> என் ராஜபாட்டை : ஆனந்த விகடன்

.....

.
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

Monday, June 16, 2014

வை .கோ மற்றும் வாலியின் புத்தகங்கள் இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா ?






                   தமிழகத்தில் "நடக்கும்" போராட்டங்களில் அதிக அளவில் கலந்துகொண்டவர் வை .கோ அவர்கள் . கட்சி சார்பற்று , மக்களுக்காக களத்தில் இறங்கி போராட தயங்காதவர் இவர் . ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை முதல் முல்லை பெரியார் பிரச்சனை வரை மக்களுக்காக தெருவில் இரங்கி போராடியவர் . ஆனாலும் இவரை மக்கள் தேர்தலில் ஜெய்க்க வைபதில்லை என்பது கொடுமையான விஷயம் .


                  இவரின் போராட்டத்தின் போது பல வழக்குகளை சந்தித்துள்ளார் .24/09/2007 அன்று தஞ்சையில் வை கோ பேசிய இல்லை இல்லை ஆற்றிய உரையின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டுள்ளனர் . அந்த புத்தகத்தின் மின் பதிப்பை (E-BOOK) உங்களுக்காக வழங்குகிறேன் .






தரவிறக்கம் செய்ய : வரலாறு சந்தித்த வழக்குகள்

============================================================================


வாலியின் “நினைவு நாடாக்கள் “


             வாலிப கவிஞர் என அன்புடன் அழைக்கபட்ட மறைந்த பாடலாசிரியர் வாலி அவர்கள் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வந்தது “நினைவு நாட்கள் “ என்னும் தொடர் . தனது வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்கள் , தான் கடந்து வந்த பாதையில் இருந்த நல்ல , கெட்ட சம்பங்கள் , தான் சந்தித்த பலதரபட்ட மனிதர்கள் , அவர்களின் குணநலன்கள் பற்றி விரிவாக , மிக அருமையான எழுத்து நடையில் எழுதியிருப்பார் வாலி அவர்கள் .

   264 பக்கங்கள் உள்ள இந்த நூல் படிக்க படிக்க இன்னும் ஆவலை தூண்டும் நூல் ஆகும் . நமக்கு தெரிந்த மனிதர்களின் வித்தியாசமான முகங்களை பற்றி வாலி விவரித்து இருப்பார் .

தரவிறக்கம் செய்ய : “நினைவு நாடாக்கள் “

இதையும் படிக்கலாமே :






முண்டாசுபட்டி : திரைவிமர்சனம்

 

அலட்சியம்






Tuesday, April 10, 2012

என்ன அழகு... எத்தனை அழகு !


        
             கோடை வந்து விட்டால்... சருமப் பாதுகாப்புக்கு பெண்கள் ரொம்பவே மெனெக்கெடுவார்கள். நிறைய தண்ணீர்,  பழங்கள்... இவைதான் கோடைக்குக் கவசம் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள். குறிப்பாக, பழங்கள் முகப்பொலிவுக்கு சிறந்த உபகரணம். கிவி, பப்பாளி, மாம்பழம் என்று சீஸன் பழங்களை வைத்தே சருமப் பாதுகாப்பு பெறலாம். கோடையில் மலிவாக கிடைக்கும் மாம்பழத்தைக் 
கொண்டே முகப்பொலிவைப் பெறுவது பற்றி இங்கே பார்ப்போமா!
வைட்டமின் 'ஏ’ மற்றும் பவர்ஃபுல் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், கோடை வெயிலில் இருந்து சருமத்தைக் காத்து, பூரண புதுப்பொலிவு கொடுக்கும் ஆற்றல் மாம்பழத்துக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல், சருமத்தில் எண்ணெய்ப் பசையை சமன் செய்வதோடு, முகத்தில் வறட்சியை விரட்டும் வித்தையும் அதனிடம் உண்டு.
இத்தனை அம்சங்கள் கொண்ட மாம்பழத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஸ்டெப் கொண்ட 'மேங்கோ சம்மர் ஸ்கின் கேர் ட்ரீட்மென்ட்’ செய்து கொள்வது... கோடையிலும் உங்களை குதூகலத்துடன் வைத்திருக்கும்.
இதற்கென இருக்கும் ஸ்பெஷல் க்ரீம்களுடன் மாம்பழத்துண்டுகளையும் பயன்படுத்தித்தான் இந்த ஐந்து ஸ்டெப்பையும் மாடல் சந்தனாவுக்கு இங்கே செய்யப் போகிறோம்.
முதல் ஸ்டெப், மேங்கோ ஃபேஸ் க்ளென்ஸர்: மாம்பழத்துண்டுகள் மற்றும் மேங்கோ ஃபேஸ் க்ளென்ஸர் க்ரீமைக் கொண்டு, 5 நிமிடங்கள் முகத்தில் ஃபேஷியல் செய்தால், கோடை வெயிலால் கறுப்பாக மாறும் முகம், தன் இயல்பான நிறத்துக்கு மாறும்!
இரண்டாவது ஸ்டெப், மேங்கோ ஃபேஸ் ஸ்க்ரப்: இதற்கென இருக்கும் மேங்கோ ஃபேஸ் ஸ்க்ரப் க்ரீம் மற்றும் மாம்பழத்துண்டுகளைச் சேர்த்து, முகத்தில் ஃபேஷியல் செய்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும். இது, முகத்தின் தோலில் இறந்து போயிருக்கும் செல்களை அகற்றி, புது செல்களை உருவாக்கும். சருமத்தையும் புத்துணர்ச்சி அடையச் செய்யும்!
மூன்றாவது ஸ்டெப், ஸ்டீமிங்: இரண்டாவது ஸ்டெப்பை முடித்ததும், இரண்டு நிமிடங்களுக்கு இதைச் செய்தால்... நீராவி மூலமாக சருமத் துவாரங்கள் திறந்து அழுக்குகள் வெளியேற்றப்படும். இந்த முயற்சியை அடிக்கடி மேற்கொள்ளும்போது... பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ்கள் நாளடைவில் நீங்கிவிடும்.
நான்காவது ஸ்டெப், மேங்கோ ஃபேஸ் மசாஜ்: தோல் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்வதற்காகவே இந்த ஸ்டெப். மேங்கோ ஃபேஸ் மசாஜ் க்ரீம் கொண்டு மசாஜ் செய்வதால், முகம் மிருதுவாகவே இருக்கும். அதேபோல முகத்தின் ஈரப்பதத்தையும் சம அளவில் இது பராமரிக்கும். சுமார் 15-20 நிமிடங்கள் வரை இதைச் செய்யலாம். பொதுவாக பருக்கள் இருக்கும் இடத்தில் மசாஜ் செய்வதைத் தவிர்த்துவிட வேண்டும். இதற்கு முன்பாக செய்த ஸ்டீமிங் காரணமாக திறந்திருக்கும் சருமத் துவாரங்கள் வழியாக மேங்கோ ஃபேஸ் மசாஜ் க்ரீம் உள் இறங்குவதால்... நல்ல ரிசல்ட் கிடைக்கும். மாம்பழத்திலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மூலமாக, கண் புருவங்களில் கருவளையங்கள் வராமல் தடுக்கப்படும்.
ஐந்தாவது ஸ்டெப், மேங்கோ ஃபேஸ் பேக்: மாம்பழத் துண்டுகளோடு... மேங்கோ ஃபேஸ் பேக் கிரீமை முகத்தில் அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசினால்... பிரமாதமாக முகம் ஜொலிக்கும்! முகத்தின் தோலை ஃப்ரெஷ்ஷாக மாற்றி வைப்பதோடு, பகலில் வெளியில் போகும்போதும்கூட கறுப்பாக மாறாமல் தடுக்க இந்த ஸ்டெப் உதவும். கோடை வெயிலால் ஏற்படுகின்ற வறட்சியை பேலன்ஸ் செய்வதற்காக ஃபைனல் டச்-அப் என்கிற வகையிலும் இந்த ஃபேஸ் பேக் பயன்படும்.
35 வயதைக் கடந்த பெண்கள், தோலின் கடினத்தன்மை மற்றும் முதிர்ச்சி போன்ற காரணங்களுக்காக கூடுதலாக,  ஃபேஸ் பேக் ஸ்டெப்பை இரண்டு தடவை செய்துகொள்வது கூடுதல் பலன் கொடுக்கும்!
இதையெல்லாம் மாடல் சந்தனாவுக்கு செய்து முடித்த பிறகு, ''வாவ்... இட்ஸ் ட்ரூ!'' என்று தன் முகத்தைப் பார்த்து தானே ஏக பரவசமானார்!
இந்த ஃபேஷியலை வீட்டிலேயே செய்துகொள்ள நினைப்பவர்கள்... மாம்பழத் துண்டுகளுடன் தேவைக்கேற்ப தேன், பால், சர்க்கரை, ஆல்மண்ட் ஆயில் கலந்து க்ரீமைத் தயாரித்துக்கொள்ள வேண்டும். பிறகு,     ஸ்டெப்பை ஸ்டெப்பாக அதைப் பயன் படுத்தலாம்.
இந்த 'மேங்கோ சம்மர் ஸ்கின் கேர் ட்ரீட்மென்ட்’டை கோடை முடியும் வரை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால்.. கொளுத்தும் வெயிலுக்கு 'டோன்ட் கேர்’ சொல்லிவிடலாம். கூடவே, ஜூலை மலர்களைப் போல புத்துணர்வாகவே இருப்பீர்கள்... அக்னி நட்சத்திரத்திலும்!

Monday, April 2, 2012

சச்சினுக்குப் பதில் இனி இவரா?!




அடுத்த சச்சினைக் கண்டெடுத் ததுபோல உற்சாகத்தில் திளைக்கிறார் கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். காரணம், விராட் கோஹ்லி!
 23 வயது விராட் கோஹ்லியும் சச்சினைப் பார்த்து கிரிக்கெட் ஆடக் கற்றுக்கொண்ட கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களில் ஒருவர்.டிசம்பர் 2006-ல் ரஞ்சி டிராஃபியில் டெல்லி அணிக்காக விராட் விளையாட வந்தபோது, டெல்லி அணி தடுமாறிக் கொண்டு இருந்தது. அப்போது 'உங்கள் அப்பாபிரேம்நாத் இறந்துவிட்டார்’ என்று விராட்டுக்குத் தகவல் வந்தது. டிரெஸ்ஸிங் அறைக்குள் சென்றவர் பத்தே நிமிடங்களில் கலங்கிய கண் களோடு திரும்பி வந்தார். பேட்டிங் செய்தார். அவர் எடுத்த 90 ரன்கள் டெல்லி அணியைக் கௌரவமான நிலைக்குக் கொண்டுசென்றன. அப்பா வின் இறப்புச் செய்தி தெரிந்த பிறகும் ஏன் விராட் பேட்டிங் செய்ய வேண்டும்? 'விராட் பிரமாதமான ஒரு கிரிக்கெட் பிளேயர் ஆக வேண்டும்’ என்பதுதான் அவரது அப்பாவின் பெருங்கனவு.
இப்போது கோஹ்லி உலக கிரிக்கெட் அரங்கில் ஒரு சூப்பர் ஸ்டார். ரிக்கி பான்டிங், பிரையன் லாரா, சச்சின் ஆகிய ரன் மெஷின்களே 85 ஒருநாள் போட்டிகளுக்குள் விராட் குவித்த 11 சதச் சாதனைக்கு அருகில் இல்லை. கடைசியாக கோஹ்லி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் 'மேட்ச் வின்னிங்’ சதம். 30, 40 ரன்களை விறுவிறு வெனக் கடந்துவிட்டால், அதைச் சதமாக மாற்றும் லாகவம், பேட்டிங் ஸ்டைல், பேட்டிங் ஆவரேஜ், வயது இவற்றைக் கணக்கில்கொண்டால், இதே வேகத்தில் சென்றால் சச்சினின் சாதனைகளை முறியடிக்க கோஹ்லியால் மட்டுமே முடியும்’ என்றும், 'இந்தியாவுக்கு அடுத்த கேப்டன் கிடைத்துவிட்டார்’ என்றும் மீடியாக்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் விவாதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். 

இந்த எதிர்பார்ப்புகள்தான் கோஹ்லி சமாளிக்கவே முடியாத மிரட்டல் பவுன்ஸர் களாக இருக்கும். எப்போது இந்தியாவில் ஒரு வீரர் கவனிக்கப்படுகிறாரோ, அப்போது அவருக்கு ஸ்பான்ஸர்கள் பணத்தைப் பல மடங்கு கொட்டிக் கொடுப்பார்கள். இரவு பார்ட்டிகளுக்கு அழைப்பு வரும். மீடியாக்கள் துரத்தும். ஆராதிக்கும் ரசிகர்களே அவரைத் திட்டித் தீர்ப்பார்கள். ஆனானப்பட்ட சச்சினே இதில் இருந்து தப்ப முடியவில்லை.
விராட் என்ன செய்யப்போகிறார்?

''விராட் கோஹ்லி யைத் தனியே விடுங்கள். அவரது இஷ்டத்துக்கு அவர் விளையாடட்டும். அவர் மேல் பிரஷரைத் திணிக்காதீர்கள்!'' என்று சச்சின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 'ஒன் டவுன்’ பேட்ஸ்மேன் என்பது சிக்கலான இடம். ஓப்பனிங் பேட்ஸ் மேன்கள் சூப்பராக ஆடினாலும், சொதப் பினாலும் மூன்றாவதாக இறங்கும் பேட்ஸ்மேன் நின்று விளையாடி ரன் குவிக்க வேண்டும். அந்தத் திறமை டிராவிட்டுக்கு உண்டு. ''டெஸ்ட் அணியில் டிராவிட் இடத்துக்கு விராட் தகுதியான ஆள். அவரிடம் டென்ஷன் இல்லை!'' என்று கிரிக்கெட் வாரியத்துக்குப் பரிந்துரைத்திருக்கிறார் அனில் கும்ப்ளே.
இனிமேல் விராட்டைப் பிற அணிகள் உற்றுக் கவனிக்கும். வீடியோ பதிவுகள் மூலம் அவரது பலவீனத்தைக் கண்டுபிடித்து, அங்கேயே கட்டம் கட்டி அடிப்பார்கள். இந்திய ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் அவர் 'சூப்பர் சதம்’ அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அப்படி அடிக்காவிட்டால் சாபம் கொடுப்பார்கள். இதுபோல மீடியாக்களில் எழுதப்படும் கட்டுரைகளும் ஒரு விதத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்து, பிரஷரை அவர் மேல் ஏற்றிவைக்கும்.
இத்தனையையும் தாண்டி கோஹ்லி சவால்களைச் சமாளிப்பாரா? சச்சினின் சாதனைகளை முறியடிப்பாரா? இதற்கான பதில் அவருக்குத் தெரிந்திருக்கலாம்; தெரியாமலும் இருக்கலாம். ஆனால், இனி தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது!

Friday, March 16, 2012

நீதிக்காக காத்திருக்கும் ஈழத் தமிழினமும் , கையாலாகாத காங்கிரஸ்யும்


'உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியா யத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால், நாம் இருவரும் தோழர்களே’ - கியூபா விடுதலைக்குப் போராடிய சே குவேராவின் தோழமை வரி இது. ஆனால், சே குவேராவுடன் தோளோடு தோளாக நின்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபா இன்று, இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது. காரணம்... அமெரிக்கா, இலங்கைக்கு எதிரியாக இருக்கிறது. 
அமெரிக்கா எதை ஆதரிக்கிறதோ அதை எதிர்ப்பது என்று கியூபா முடிவெடுத்துவிட்டது. கியூபாவைப் போலவே அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் எல்லாம் இன்று இலங்கைக்கு ஆதரவாக மாறிவிட்டன. உலக நாடுகளை இரண்டு அணி களாகப் பிரித்துவிட்டது, ஈழத் தமிழர் பிரச்னை.
இதற்கு மையப் புள்ளியாக இருக்கப் போகிறது ஜெனிவா.
ஐ.நா-வின் மனித உரிமைக் கூட்டத் தொடர் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கியது. மார்ச் 23 வரை நடக்க இருக்கும் இந்தக் கூட்டத்தில்தான், இலங்கை இனப் படுகொலைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இலங்கை இனப் படு கொலைகளுக்கு எதிராக இரண்டாவது முறை இந்தத் தீர்மானம் ஐ.நா. மன்றத்தில் வரப்போகிறது. 2009 மே மாதம் முதல் முறையாக அமெரிக்க நாட்டின் ஆதரவுடன், கனடா, இத்தகைய தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அப்போது, உறுப்பினர்களான 47 நாடுகளில் 29 நாடுகள் இலங் கைக்கு ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன. ஆறு நாடுகள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. அதனால், அந்தத் தீர்மானம் தோல்வியைக் கண்டது. இப்போது மீண்டும் இலங்கை இனப்படுகொலைகளுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிட அமெரிக்கா முனைப்புடன் செயல்படுகிறது.
ராஜபக்சே அரசின் தமிழ் இனப் படுகொலை களுக்கு  நீதி கேட்டு ஈழத் தமிழர்கள், ஜெனிவாவில் நடை பயணம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாடும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று அந்தந்த நாட்டில் வாழும் தமிழர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். ஆனால், ஈழத் தமிழர்களால் இலங்கையில் தங்கள் அரசியல் உரிமையை எடுத்துரைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துரோகிகளாக மாறி விட்டனர் என்ற ஆவேசம் தமிழர்களிடையே இணையதளங்களில் பதியப்படுகிறது. இதற்குக் காரணம், ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா-வின் மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்து இருப்பதுதான். உலகம் முழுவதும் தமிழர்களுக்கு ஆதரவாகத் திரண்டுவரும் நிலை யில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இதில் பங்கேற்காமல் தட்டிக்கழித்ததை, 'சந்தர்ப்பவாதப் பின்வாங்கல்’ என்று உலகத் தமிழர்கள் கொந்தளித்துச் சாடுகின்றனர்.
''ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்க இசைவு தெரிவித்துவிட்டு, திடீர் விலகலுக்கு என்ன காரணம்?'' என்று சம்பந்தனிடம் கேட்டோம்.
''ஐ.நா. கூட்டம் தொடர்பாக என்ன  செய்ய வேண்டுமோ, அனைத்து செயல்களையும் செய்து விட்டோம். ஆனால், இப்பொழுது இதில் பங்கேற் காமல் பிரசங்கமாக (அமைதியாக) இருக்கும் முடிவை எடுத்துள்ளோம். இது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்நாடு செல்லும் முன்னரே விவாதித்தோம். அதில், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று எடுத்த முடிவு அவருக்கும் தெரியும். மக்கள் சார்பாக அனைத்துப் பிரச்னைகளையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்று நாங்கள் திறமான நோக்கத்துடன் உள்ளோம். ஊடகங்களின் பிரசாரத்துக்காக நாங்கள் எதுவும் செய்ய முடியாது. இந்த முடிவு தொடர்பாக இனி ஊடகங்களிடம் பேச முடியாது'' என்று இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.
அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் பேசினோம். ''இது மொத்தக் கூட்டமைப்பின் கருத்து அல்ல. தனிப்பட்ட சம்பந்தனின் கருத்து. எங்கள் விவாதத்தில், ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும் என்று இறுதி முடிவு எடுக்காவிட்டாலும், எங்கள் உறுப்பினர்கள் பலரின் நிலைப்பாடு, 'இதில் பங்கேற்பது’ என்பதுதான். ஆனால் இல்லை என்று சம்பந்தன் சொன்னால், அது அவரே கூறிக்கொள்ளும் முற்றும் முழுதுமான பொய். நான் தமிழ்நாடு விரையும் முன் ஐ.நா.மனித உரிமைக் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும் என்றே முடிவு எடுக்கப்பட்டது'' என்றார்.
அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற குரல், தமிழகத்தில் அனைத்துத் தரப்பினராலும் முன்மொழியப் பட் டுள்ளது. கருணாநிதியும் ஜெயலலிதாவும்கூட ஒரே குரலில், இந்தியா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பிரதான எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை வைத்துள்ளன. ஆனால், மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.
ஈழத்தமிழர்கள் மரணத்துக்கு சாட்சியாக இருந்த மத்திய அரசு, பாவத்தைக் கழுவிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

- ம.கா. தமிழ் பிரபாகரன் அவர்கள் விகடனில் எழுதிய கட்டுரை இது. நமது இன மக்களுக்காக இதை அனைவரிடமும் சென்று சேரும் அளவு பகிரவும் .

நண்பர் சி.பி யின் கட்டுரையை படிக்க இங்கே கிளிக்(

தமிழா! தமிழா! இருப்பாய் தமிழா நெருப்பாய்!ஈழத்தமிழனும் கலந்தான் நம் உயிர் உறுப்பாய்..

) செய்யவும்  



முந்தய பதிவுகள் :

"A" - Jokes

 

அஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'!

 

கதம்பம்

 

 


Thursday, March 8, 2012

குஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை



கார்த்திக் முதல் ராஜ்கிரண் வரை உங்களுடன் நடித்த ஹீரோக்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்? ஏன்? மழுப்பல் இல்லாமல் நச்சென்று பதில் சொல்லுங்கள். நீங்கள்தான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆயிற்றே?'' 

இனி யாரை பற்றி சொன்னா என்ன ... எப்படி இருந்தாலும்  இனிகதாநாயகி வேடம் கிடையாது ..
''கார்த்திக்தான் எப்பவும் என் ஃபேவரைட். நான் 'வருஷம் 16’ பண்றதுக்கு முன்னாடி இருந்தே, அவரை எனக்குப் பிடிக்கும். 'மௌன ராகம்’, 'அக்னி நட்சத்திரம்’ படங்கள் பார்த்த பிறகு எனக்கு கார்த்திக் பைத்தியமே பிடிச்சிடுச்சு. ஒரு நடிகன்னா துறுதுறுனு இப்படித்தான் இருக்கணும். அவர் நடிப்பை, ஸ்டைலை சும்மா வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இது எல்லாத்தையும் மீறி அவர் என் குடும்ப நண்பர். அவர் உங்க எல்லாருக்கும்தான் கார்த்திக். ஆனா, எங்களுக்கு அவர் 'முரளி’. என் பசங்களுக்கு அவர் 'முரளிப்பா’... 'பெரியப்பா’. இன்னும் சொல்லணும்னா, அவரோட போட்டோ மட்டும்தான் என் வீட்ல இருக்கும். வேற எந்த ஹீரோ போட்டோவும் இருக்காது. என் கணவரோட அண்ணன் என்ற ஸ்தானத்தில் அவரை வெச்சிருக்கேன் நான்!''



''நீங்கள் சொன்னால் சரியாக இருக் கும்... தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?'' 

சுந்தர் . சி தான் .. தீ படம் பாத்ததுமே முடிவு பண்ணிடோம் 
 
''கண்டிப்பா அடுத்த சூப்பர் ஸ்டார் யாருமே இல்லை. எப்பவும் அவர்தான்... அவர் மட்டுமேதான் சூப்பர் ஸ்டார்!  ( இது தான் உண்மை )
ரஜினி சார் சினிமாவுக்கு வந்தப்ப, 'இவர்தான் சூப்பர் ஸ்டாரா வருவார்’னு யாரும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டாங்க. ஏன்... அவரே நினைச்சிருக்க மாட்டார். ரஜினி சாரே சினிமாவில் வளர்ந்த பிறகு, இப்ப ராஜன் கேட்கிற மாதிரி அப்ப யாராவது, 'இவர் சிவாஜி சார் இடத்தைப் பிடிப்பாரா? எம்.ஜி.ஆர். இடத்தைப் பிடிப்பாரா?’னு கேள்வி கேட்டு இருப்பாங்க. ஆனா, அவங்க இடத்தையா ரஜினி சார் பிடிச்சிருக்கார்? இங்கே யாரும் யாரோட இடத்தையும் பிடிக்க முடியாது. இன்னும் 20 வருஷத்துக்குப் பிறகு, 'அஜீத், விஜய், சூர்யா இடத்தை யார் பிடிப்பாங்க?’னு கேட்கலாம். இது ஓர் ஓட்டம். ஒவ்வொருத்தர் நடிப்பு, உழைப்பைப் பொறுத்து அவரவருக்கான இடம் நிர்ணயிக்கப்படும். அவ்வளவுதான்!''




''உங்களை இயக்கியதில் உங்களைக் கவர்ந்தவர் யார்? யாருடைய இயக்கத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?'' 

முதலில் யார் என்னை வைத்து இயக்க விருப்பம் னு கேளுங்க ..( படத்துலதான் )
 
 ''நான் எப்பவும் மணிரத்னம், பாரதிராஜா, பாலசந்தர்னு மூணு பேரின் ஃபேன். இவங்களோட படங்களை முடிஞ்சா முதல் நாள் முதல் ஷோவே பார்த்துடுவேன். ஆனா, என்னை இயக்கிய இயக்குநர்களில் எனக்குப் பிடித்தவர் பி.வாசு சார். அவர் என்னை வெச்சு கிட்டத்தட்ட 15 படங்களை இயக்கியிருக்கார். இப்போதைய இயக்குநர் களில் நான் நடிக்க விரும்புவது கௌதம் மேனன், வசந்தபாலன்னு பெரிய லிஸ்ட்டே இருக்கே!''




'' 'சின்ன குஷ்பு’ என்று யாருக்காவது பட்டம் கொடுக்கச் சொன்னால், இப்போதைய கதாநாயகிகளில் யாருக்குக் கொடுப்பீர்கள்?'' 

நயன் தாராவ சொல்லலாம் அவர்தான் இப்ப waiting  லிஸ்ட் ல இருக்கார் (பிரபு தேவாக்கு அடுத்து யாருன்னு )
''யாருக்கும் கிடையாது! அவங்க ஏன் சின்ன குஷ்புவா, சின்ன சிம்ரனா, சின்ன ஜோதிகாவா இருக்கணும்? அவங்க அவங்களாவே இருக்கட்டுமே. என்னை யாரும் சின்ன நதியா, சின்ன ராதான்னு கூப்பிடலையே. குஷ்புவாக மட்டும் பார்த்ததுதானே எனக்கு ப்ளஸ். அந்த ப்ளஸ் அவங்களுக்கும் கிடைக்கட்டுமே!''




''பொதுவாக, ரஜினியைப் புகழ்ந்து பாடும் பாடல்கள்தான் ஹிட் ஆகும். ஆனால், ரஜினியே உங்களைப் பற்றிப் பாடுவதுபோல அமைந்த 'கூடையில் என்ன பூ... குஷ்பு’ பாடலுக்கு அவருடன் ஆடும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?'' 


 '' 'அண்ணாமலை’ படத்துல அந்தப் பாட்டு இருக்கிற விஷயமே எனக்குத் தெரியாது. ஒரு காமெடி சண்டைக் காட்சி எடுத்துட்டு இருந்தப்ப, 'உன் பேர்ல படத்துல ஒரு பாட்டு இருக்கு... தெரியுமா குஷ்?’னு ரஜினி சார் கேட்டார். நான் நம்பலை. ஆனா, ஒலிப்பதிவாகி வந்த பாட்டை நாகராவில் கேட்டுட்டு, 'சார், இது பயங்கர காமெடியா இருக்கு. இந்தப் பாட்டை யார் கேப்பாங்க?’னு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஆனா, அவரோ, 'டெஃபனிட்டா இந்தப் பாட்டு ஹிட்டாகும் குஷ்’னு சொன்னாரு. அந்தப் பாட்டை ஷூட் பண்ணும்போதுகூட லொகேஷன்ல நான் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தேன். ஆனா, தியேட்டர்ல பார்த்தப்பதான் அந்தப் பாட்டோட ரீச் புரிஞ்சது. 21 வருஷத்துக்கு அப்புறமும் அந்தப் பாட்டை டி.வி-யில் பார்க்கும்போது, ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த விஷயங்கள், சிங்கப்பூர் ஷோ போனபோது நானும் ரஜினி சாரும் அந்தப் பாட்டுக்கு சேர்ந்து டான்ஸ் பண்ணினதுனு நிறைய விஷயங்கள் ஞாபகத் துக்கு வரும். ஆனாலும், எனக்கு அந்தப் படத்தில் பிடிச்ச பாட்டு, 'அண்ணாமலை அண்ணாமலை ஆசைப்பட்டேன் அண்ணாமலை’தான்!
அப்புறம் அந்தப் படம் பத்தி இன்னொரு ரகசியம் சொல்லவா? ஆக்ச்சுவலா 'அண்ணாமலை’ படம் ஷூட்டிங் ஆரம்பிச்சப்ப, படத்திலும் என் கேரக்டர் பேர் குஷ்புதான். நடிக்கும்போது ரஜினி சார் ஒவ்வொரு முறை, 'குஷ்பு... குஷ்பு...’னு கூப்பிடும்போது என்னையும் அறியாமல் சிரிச்சிடுவேன். அதனால, கிட்டத்தட்ட பாதிப் படம் ஷூட்டிங் முடிஞ்ச பிறகு என் கேரக்டர் பேரை 'சுப்பு’னு மாத்திட்டாங்க. இப்பவும் படம் பார்க்கும்போது நல்லாக் கவனிச்சா, படத்தின் ஆரம்பக் காட்சிகளில் விகடன் சார் உட்பட எல்லாரும் என்னைக் கூப்பிடும்போது 'குஷ்பு... குஷ்பு’னுதான் உதடு அசையும்!''

நன்றி : விகடன் 

இதையும் படிக்கலாமே :

துப்பாக்கி Vs பில்லா ௨

 

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

 

 

Sunday, February 5, 2012

அவசர உதவிக்கு அலெர்ட்!

ஒரு நொடி விபத்து எத்தனை பேரின் எதிர்காலத்தை, நம்பிக்கையை, வாழ்க்கையைச் சிதைக்கிறது? விபத்து நடந்தால், தொலைவில் இருப்பவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அருகில் இருப்பவர்கள், 'அச்சச்சோ’ என்கிறார்கள். இதைத் தவிர்த்து நாம் என்ன செய்ய முடியும்? 'இயன்றதைச் செய்ய முடியும்!’ என்கிறது அலெர்ட்!

 விபத்தில் காயமுற்றவர்களுக்கு உதவுவதை முழு நேரப் பணியாகக்கொண்டு இருக்கும் அலெர்ட் அமைப்பு உதயமான கதை சொல்கிறார் அதன் நிறுவனர் கலா.''தினமும் வேலைக்கு அடையாறு டு கேளம்பாக்கம் ரூட்லதான் போவேன். அந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கும். ஒவ்வொரு விபத்தைப் பார்க்கிறப்பவும் ஏதாவது செய்யணும்னு மனசு பதறும். ஆனா, 'நேரம் இல்லை’, 'நம்மால் என்ன செய்ய முடியும்’னு காரணம் சொல்லி, என்னை நானே சமாதானப்படுத்திக்குவேன். ஒரு நாள் 'இது தப்பு. நம்மால முடிஞ்சதைச் செஞ்சிருக்கணும்’னு குற்ற உணர்வு ரொம்பவே அழுத்துச்சு. அதே மனநிலையில் இருந்த நண்பர்களை ஒண்ணு சேர்த்தேன். 
'அலெர்ட்’ ஆனோம்!''
அலெர்ட் அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான ராஜேஷ் தொடர்கிறார்... ''ஒரு சர்வே எடுத்தோம். விபத்து சமயம் மக்கள் உதவத் தயங்குவதற்கு சில காரணங்கள் தெளிவாச்சு. போலீஸ், நீதிமன்ற வழக்கு, சாட்சி விசாரணை நடைமுறைகள். 'நாம என்ன டாக்டரா? நம்மால் என்ன உதவ முடியும்?’ என்ற இயலாமை மனப்பான்மை, 'வேற யாராவது உதவுவாங்க!’ என்ற மனநிலை.
ஆனால், ஒரு உண்மை தெரியுமா? 'விபத்து நடந்த இடத்தில் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியிருந்தால், விபத்து தொடர்பான வழக்கில் போலீஸார் உங்களைச் சாட்சியாக அழைக்க முடியாது’னு ஒரு சட்டம் இருக்கு. 

அப்புறம், ஒரு உயிரைக் காப்பாத்த நீங்க டாக்டராகத்தான் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. இந்த இரண்டையும் புரிஞ்சுக்கிட்டா, உங்களால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்!''  
ஆமோதிப்பாகத் தலை அசைக்கும் கலா புன்னகையுடன் முடிக்கிறார்... ''ஆரம்பிச்ச அஞ்சு வருஷத்துல 15 ஆயிரம் பேருக்கு இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் மருத்துவர்கள் மூலம் முதலுதவிப் பயிற்சி கொடுத்துஇருக்கோம். சாலை விபத்து மட்டுமே எமர்ஜென்ஸி இல்லை. வீட்ல யாராவது திடீர்னு மயங்கி விழுந்தாலும் அது எமர்ஜென்ஸிதான். ஒரு தொலைபேசி அழைப்பு போதும்... உங்க இடத்துக்கே வந்து முதலுதவிப் பயிற்சிகள் அளிப்போம்.

ஒரு உயிரைக் காப்பாத்தும் சந்தோஷத்துக்கு வேற எதுவும் ஈடு இணை இல்லைங்க!''

சில முதலுதவி டிப்ஸ்...
முதலுதவிக்குப் பயிற்சி உண்டு. பயிற்சி பெறாதவர்கள் 'பார், கவனி, உணர்’ என்னும் முறையில் உதவி செய்யலாம். பாதிக்கப்பட்டவருடைய இதயம் ஏறி இறங்குகிறதா என்று பாருங்கள். நாசித் துவாரத்தின் அருகில் காதைக் கொண்டுசென்று சுவாசத்தைக் கேளுங்கள். பாதிக்கப்பட்டவரின் மணிக்கட்டை லேசாகப் பிடித்து உயிர்த்துடிப்பை உணருங்கள். இவை ஓரளவு உயிர்ப்பாக இருந்தால் அவரைக் காப்பாற்றிவிடலாம்!

 பாதிக்கப்பட்டவரின் காதுக்கு அருகே ஏதாவது ஒலி எழுப்புங்கள். அல்லது அவருடைய தோள்பட்டைகளில் மெள்ளத் தட்டுங்கள். அவர் பதில் சொல்ல முயற்சித்தால், ஓரளவு உணர்வோடு இருக்கிறார் இல்லையெனில், அவர் சிக்கலான நிலையில் இருக் கிறார் என்று அர்த்தம்.


 பாதிக்கப்பட்டவரின் உறவினரை அழைப்பதற்கு முன் ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுங்கள். உறவினர்கள் வந்து என்ன செய்யப்போகிறார்கள்? அவர்களும் ஆம்புலன்ஸைத்தானே அழைக்க வேண்டும்?

 பாதிக்கப்பட்டவர் மயக்கத்தில் இருந்தால் குடிக்க எதுவும் கொடுக்காதீர்கள்!

 மொபைலில் ICE (In Case of Emergency) என்று குறிப்பிட்டு உங்களுக்கு நெருக்கமானவர்களின் எண்ணைச் சேமித்துவையுங்கள். விபத்தின்போது நீங்கள் பாதிக்கப்பட்டால் அவர்களைத் தொடர்புகொள்ள இது உதவும்!
அலெர்ட் அமைப்பைத் தொடர்புகொள்ள : 99440 66002.

இது அனைவருக்கும் பயன் படும் . எனவே அனைவருக்கும் SHARE பண்ணவும் . 

நன்றி : ஆனந்த விகடன்

Saturday, January 14, 2012

விகடன் விருதுகள்


HAPPY PONGAL
 
தமிழ் வார இதழ்களில் முதலிடம் வகிக்கும் ஆனந்த விகடன் அளித்த விருதுகளின் தொகுப்பு







நன்றி : விகடன்

Tuesday, September 13, 2011

பெண்கள் எல்லாம் தெய்வமா?




உணர்ந்தறிதல்


வெருண்டு உருண்டு
கண்கள் மருண்டு

காற்றும் நீருமாய்
நாசி நடுநடுங்க..

காது விரைக்கக்
கழுத்து அதிர்ந்து..

கால்கள் துவண்டு
கன்னங்கள் கிட்டித்து..

உடம்பு கிடுகிடுக்க
உள்ளுக்குள் வெடிவெடிக்க..

பெருமுச்சுக் குவியலில்
உயிர்முச்சுக் கலகலத்து..

இதுவரை கேட்டறியா
விதங்களில் கதறலிட்டு…

முன்னுடம்பு குறுக்கி
பின்னுடம்பு பிதுக்கி…

பூமிப்பந்தை ஒரு நிமிடம்
புதிதாகப் பிறக்கவிட்டு..

கன்று ஈன்று நாக்கிட்ட
காராம் பசு பார்த்து,
உடலெல்லாம் சிர்ப்போடி
உள்ளம் வியர்த்து
நின்றேன்

வீட்டில்

கர்ப்பிணியாய்

மனைவி !

(மனிதனுக்கு ஒரு பிறவிதான் ஆனால் பிரசவத்தின் பொழுது மறுபிறவி எடுக்கும் எல்லா பெண்களும் தெய்வம்தான்)


டிஸ்கி 1: இது கடந்த வாரம் ஆனந்தவிகடனில் ராஜ திருமகன் என்பவர்
            எழுதிய கவிதை.

டிஸ்கி 2: என் மனைவியின் வளைகாப்பிற்க்கு வந்தவர் கையில் இருந்த
            விகடனில் படித்தது.

டிஸ்கி 3: இது பிடிக்க என்ன காரணம் என சொல்லிதெரியவேண்டியதில்லை.


நாளை :
நமது பதிவை காப்பி செய்யாமல் தடுப்பது எப்படி ?
( இப்ப என் பதிவை   காப்பி பண்ணி பாருங்க )

 ====================================================

நேற்று :
என்ன நடக்குது நம்ம பதிவுலகில் ?