       www.tnresults.nic.in

ANDROID மொபைல்லில் பார்க்க :


SMS மூலம் அறிந்துகொள்ள :

TNBOARD REG.NO , DOB IN DD/MM/YYYY
TO 09282232585

இந்த வசதி 9 தேதி காலை 10 மணிக்குதான் கிடைக்கும் .











Monday, May 5, 2014

ANDROID மொபைலில் இருக்க வேண்டிய சில முக்கியமான APPLICATIONS – பகுதி ???









ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள்  எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது . அதுபோலவே அதில் பயன்படுத்த கூடிய நிரல்கள் (அப்ளிகேஷன் ) எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது . லட்சகணக்கான அப்ளிகேஷன்களில் நமக்கு எதுதேவை என கண்டறிந்து எடுப்பதே பெரிய வேலைதான் . இந்த பதிவில் சில முக்கியமான அப்ளிகேஷன்கள் பற்றி உங்களுக்காக ...


    

      இது IPL சீசன் , கிரிகெட் ஆட்டங்களை நேரில் பார்க்கவும் , அல்லது ரன் பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் உதவும் அப்ளிகேஷன் இது . நிறைய அப்ளிகேஷன்கள் இதுபோல இருந்தாலும் இதில் பல விஷயங்கள் உள்ளது . ஆட்டோ ரெப்ரெஷ் , ஹைலைட் என பல உள்ளது .





2.     LADOOO



        இது மற்ற அப்ப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்ய உதவும் . இதில் முக்கியவசதி நீங்கள் தரவிறக்கம் செய்யும் அப்ளிகேஷங்களுக்கு உங்களுக்கு இது பணம் தரும் . குறைந்தது 10 ரூபாய் வந்ததும் நீங்கள் உங்கள் என்னிருக்கு ரீ-சார்ஜ்  செய்துகொள்ளமுடியும் . அப்ளிகேஷனும் தரவிரக்கியது போல ஆச்சு , பணமும் சம்பாதித்தது போல ஆச்சு .

இதுக்கான ரெபரல் கோடு : 1686961149


 
3.    APPSAVER


       இது நீங்கள் உங்கள் போனில் வைத்திருக்கும் அனைத்து அப்ளிகேஷனையும் பேக்கப் எடுத்துவைத்துகொள்ளும் . தேவையில்லை என அழித்த அப்ளிகேஷனை மீண்டும் இன்ஸ்டால் செய்ய நீங்கள் GOOGLE PLAY செல்ல வேண்டாம் . இதில் இருந்தே எடுத்துக்கொள்ளலாம் .

 
4.     INDIA AGAINST  SPAM


நீங்கள் உங்கள் போனை DND யில் பதிவு செய்திருந்தால் (தேவையில்லாத கால் , SMS வேண்டாம் என்று ) அப்படி செய்த பின்பும் ஏதேனும் என்னில் இருந்து விளம்பரங்கள் வந்தால் அந்த என்னை பற்றி புகார் செய்ய உதவும் அப்ளிகேஷன் இது . தொந்தரவு தரும் அழைப்புகளை நிறுத்த உதவும் அருமையான அப்ளிகேஷன் இது .

 


ஏற்கனவே பலருக்கு தெரிந்த அப்ளிகேஷன் இது . பல மொழிகளில் வெளிவரும் தினசரி பத்திர்க்கைகளை படிக்க உதவும் அப்ளிகேஷன் இது . இப்பொது புதிதாக E-BOOKS என்னும் சேவையை அறிமுகபடுத்தி உள்ளனர் . முதல் முறை நீங்கள் வாங்கும் புத்தகம் 1 ரூபாய்க்கு அளிக்கப்படும் . இங்கு பல இ புக் கிடைகிறது . உங்கள் போன் பேலன்சில் இருந்தே பணம் அளிக்கும் வசதியும் உண்டு .

 
குறிப்பு : இவையனைத்தும் GOOGLE PLAY STORE இல் இலவசமாக கிடைக்கும் .



Wednesday, April 30, 2014

"தல" தினம்






நாளை மே 1 உழைப்பாளர் தினம் ஆனால் பல லட்ச ரசிகர்களுக்கு அது தல தினம் . ஆம் கோடானகோடி ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள தல என்கின்ற அஜித்குமாரின் பிறந்தநாள் அன்றுதான் . ஏன் இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் ? இவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்கள் கொடுத்ததில்லை ஆனாலும் ரசிகர் கூட்டம் குறையவில்லை ஏன் ?



  •  ரசிகர் மன்றங்களை கலைத்தபின்பும்  ரசிகர்கள் இவர்பின்னே தான் இருக்கிறார்கள் .

  • இவர் முன்னேற இவர் குடும்பத்தில் உள்ள யாரும் முக்கியபங்கு (அதாவது திரையுலகில் ) ஆற்றவில்லை .
  • சாதாரண மெக்கானிக்காக இருந்தவர் இந்த அளவு முன்னேற காரணம் உழைப்பு என்பதை தன ரசிகர்களுக்கு புரியவைத்தவர் .
  • சினிமா உலகில் விமானம் ஓட்ட உரிமம் வைத்துள்ள ஒரே நடிகர் .
  • சினிமா மட்டும் இன்றி கார் பந்தயத்தில் கலக்குபவர் . நாலு அடி உயரத்தில் இருந்துவிழுத்தால் ஏதாவது ஆகிவிடும் என டுப் போடும் நடிகர்களுக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து கார் ஓட்டியவர் .
  • செய்த உதவிகளை ஊர் முழுவதும் தம்பட்டம் அடிக்காதவர் . பலருக்கு இவர்தான் உதவி செய்தார் என்பதே தெரியாது .
  • தன்னை அளட்சியபடுத்திய நபர்களுக்கு , அவர்கள் கஷ்டகாலத்தில் உதவி செய்து அவர்களை அரவணைத்தவர் . உதாரணம் : கொவ்தம் மெனேன் .
  • ஆங்கில நடிகர்கள் உண்மையான கெட்டப்பில் நடிக்கும் போது நாம் மட்டும் ஏன் மேக்கப் போடவேண்டும் என சொல்லி வெள்ளை தலையுடன் நடிக்கிறார் .
  • தான் ஒரு பிரபலம் என்பதை பயன்படுத்தி எந்த சலுகையும் பெற விரும்பாதவர் . 
  • தமிழகத்தில் சரியாக வருமானவரிகட்டும் நடிகர்களில் கமலுக்கு அடுத்து அஜித்தான் .
  • தன் படத்தின் எந்த புரோமோஷன் விழாவிலும் கலந்துகொள்ளமாட்டார் . படத்தை பற்றி மக்கள்தான் பேசவேண்டும் , நாமே பேசகூடாது என்பதில் உறுதியாக உள்ளார் .


அஜித்தின் சன்  டிவி பேட்டி :