> என் ராஜபாட்டை

.....

.

Wednesday, May 4, 2011

வெங்காயத்தின் உதவியுடன் ஐபாட்களை சார்ஜ் செய்யலாம்

ஒன்னும் தெரியாதவர்களை வெங்காயம் என ஏளனம் செய்வதுண்டு. ஆனால் அந்த வெங்காயத்தின் மகத்துவம் ஏராளம். வைத்தியத்திற்கு மட்டும்தான் என நினைத்து விடாதீர்கள் எம் தொழில்நுட்ப தேவைக்கும் உதவ வந்து விட்டது வெங்காயம். ஆம் நமது ஐ.பாட்களை இந்த வெங்காயத்தின் மூலம் சார்ஜ் செய்யலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
 
எப்படி என கேட்கிறீர்களா? தேவையானதை எடுத்துக்கொள்ளுங்கள் 1 பெரிய வெங்காயம் 2 ஏதாவது ஒரு சத்து பானம் 3 திருப்புலி ஜ.பாட் மற்றும் அதனை வெங்காயத்தோடு இனைக்கும் ஒயர். இது எல்லாவற்றையம் எடுத்த பின்னர் வீடியோவில் காட்டப்படுவது போன்று செய்து 30 நிமிடங்கள் வரை சார்ஜ் செய்யுங்கள்

Thanks : Kingtamil.com

Tuesday, May 3, 2011

ஊட்டி


எனது பள்ளி மாணவர்களுடன் கடந்த வாரம் ஊட்டி சுற்றுலா சென்றோம் . இனிமையான பயணம் . ஒருநாள் ஊட்டி மறுநாள் கருப்பு இடி  அதான் Black Thunder .ஒரு நாள் முழுவதும் தண்ணிரில்(குளிக்கிற தண்ணிதான் ) மிதந்தது ஜாலி யா இருந்தது .














இதுல எல்லா போடோவிலையும் நான் இருப்பேன்

செவ்வாய் கிரகத்தில் உங்கள் பெயரை எழுத வேண்டுமா ?

தலைப்பை பார்த்தவுடன் என்னடா ஏதோ நம்ம தூத்துக்குடிக்கு அனுப்பறத போல அசால்டா சொல்றானேன்னு நினைக்க வேண்டாம் இது உண்மை தான். அமெரிக்காவின் நாசா அடுத்த ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு செயற்கைகோள் அனுப்ப இருக்கிறார்கள். அதில் உள்ள மைக்ரோசிப்பில் நம்முடைய பெயரையும் இணைத்து அனுப்பவதற்கு ஏற்பாடு செய்து உள்ளனர்.
இது வரை இதில் 9 லட்சத்திற்கு மேல் அவர்களின் பெயர்களை இணைத்து உள்ளனர். இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 4000 நபர்கள் தங்களின் பெயர்களை இணைத்து உள்ளனர். நாம தான் போக முடியாது நம்முடைய பெயராவது போகட்டுமே.

இதில் நீங்கள் பங்கு கொண்டதற்கு ஆதாரமாக உங்களுக்கு ஒரு எண்ணும் மற்றும் உங்கள் பெயர் பொருந்திய சான்றிதழும் வழங்குகின்றனர்.

சரி நம்ம பேர அனுப்புவோமா அதற்கு முதலில் Send Your Name to Mars இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு ஒரு  விண்டோ வரும்.
அதில் நான்கு கட்டங்கள் கொடுக்க பட்டிருக்கும் அதை பூர்த்தி செய்து கீழே உள்ள Submit என்ற அழுத்தவும்.


அவ்வளவு தான் உங்களுடைய பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்று விட்டது இதற்கு சான்றாக உங்களுக்கு ஒரு சான்றிதழ் தருவார்கள் மேலே வட்டமிட்டுள்ள View and print என்ற லிங்க் அழுத்தி உங்கள் சான்றிதழ் பெற்று கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் என்ன சந்தோசமா நீங்க போனா என்ன உங்க பெயர் போனா என்ன எல்லாமே ஒண்ணு தான்.(நான் குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயரையும் இணைத்து விட்டேன்) இதுவும் ஒருவித சந்தோஷம் தானே.

Monday, May 2, 2011

மின்வெட்டிற்கு ஒரு அளவில்லையா?

''மின்வெட்டு என்பது தமிழ்நாட்டில் மாத்திரம் நிலவக்கூடிய ஒன்றல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதே நிலைதான் இன்றளவும் நீடித்து வருகிறது. கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தை அதிகச் செலவானாலும் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் முயற்சி செய்தாலும்கூட, அந்த முயற்சியில் முழு அளவுக்கு வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு காரணம் வேறு மாநிலங்களிலும் உபரி மின்சாரம் இல்லை என்பதுதான்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நே‌ற்று ‌வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து கையோடு, கட‌ந்த மாத‌ம் 21ஆ‌ம் தே‌தி த‌மிழக‌த்‌தி‌ல் ‌மி‌ன்வெ‌ட்டு நேர‌த்தை அ‌திக‌ரி‌‌க்க‌ப்படுவதாக ‌மி‌ன்சார வா‌ரிய‌ம் அ‌திரடியாக உ‌த்தர‌வி‌ட்டது. வீடுகளு‌க்‌கான பக‌ல் நேர ‌மி‌ன்வெ‌ட்டு 2 ம‌ணி நேர‌த்‌தி‌ல் இரு‌ந்து 3 ம‌ணி நேரமாக அ‌றி‌‌வி‌த்தது. ஆனா‌ல் அதுவரை மின்வெட்டு அறிவிக்கப்படாத செ‌ன்னை மாநக‌ரி‌ல் ஒரு ம‌ணி நேர‌ம் மி‌ன்வெ‌‌ட்டு இரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் கூ‌‌றியது.

பல மா‌நில‌த்‌திலு‌ம் ‌மி‌ன்சார‌ம் ப‌ற்றா‌க்குறையாக இரு‌ப்பதா‌ல் போதுமான ‌மி‌ன்சார‌ம் த‌மிழக‌த்‌திற‌்கு பெ‌ற‌ முடிய‌வி‌ல்லை எ‌ன்று காரண‌ம் கூறு‌ம் ‌மி‌ன்சார வா‌‌ரிய‌ம், நாளொ‌ன்று 50 கோடி‌க்கு ‌மி‌ன்சார‌ம் வா‌ங்‌கியு‌ம் ‌நிலைமையை ச‌ரி செ‌ய்ய முடிய‌வி‌ல்லை எ‌ன்று கூ‌றியிருந்தது.

செ‌ன்னை‌யை எடு‌‌த்து‌க் கொ‌ண்டா‌ல் த‌ற்போது காலை 8 ம‌ணிக்குத் தொடங்கி பகுதி வாரியாக ஒரு மணி நேர ‌மி‌ன்வெ‌ட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனா‌ல் அறிவித்தப்படி, ஒரு மணி நேர மின்வெட்டு என்றில்லாமல், அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது. இது 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடம் வரை நீட்டிக்கிறது. த‌ற்போது வெ‌யி‌‌ல் ம‌க்களை வா‌ட்டி வதை‌க்கு‌ம் இ‌ந்த நேர‌த்‌தி‌ல் ‌மி‌ன்வெ‌ட்டினா‌‌ல் கடுமையாக பா‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர் பொது ம‌க்க‌‌ள்.

பக‌ல் நேர‌ங்க‌ளி‌ல் கூட ‌மி‌ன்வெ‌ட்டை சமா‌ளி‌த்து ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌‌ளியே வ‌ந்து ம‌‌க்க‌ள் கா‌ற்று வா‌ங்‌கி‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் இரவு நேர‌ங்க‌ளி‌ல் அ‌தி‌ல் ந‌ள்‌ளிர‌வி‌ல் ‌ஏ‌ற்படு‌ம் மி‌ன்வெ‌ட்டை ம‌க்களா‌ல் சமா‌ளி‌க்க முடிய‌வி‌ல்லை. ‌‌த‌மி‌ழ்நாடு ‌மி‌ன்சார வா‌ரிய‌ம் அ‌றி‌வி‌த்த நா‌ளி‌ல் இருந்து ஒரு அறிவிக்கப்படாத மின்வெட்டு ந‌ள்‌ளிரவு நேரங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குழ‌ந்தைகளுட‌ன் ‌வீ‌ட்டி‌ல் தூ‌ங்கு‌ம் தா‌ய்மா‌ர்க‌ள் ந‌ள்‌ளிரவு 12 ம‌ணி‌க்கெ‌ல்லா‌ம் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியே வர முடியுமா? அ‌ப்படியே ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியே வ‌ந்தாலு‌ம் கொசு‌க்க‌ளி‌ன் தொ‌ல்லை, ‌பூ‌ச்‌சிக‌ளி‌ன் தொ‌ல்லை. இ‌ப்படி ஒ‌வ்வொரு நாளு‌ம் ம‌க்க‌‌‌ள் நரக வேதனை‌யை அனுப‌வி‌த்து வ‌ரு‌கி‌ன்றன‌‌ர்.

வீடு அனலாக இரு‌‌ப்பதா‌ல் வெ‌ளி‌‌‌யி‌ல் வ‌ந்து மொ‌ட்டை மாடி‌யி‌ல் படி‌த்து தூ‌ங்கு‌ம் ம‌க்களு‌க்கு ‌நி‌‌ம்ம‌தி ‌கிடையாது. ‌அ‌ந்த அளவு‌க்கு ‌திரு‌ட்டு பய‌ம். செ‌ன்னையை பொறு‌த்தவரை கோடை கால‌ங்க‌‌‌‌ளி‌ல்தா‌ன் கொ‌ள்ளைய‌ர்க‌ள் த‌ங்க‌ள் கைவ‌ரிசை கா‌ட்ட‌த் தொட‌ங்‌கியு‌ள்ளன‌ர். இதனா‌ல் இரவு நேர‌ங்க‌ளி‌ல் ம‌க்க‌ள் ஒரு பய உண‌ர்வுடனேயே தூ‌ங்கு‌கி‌ன்றன‌ர். ஒரு ம‌னித‌‌ன் சராச‌ரி ஒரு நாளை‌க்கு குறை‌ந்தது 7 ம‌ணி நேரமாவது தூ‌ங்க வேண‌்டு‌ம். ஆனா‌ல் அவ‌ர்க‌ள் பய‌த்துடனேயே தூ‌ங்குவதா‌ல் 5 ம‌ணி நேரமே கூட ச‌ரியாக தூ‌ங்குவ‌தி‌‌ல்லை.

கிராம‌ப்புற‌ங்க‌ளி‌ல் இதை‌‌விட கொடுமை. 3 ம‌ணி நேர‌ம் ‌மி‌ன்வெ‌ட்டு எ‌ன்பது த‌ற்போது காலை 8 ‌ம‌ணி‌க்கு ‌மி‌ன்வெ‌ட்டு ஏ‌ற்ப‌ட்டா‌ல் மாலை 4 ம‌ணி‌க்குத‌ா‌ன் ‌மி‌ன்சார‌ம் வரு‌கிறது. இதன‌ா‌ல் பா‌தி‌க்க‌ப்படுவது ‌‌கிண‌ற்று‌ப் பாசன, நிலத்தடி நீர் பாசன ‌விவசா‌யிக‌ள்த‌ா‌ன். நெ‌‌ற்ப‌யி‌ர்க‌ள் பா‌தி வள‌ர்‌ந்த ‌நிலை‌யி‌ல் இரு‌க்கு‌ம் இ‌ந்த நேர‌த்‌தி‌ல் ப‌யி‌ர்களை கா‌ப்பா‌ற்‌றி அறுவடை செ‌ய்து‌விட வ‌ே‌ண்டு‌ம் எ‌ன்ற நோ‌க்க‌த்த‌ி‌‌ல் எ‌ன்‌ஜி‌ன் மூல‌ம் ‌கி‌ண‌ற்‌றி‌ல் இரு‌ந்து ‌நீ‌ர் எடு‌த்து ப‌யி‌ர்களு‌க்கு ‌நீ‌ர் பா‌ய்‌ச்சு‌கி‌ன்றன‌ர்.

இதனா‌ல் அவ‌ர்களு‌க்கு ஒரு நாளை‌க்கு ஆகு‌ம் செலவு ‌சில ஆ‌யிர‌ங்களை தா‌ண்டி‌‌விடு‌கிறது. இதனா‌ல் பா‌தி ‌விவசா‌யிக‌ள் ‌விவசா‌ய‌ம் செ‌ய்வதையே ‌நிறு‌த்‌தி‌வி‌ட்டன‌ர். அ‌ந்த அளவு‌க்கு ‌மி‌ன்வெ‌ட்டா‌ல் பா‌தி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

விவசா‌யிகளு‌க்கு இலவச ‌மி‌ன்சார‌ம் வழ‌ங்கு‌கிறோ‌ம் எ‌ன்று மா‌ர்த‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம் அரசு, அ‌ந்த ‌விவசா‌யிகளை வாழ வை‌க்க‌ிறதா எ‌ன்பது இ‌ல்லை. ‌பி‌ள்ளையு‌ம் ‌கி‌ள்‌ளி‌‌வி‌ட்டு தொ‌‌ட்டிலை ஆ‌ட்டின கதையாக இரு‌க்‌கிறது த‌மிழக அர‌சி‌ன் இ‌ந்த ‌இலவச ‌மி‌ன்சார‌ம் ‌தி‌ட்ட‌ம்.

ம‌ி‌ன்ப‌ற்றா‌க்குறை இரு‌ப்பதா‌ல் ‌மி‌ன்வெ‌ட்டு தொட‌ர்‌கிறது எ‌‌ன்று கூறு‌ம் த‌மிழக அரசு, பக‌ல் நேர‌‌ங்க‌ளி‌ல் தா‌ன் ‌மி‌‌ன்சார‌த்தை அ‌திகமாக தடை செ‌ய்‌கிறது. ஆனா‌‌ல் இரவு நேர‌ங்க‌ளி‌ல் ‌மி‌ன்வெ‌ட்டு ஏ‌ற்படு‌த்தாம‌ல் இரு‌க்கலாமே எ‌ன்பது பொதும‌க்க‌ளி‌ன் கோ‌ரி‌க்கையாக உ‌ள்ளது.

இனி வருங்காலத்தில் மின்சார நிலைமை நிச்சயமாக சீராகும் எ‌ன்று கூறு‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, மின் உற்பத்தித் திறனை கூட்டுவதற்கான முயற்சிகளை இ‌னி ஆ‌ட்‌சி அமை‌க்க‌ப் போ‌கிறது அரசு மேற்கொள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்பதே ம‌க்க‌ளி‌ன் ‌விரு‌ப்பமாக உ‌ள்ளது.

Thanks : tamil.webdunia.com  

Sunday, May 1, 2011

விஷ்ணு பகவானின் பல பெயர்கள்


ஸ்ரீ விஷ்ணு பகவான்க்கு சுமார் 1000 பெயர்கள் உள்ளது. அவற்றில் சில பெயர்கள் விளக்கதுடன்.

1 . விஸ்வம்                                -  மங்களமான குணங்களால் முழுவதும் நிரம்பியவர்.

2. விஷ்ணு                                  -  அணைத்துக்குள்ளும் நுழைந்து நீக்கமற  
                                                            நிறைந்திருப்பவர்

3. பூதப்ருத்                                   - படைத்த அணைத்தையும் தானே தாங்குபவர்

4. புருஷோத்தம                       - பத்தர், முக்தர், நித்யர் ஆகிய 3 ஆத்மாக்களை விட
                                                        உயர்தவர்.

5. க்ருஷ்ண                                -  முத்தொழில் விளையாட்டாலேயே இன்புறுபவர்.

6. விக்ரமீ                                     - மிக்க திறலுடையவர்.

7. அம்ருத                                  - முக்தி அளிக்கும் ஆராத அமுதமானவர்.

8. விஜய                                     - வெற்றியே  உருவானவர்

9. மஹாவீர்ய                            - விகாரம் இல்லாதவர்.

10. விஷிஷ்ட                               - எதிலும் பற்றில்லாதபடியால் அணைத்தையும் 
                         விட  உயர்தவர்.

11. பாஃநு                                         - சூரியானுக்கே ஓளியை அருளும் 
                                                             ப்ரகாசமுடையவர்.

12. பவந                                        -  காற்றுபோல எங்கும் செல்பவர்.

13. நய                                          - ரிஷிகளை பாதுகாப்பவர்.

14. ப்ருது                                      - பெரும் புகழாளர்.

15. வ்ருக்ஷ                               - பெரும் மரத்தை போல அடியார்களுக்கு நிழல் 
                                                          தருபவர்.