“ டவுட் “ ரங்கா :
     “ டவுட் “ ரங்கா , இவர் ஒரு அப்பாவி , நாட்டுல நடக்குற பல நிகழ்சிகளை பாத்து இவருக்கு பல டவுட் .,  so  யாராவது இவரது டவுட் அ  கிளியர் பண்ணுக ....
- கடந்த வாரம் ஒரு      150  வருட கட்டிடம் தீ பிடித்து      எரிந்தது. அதுல 33  உயிர் பலி ஆனது.      இப்ப அதிகாரிகள் அந்த கட்டிடம் அனுமதி இல்லாம கட்டப்பட்டது னு கண்டுபிடிச்சு      இருக்காக(!). அப்ப இதனை வருடம் என்ன பன்னுனாக ? அவளவு பெரிய கட்டிடத்தை      எப்படி மறைத்து வைத்தார்கள்?
- தமிழ் நாட்டில்      3  வருடத்துக்கு முன் காலாவதியான      மருந்து மாத்திரைகள் கோடி கணக்கில் பறிமுதல் செய்யபடுகிறது, சாலை ஓரம்      கொட்டபடுகிறது . அப்படின இத்தனை வருடம் அதிகாரிகள் என்ன பன்னுனாக?
- பெட்ரோல் விலைய      ஏத்திருகோம் ஆனால் விலைவாசி குறையும் – சோனியா .  இது      என்ன கணக்கு ?
- 2009  மே மாதத்தில் மின் பற்றாகுறை இருக்காது – 2008 ல் ஆற்காடு      வீராசாமி.  
2010 மே மாதத்தில் மின் பற்றாகுறை இருக்காது – 2008  ல் ஆற்காடு வீராசாமி. 
மே முதல் வாரம் முதல் மின் வெட்டு இருக்காது -  2010  பிப்ரவரி ல் ஆற்காடு வீராசாமி. 
நாளை முதல் 2 மணி நேர மின் வெட்டு 3  மணி நேரமாக உயர்த்தப்படும் – 27- 3-10 ல் ஆற்காடு வீராசாமி. 
இவருக்கு  என்ன ஆச்சு ?
- விலைவாசி      குறைந்துள்ளது –      கருணாநிதி 
விலைவாசி உயர்வை முன்னிடு அரசு ஊழியர்களுக்கு 8  சதவிதம அகவிலை படி உயர்வு – கருணாநிதி 
எதோ இடிக்குதே ?
| Tweet | 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்