> என் ராஜபாட்டை : சச்சினுக்குப் பதில் இனி இவரா?!

.....

.

Monday, April 2, 2012

சச்சினுக்குப் பதில் இனி இவரா?!




டுத்த சச்சினைக் கண்டெடுத் ததுபோல உற்சாகத்தில் திளைக்கிறார் கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். காரணம், விராட் கோஹ்லி!
 23 வயது விராட் கோஹ்லியும் சச்சினைப் பார்த்து கிரிக்கெட் ஆடக் கற்றுக்கொண்ட கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களில் ஒருவர்.டிசம்பர் 2006-ல் ரஞ்சி டிராஃபியில் டெல்லி அணிக்காக விராட் விளையாட வந்தபோது, டெல்லி அணி தடுமாறிக் கொண்டு இருந்தது. அப்போது 'உங்கள் அப்பாபிரேம்நாத் இறந்துவிட்டார்’ என்று விராட்டுக்குத் தகவல் வந்தது. டிரெஸ்ஸிங் அறைக்குள் சென்றவர் பத்தே நிமிடங்களில் கலங்கிய கண் களோடு திரும்பி வந்தார். பேட்டிங் செய்தார். அவர் எடுத்த 90 ரன்கள் டெல்லி அணியைக் கௌரவமான நிலைக்குக் கொண்டுசென்றன. அப்பா வின் இறப்புச் செய்தி தெரிந்த பிறகும் ஏன் விராட் பேட்டிங் செய்ய வேண்டும்? 'விராட் பிரமாதமான ஒரு கிரிக்கெட் பிளேயர் ஆக வேண்டும்’ என்பதுதான் அவரது அப்பாவின் பெருங்கனவு.
இப்போது கோஹ்லி உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு சூப்பர் ஸ்டார். ரிக்கி பான்டிங், பிரையன் லாரா, சச்சின் ஆகிய ரன் மெஷின்களே 85 ஒருநாள் போட்டிகளுக்குள் விராட் குவித்த 11 சதச் சாதனைக்கு அருகில் இல்லை. கடைசியாக கோஹ்லி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் 'மேட்ச் வின்னிங்’ சதம். 30, 40 ரன்களை விறுவிறு வெனக் கடந்துவிட்டால், அதைச் சதமாக மாற்றும் லாகவம், பேட்டிங் ஸ்டைல், பேட்டிங் ஆவரேஜ், வயது இவற்றைக் கணக்கில்கொண்டால், இதே வேகத்தில் சென்றால் சச்சினின் சாதனைகளை முறியடிக்க கோஹ்லியால் மட்டுமே முடியும்’ என்றும், 'இந்தியாவுக்கு அடுத்த கேப்டன் கிடைத்துவிட்டார்’ என்றும் மீடியாக்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். 

இந்த எதிர்பார்ப்புகள்தான் கோஹ்லி சமாளிக்கவே முடியாத மிரட்டல் பவுன்ஸர் களாக இருக்கும். எப்போது இந்தியாவில் ஒரு வீரர் கவனிக்கப்படுகிறாரோ, அப்போது அவருக்கு ஸ்பான்ஸர்கள் பணத்தைப் பல மடங்கு கொட்டிக் கொடுப்பார்கள். இரவு பார்ட்டிகளுக்கு அழைப்பு வரும். மீடியாக்கள் துரத்தும். ஆராதிக்கும் ரசிகர்களே அவரைத் திட்டித் தீர்ப்பார்கள். ஆனானப்பட்ட சச்சினே இதில் இருந்து தப்ப முடியவில்லை.
விராட் என்ன செய்யப்போகிறார்?

''விராட் கோஹ்லி யைத் தனியே விடுங்கள். அவரது இஷ்டத்துக்கு அவர் விளையாடட்டும். அவர் மேல் பிரஷரைத் திணிக்காதீர்கள்!'' என்று சச்சின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 'ஒன் டவுன்’ பேட்ஸ்மேன் என்பது சிக்கலான இடம். ஓப்பனிங் பேட்ஸ் மேன்கள் சூப்பராக ஆடினாலும், சொதப் பினாலும் மூன்றாவதாக இறங்கும் பேட்ஸ்மேன் நின்று விளையாடி ரன் குவிக்க வேண்டும். அந்தத் திறமை டிராவிட்டுக்கு உண்டு. ''டெஸ்ட் அணியில் டிராவிட் இடத்துக்கு விராட் தகுதியான ஆள். அவரிடம் டென்ஷன் இல்லை!'' என்று கிரிக்கெட் வாரியத்துக்குப் பரிந்துரைத்திருக்கிறார் அனில் கும்ப்ளே.
இனிமேல் விராட்டைப் பிற அணிகள் உற்றுக் கவனிக்கும். வீடியோ பதிவுகள் மூலம் அவரது பலவீனத்தைக் கண்டுபிடித்து, அங்கேயே கட்டம் கட்டி அடிப்பார்கள். இந்திய ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் அவர் 'சூப்பர் சதம்’ அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அப்படி அடிக்காவிட்டால் சாபம் கொடுப்பார்கள். இதுபோல மீடியாக்களில் எழுதப்படும் கட்டுரைகளும் ஒரு விதத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்து, பிரஷரை அவர் மேல் ஏற்றிவைக்கும்.
இத்தனையையும் தாண்டி கோஹ்லி சவால்களைச் சமாளிப்பாரா? சச்சினின் சாதனைகளை முறியடிப்பாரா? இதற்கான பதில் அவருக்குத் தெரிந்திருக்கலாம்; தெரியாமலும் இருக்கலாம். ஆனால், இனி தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது!

13 comments:

  1. இந்தியாவின் மானத்தை காப்பாற்றினால் போதும்

    ReplyDelete
    Replies
    1. நான் சொன்னா போல விளையாட்டா கண்டிப்பா இந்தியா மானத்த காப்பாத்துவார் ..

      Delete
  2. Kilampidankaiya kilampiddanka oruvan nalla vilayada cidamaddankale

    ReplyDelete
  3. congrats கோஹ்லி

    ReplyDelete
  4. சச்சினின் முழு நம்பிக்கையும் கோஹ்லியிடம் தான் இருக்கிறது. சாதிக்கட்டும்.
    பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே..

    ReplyDelete
  5. இப்படித்தான் நிறைய விளையாட்டு வீரர்களை இந்த மீடியாக்கள் காலி செய்திருக்கின்றன. இப்போதைக்கு இவர் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம். அடுத்த சச்சினா என்பதை போகபோகத்தான் தெரியும்

    ReplyDelete
  6. உண்மையில் இவருக்கு பல தகுதிகள் உண்டு..மீடியா அழுத்தம் இல்லயென்றால் எல்லாமே நடக்கும்!

    ReplyDelete
  7. நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து விராட் கோக்லியை போல் மற்ற எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் இரண்டாவது இன்னிங்சில் இத்தனை சிறப்பாக ஆடியதில்லை.

    ஆனால் ஒட்டுமொத்த ஆட்டத்தில் சச்சினுடன் ஒப்பிடும் அளவிற்கு அவர் இன்னும் வளரவில்லை ..!

    ReplyDelete
  8. வளரும் வீரர்களிடம் எதிர் பார்ப்பை திணிக்கக்கூடாது...ஆளானப் பட்ட சச்சினே மீடியாக்களின் அலப்பரையால் நூறாவது சதமடிக்க நொந்து போனார் ...

    ReplyDelete
  9. பார்ப்போம் கோஹ்லி சச்சின் இடத்தை பிடிப்பாரா என்று

    இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்

    ReplyDelete
  10. திறமையை சச்சின் போல தக்க வைத்துக்கொள்ள கோஹ்லி முயலவேண்டும்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...