> என் ராஜபாட்டை : மின்வெட்டிற்கு ஒரு அளவில்லையா?

.....

.

Monday, May 2, 2011

மின்வெட்டிற்கு ஒரு அளவில்லையா?

''மின்வெட்டு என்பது தமிழ்நாட்டில் மாத்திரம் நிலவக்கூடிய ஒன்றல்ல, இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதே நிலைதான் இன்றளவும் நீடித்து வருகிறது. கூடுதலாகத் தேவைப்படும் மின்சாரத்தை அதிகச் செலவானாலும் வாங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் முயற்சி செய்தாலும்கூட, அந்த முயற்சியில் முழு அளவுக்கு வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு காரணம் வேறு மாநிலங்களிலும் உபரி மின்சாரம் இல்லை என்பதுதான்'' எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நே‌ற்று ‌வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து கையோடு, கட‌ந்த மாத‌ம் 21ஆ‌ம் தே‌தி த‌மிழக‌த்‌தி‌ல் ‌மி‌ன்வெ‌ட்டு நேர‌த்தை அ‌திக‌ரி‌‌க்க‌ப்படுவதாக ‌மி‌ன்சார வா‌ரிய‌ம் அ‌திரடியாக உ‌த்தர‌வி‌ட்டது. வீடுகளு‌க்‌கான பக‌ல் நேர ‌மி‌ன்வெ‌ட்டு 2 ம‌ணி நேர‌த்‌தி‌ல் இரு‌ந்து 3 ம‌ணி நேரமாக அ‌றி‌‌வி‌த்தது. ஆனா‌ல் அதுவரை மின்வெட்டு அறிவிக்கப்படாத செ‌ன்னை மாநக‌ரி‌ல் ஒரு ம‌ணி நேர‌ம் மி‌ன்வெ‌‌ட்டு இரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் கூ‌‌றியது.

பல மா‌நில‌த்‌திலு‌ம் ‌மி‌ன்சார‌ம் ப‌ற்றா‌க்குறையாக இரு‌ப்பதா‌ல் போதுமான ‌மி‌ன்சார‌ம் த‌மிழக‌த்‌திற‌்கு பெ‌ற‌ முடிய‌வி‌ல்லை எ‌ன்று காரண‌ம் கூறு‌ம் ‌மி‌ன்சார வா‌‌ரிய‌ம், நாளொ‌ன்று 50 கோடி‌க்கு ‌மி‌ன்சார‌ம் வா‌ங்‌கியு‌ம் ‌நிலைமையை ச‌ரி செ‌ய்ய முடிய‌வி‌ல்லை எ‌ன்று கூ‌றியிருந்தது.

செ‌ன்னை‌யை எடு‌‌த்து‌க் கொ‌ண்டா‌ல் த‌ற்போது காலை 8 ம‌ணிக்குத் தொடங்கி பகுதி வாரியாக ஒரு மணி நேர ‌மி‌ன்வெ‌ட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனா‌ல் அறிவித்தப்படி, ஒரு மணி நேர மின்வெட்டு என்றில்லாமல், அவ்வப்போது மின் தடை ஏற்படுகிறது. இது 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடம் வரை நீட்டிக்கிறது. த‌ற்போது வெ‌யி‌‌ல் ம‌க்களை வா‌ட்டி வதை‌க்கு‌ம் இ‌ந்த நேர‌த்‌தி‌ல் ‌மி‌ன்வெ‌ட்டினா‌‌ல் கடுமையாக பா‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர் பொது ம‌க்க‌‌ள்.

பக‌ல் நேர‌ங்க‌ளி‌ல் கூட ‌மி‌ன்வெ‌ட்டை சமா‌ளி‌த்து ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌‌ளியே வ‌ந்து ம‌‌க்க‌ள் கா‌ற்று வா‌ங்‌கி‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் இரவு நேர‌ங்க‌ளி‌ல் அ‌தி‌ல் ந‌ள்‌ளிர‌வி‌ல் ‌ஏ‌ற்படு‌ம் மி‌ன்வெ‌ட்டை ம‌க்களா‌ல் சமா‌ளி‌க்க முடிய‌வி‌ல்லை. ‌‌த‌மி‌ழ்நாடு ‌மி‌ன்சார வா‌ரிய‌ம் அ‌றி‌வி‌த்த நா‌ளி‌ல் இருந்து ஒரு அறிவிக்கப்படாத மின்வெட்டு ந‌ள்‌ளிரவு நேரங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குழ‌ந்தைகளுட‌ன் ‌வீ‌ட்டி‌ல் தூ‌ங்கு‌ம் தா‌ய்மா‌ர்க‌ள் ந‌ள்‌ளிரவு 12 ம‌ணி‌க்கெ‌ல்லா‌ம் ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியே வர முடியுமா? அ‌ப்படியே ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியே வ‌ந்தாலு‌ம் கொசு‌க்க‌ளி‌ன் தொ‌ல்லை, ‌பூ‌ச்‌சிக‌ளி‌ன் தொ‌ல்லை. இ‌ப்படி ஒ‌வ்வொரு நாளு‌ம் ம‌க்க‌‌‌ள் நரக வேதனை‌யை அனுப‌வி‌த்து வ‌ரு‌கி‌ன்றன‌‌ர்.

வீடு அனலாக இரு‌‌ப்பதா‌ல் வெ‌ளி‌‌‌யி‌ல் வ‌ந்து மொ‌ட்டை மாடி‌யி‌ல் படி‌த்து தூ‌ங்கு‌ம் ம‌க்களு‌க்கு ‌நி‌‌ம்ம‌தி ‌கிடையாது. ‌அ‌ந்த அளவு‌க்கு ‌திரு‌ட்டு பய‌ம். செ‌ன்னையை பொறு‌த்தவரை கோடை கால‌ங்க‌‌‌‌ளி‌ல்தா‌ன் கொ‌ள்ளைய‌ர்க‌ள் த‌ங்க‌ள் கைவ‌ரிசை கா‌ட்ட‌த் தொட‌ங்‌கியு‌ள்ளன‌ர். இதனா‌ல் இரவு நேர‌ங்க‌ளி‌ல் ம‌க்க‌ள் ஒரு பய உண‌ர்வுடனேயே தூ‌ங்கு‌கி‌ன்றன‌ர். ஒரு ம‌னித‌‌ன் சராச‌ரி ஒரு நாளை‌க்கு குறை‌ந்தது 7 ம‌ணி நேரமாவது தூ‌ங்க வேண‌்டு‌ம். ஆனா‌ல் அவ‌ர்க‌ள் பய‌த்துடனேயே தூ‌ங்குவதா‌ல் 5 ம‌ணி நேரமே கூட ச‌ரியாக தூ‌ங்குவ‌தி‌‌ல்லை.

கிராம‌ப்புற‌ங்க‌ளி‌ல் இதை‌‌விட கொடுமை. 3 ம‌ணி நேர‌ம் ‌மி‌ன்வெ‌ட்டு எ‌ன்பது த‌ற்போது காலை 8 ‌ம‌ணி‌க்கு ‌மி‌ன்வெ‌ட்டு ஏ‌ற்ப‌ட்டா‌ல் மாலை 4 ம‌ணி‌க்குத‌ா‌ன் ‌மி‌ன்சார‌ம் வரு‌கிறது. இதன‌ா‌ல் பா‌தி‌க்க‌ப்படுவது ‌‌கிண‌ற்று‌ப் பாசன, நிலத்தடி நீர் பாசன ‌விவசா‌யிக‌ள்த‌ா‌ன். நெ‌‌ற்ப‌யி‌ர்க‌ள் பா‌தி வள‌ர்‌ந்த ‌நிலை‌யி‌ல் இரு‌க்கு‌ம் இ‌ந்த நேர‌த்‌தி‌ல் ப‌யி‌ர்களை கா‌ப்பா‌ற்‌றி அறுவடை செ‌ய்து‌விட வ‌ே‌ண்டு‌ம் எ‌ன்ற நோ‌க்க‌த்த‌ி‌‌ல் எ‌ன்‌ஜி‌ன் மூல‌ம் ‌கி‌ண‌ற்‌றி‌ல் இரு‌ந்து ‌நீ‌ர் எடு‌த்து ப‌யி‌ர்களு‌க்கு ‌நீ‌ர் பா‌ய்‌ச்சு‌கி‌ன்றன‌ர்.

இதனா‌ல் அவ‌ர்களு‌க்கு ஒரு நாளை‌க்கு ஆகு‌ம் செலவு ‌சில ஆ‌யிர‌ங்களை தா‌ண்டி‌‌விடு‌கிறது. இதனா‌ல் பா‌தி ‌விவசா‌யிக‌ள் ‌விவசா‌ய‌ம் செ‌ய்வதையே ‌நிறு‌த்‌தி‌வி‌ட்டன‌ர். அ‌ந்த அளவு‌க்கு ‌மி‌ன்வெ‌ட்டா‌ல் பா‌தி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

விவசா‌யிகளு‌க்கு இலவச ‌மி‌ன்சார‌ம் வழ‌ங்கு‌கிறோ‌ம் எ‌ன்று மா‌ர்த‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம் அரசு, அ‌ந்த ‌விவசா‌யிகளை வாழ வை‌க்க‌ிறதா எ‌ன்பது இ‌ல்லை. ‌பி‌ள்ளையு‌ம் ‌கி‌ள்‌ளி‌‌வி‌ட்டு தொ‌‌ட்டிலை ஆ‌ட்டின கதையாக இரு‌க்‌கிறது த‌மிழக அர‌சி‌ன் இ‌ந்த ‌இலவச ‌மி‌ன்சார‌ம் ‌தி‌ட்ட‌ம்.

ம‌ி‌ன்ப‌ற்றா‌க்குறை இரு‌ப்பதா‌ல் ‌மி‌ன்வெ‌ட்டு தொட‌ர்‌கிறது எ‌‌ன்று கூறு‌ம் த‌மிழக அரசு, பக‌ல் நேர‌‌ங்க‌ளி‌ல் தா‌ன் ‌மி‌‌ன்சார‌த்தை அ‌திகமாக தடை செ‌ய்‌கிறது. ஆனா‌‌ல் இரவு நேர‌ங்க‌ளி‌ல் ‌மி‌ன்வெ‌ட்டு ஏ‌ற்படு‌த்தாம‌ல் இரு‌க்கலாமே எ‌ன்பது பொதும‌க்க‌ளி‌ன் கோ‌ரி‌க்கையாக உ‌ள்ளது.

இனி வருங்காலத்தில் மின்சார நிலைமை நிச்சயமாக சீராகும் எ‌ன்று கூறு‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, மின் உற்பத்தித் திறனை கூட்டுவதற்கான முயற்சிகளை இ‌னி ஆ‌ட்‌சி அமை‌க்க‌ப் போ‌கிறது அரசு மேற்கொள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்பதே ம‌க்க‌ளி‌ன் ‌விரு‌ப்பமாக உ‌ள்ளது.

Thanks : tamil.webdunia.com  

1 comment:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...