> என் ராஜபாட்டை : 2014

.....

.

Friday, December 19, 2014

விவேகானந்தர் – இந்திய மறுமலர்ச்சி நாயகன் : நூல் விமர்சனம்




                      “நூறு இளைஞர்களை தாருங்கள் , இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் “ என சொன்ன அறத்துறவி “விவேகானந்தர்  “ பற்றிய தொகுப்புகள்தான் இந்த நூல்.

ஆசிரியர் :

 நூலின் ஆசிரியர் பலரும் அறிந்த ரஞ்சனி நாராயணன் அவர்கள். இவரின் முதல் நூல் இது . வலைதளங்களிலும் , பத்திரிக்கைகளிலும் எழுதிவரும் அருமையான எழுத்தாளர் .

நூலை பற்றி :

 பாரதியாரின் வார்த்தைகளுடன் இந்த நூல் துவங்குகிறது. விவேகானந்தர் பிறந்த நாள் முதல் அவர் எப்பொழுது ராமகிருஷ்ணரை சந்தித்தார் , அவரிடம் எப்படி சீடனாக சேர்ந்தார் , அதானால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்ன , ராமகிருஷ்னா மிஷன் எப்போது , எப்படி துவங்கபட்டது என முதல் 43  பக்கங்கள் ஓடிவிடுகிறது .பின்னர் அவரின் சுற்றுபயணங்கள் பற்றிய விவரங்கள் வருகிறது. பயண கட்டுரைகள் எப்போதும் போர் அடிக்கும் ஆனால் இங்கு இடையிடையே நமக்கு அதிகம் தெரியாத சில தகவல்கள் வருவதால் போரடிக்கவில்லை .

 உதாரணம் :

சுவாமிஜியின் முதல் சீடர் பெயர் “சரத் சந்திர குப்தர் “

பவஹாரி என்றால் காற்றை சாப்பிடுபவர் என அர்த்தம் .

சிக்காகோவில் பயணத்தில் சுவாமிஜி தங்க உதவியவர் மிஸ் கேத்ரின் ஆப்ட் சேன்பான் .

பட்டினியில் கிடக்கும் ஒருவனிடம் மதத்தை பற்றி பேசுவது அவனை அவமதிப்பது போல – சுவாமிஜி

நல்லவர்களை எதிர்க்க கண்டிப்பா நாட்டில் நாலுபேராவது இருப்பாங்க , அதுபோல சுவாமிஜியை எதிர்த்து “வங்கவாஸி “ என்ற பத்திரிகை எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தது .

அவரின் வாழ்கையை பத்து அத்தியாயங்களாக பிரித்து எழுதியுள்ளார். இந்த வருடம் அவரின் 151 வது வருடம்.

 “அனைத்துப் பரிமாணத்திலும் மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியே விவேகானந்தரின் செய்தி “ என்ற ரவீந்தரநாத் தாகூரின் வரிகளுடன் நூல் முடிகிறது .

சிறப்புகள் :

மறைந்த நபர்களை பற்றி எழுதும் போது அனைவரும் அறிந்த செய்திகள்தான் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த நூலில் பல விஷயங்கள் புதிதாக உள்ளன. அதனால் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது .

மழுப்பாமல் சில விஷயங்கள் நேரிடையாக சொல்லபடுகிறது. உதாரணமாக கிருஸ்துவ மிஷன்கள் இந்துக்களை மதம் மாற செய்த செயல்கள் பற்றிய விவரம்.

விவேகானந்தர் சென்ற இடங்களை பற்றி வரிசையாக எழுதியது.

அதிக அத்தியாயங்கள் இழுக்காமல் சுருக்கமாக முடித்தது .

குறைகள் :

(குறை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை , ஒரு வாசகனாக சில பரிந்துரைகள்/ ஆசைகள் ) ....

வெறும் வார்த்தைகளாக இல்லாமல் விவேகானந்தரின் மாறுபட்ட படங்களை இடையிடையே போட்டிருக்கலாம் .

ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பத்திலும் , இறுதியிலும் அவரின் பிரபலமான / முக்கியமான வரிகளை சேர்த்திருக்கலாம் .

துன்பம் அதிகமானதால் தான் அவர் காளியை ஏற்றுகொண்டார் என்பது போல உள்ளது இது சரியா என தெரியவில்லை .

பதிப்பகத்துக்கு :

ஒவ்வொரு நூலிலும் ஆசிரியரை பற்றி , அவர் எழுதிய பிற நூல்களை பற்றி ஒரு பக்கம் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறன் ,

மொத்தத்தில் மாணவர்கள் மட்டுமல்ல அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது என்பதில் சந்தேகம் இல்லை .


குறிப்பு : இது மதிப்புரை.காம் தளத்தில் நான் எழுதிய பதிவு .

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-97-5135-166-5.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Wednesday, December 17, 2014

இலவசமாக பேச இரண்டு ஆண்ட்ராய்ட் APPLICATIONS






                இன்று ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தினம் தினம் புது புது ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் வந்த வண்ணம் உள்ளது . அவற்றில் பல தேவையில்லாத, நமது நேரத்தை , காசை வீணடிக்கும் வகையில் உள்ளது . மிக சில அப்ளிகேஷன்கள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . அப்படி நமக்கு மிகவும் உதவக்கூடிய , இலவசமாக பேச உதவும் இரண்டு அப்ளிகேஷன்களை பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம் .

1. BIGO 

                    இது மிகவும் பயனுள்ளது . இதன்மூலம் உலகம் முழுவதும் இலவசமாக பேச முடியும் . இந்த அப்ளிகேஷன் உள்ளவர்களிடம் பேசுவதுமட்டுமல்லாமல் , இதை பயன்படுத்தாத மற்றவர்களிடமும் பேசமுடியும் .

பயன்கள் :

மிக சிறிய அப்ளிகேஷன் .

அனைத்து நாட்டுக்கும் பேசலாம் .

இலவசமாக கிடைகிறது .

இந்த அப்ளிகேஷன் மற்றவர்கள் இன்ஸ்டால் செய்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை .

மொபைல் மட்டும் இன்றி லேண்ட் லையனுகும் பேசமுடியும் .

இந்த அப்ளிகேஷன் உள்ளவரிடம் பேச நேர அளவு இல்லை (UNLIMITED CALLS..)

மாதம் மாதம் லாகின் செய்தால் தனியாக கிரடிட் ஏறுகிறது .



நிபந்தனைகள் :

முதலில் சேரும் போது 600 பாயிண்ட் கிரடிட் சேரும் இதைதான் இலவசமாக பேசமுடியும் .

உங்கள் மூலம் யாராவது இணைந்தால் எக்ஸ்ட்ராவாக 300 பாயிண்ட் சேரும் .

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நிமிடத்துக்கு எத்தனை பாயிண்ட் என்பது மாறுபடும் .

உங்கள் நண்பர்களால் கிடைக்கும் பாயிண்ட் அடுத்த மாதத்திற்கும் சேர்ந்துவரும் .

WI-FI, 3G இல் மிக அருமையாக வேலை செய்கிறது .

இந்த அப்ளிகேஷனை தரவிறக்க :  CLICK HERE



2. NANU 


            இதுவும் இலவசமாக பேச உதம் அப்ளிகேஷன் தான் . இதுவும் இலவசமாக கிடைகிறது . மேலே சொன்ன அப்ளிகேஷன் போல் இதும் மிகவும் பயனுள்ள ஒன்றுதான் .

நன்மைகள் :

கால் குவாலிட்டி மிகவும் அருமையாக உள்ளது .

2G இல் கூட தெளிவாக பேசமுடியும் .

இலவசமாகவே கிடைகிறது .

தரவிறக்கம் செய்ய :  CLICK HERE
                                                                   OR
 


நிபந்தனைகள் :

மாதம் 15 நிமிடங்கள் மட்டுமே இலவசம் .

நண்பர்களை இணைப்பதால்எந்த கிரடிட்டும் கிடைபதில்லை .



                           நண்பர்களே .. மேலே சொன்ன இரண்டையும்பயன்படுத்தி பாருங்கள் . முழுமையாக இலவசமாக கிடைக்காவிட்டாலும் இவ்வளவு இலவசம் என்பது சந்தோஷம்தானே .

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்


Thursday, November 20, 2014

கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய சில மென்பொருள்கள்





நமது அன்றாட வாழ்வில் கணினியின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நமது கணினியில் பலதரபட்ட மென்பொருள்களை நிறுவி வைத்திருப்போம். நமக்கு தேவையான அனைத்தும் வைத்திருப்போமா என்பது சந்தேகம்தான். இதோ உங்களுக்காக உங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய சில மென்பொருள்களின் பட்டியல் ...


1. ICECREAM PDF CONVERTER


                  இது உங்கள் ஆபிஸ் கோப்புகளை PDF ஆக மாற்ற உதவுகிறது . மிகவும் எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைத்துள்ளது இதன் சிறப்பு .

MS-WORD => PDF
MS-WORD => PDF
MS EXCEL => PDF
IMAGE => PDF
EBOOK=> PDF

PDF=> ANY FORMAT(JPG, BMP, PNG, TIFF)


இதை தரவிறக்கம் செய்ய : (FOR DOWNLOAD):   CLICK HERE

2. WISE PROGRAM UNINSTALLER


                நாம் நமது கணினியில் நிறுவியிருக்கும் பல மென்பொருள்கள் தேவையில்லாத போது அழிக்க வேண்டிவரும் . அப்போது சில மென்பொருள்கள் முழுவதுமாக அழியாது . தேவையில்லாமல் கணினியின் நினைவகத்தில் இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கும் . இது போன்ற பிரச்சனைகளில் உதவுவதுதான் இந்த மென்பொருள் . நாம் அழிக்க நினைக்கும் மென்பொருளை சுத்தமாக அழிப்பதுதான் இதன் சிறப்பம்சம் .


இதை தரவிறக்கம் செய்ய : (FOR DOWNLOAD):   CLICK HERE


3.VSO Media Player 1.4.8.494




           நாம் விரும்பும் பாடல்கள் , படங்களை அருமையான தரத்துடன் பார்க்க உதவும் புதிய மென்பொருள் இது . இதில் மற்ற பிளையேர்களில் உள்ளதை விட பல சிறப்பம்சங்கள் நிறைதுள்ளது .இது BLU-RAY DISC கூட சப்போர்ட் செய்யும் இந்து முக்கியமானது .


இதை தரவிறக்கம் செய்ய : (FOR DOWNLOAD):   CLICK HERE







Thursday, November 13, 2014

இலவசமாக புத்தகங்கள் வேண்டுமா ?(E-BOOK இல்லை ...)









நல்ல நூல்கள் மிக சிறந்த நண்பர்களுக்கு சமம் என சொல்வார்கள். நம்ம தலைவர் சுஜாத்தா கூட "தினமும் குறைந்தது 20 பக்கங்கள் படிப்பதை வாடிக்கையாக கொள்ளுங்கள் , அது எந்த நூலாக இருந்தாலும் பரவாயில்லை " என சொல்லுவர் . ஆனால் இன்று நூல்கள் விற்கும் நிலையில் காசு கொடுத்து நூல் வாங்குவது சிலருக்கு கஷ்டமாக உள்ளது .(விலைவாசி அப்படி ...)

படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும், படித்த நூலை பற்றி விரிவாக விவாதிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு இலவசமாக நூல்கள் வழங்க ஒரு பதிப்பகம் முடிவுசெய்துநூல்களை இலவசமாக வழங்கிவருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா ?

ஆம் , கிழக்கு பதிப்பகம் தான் அந்த வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது . இது ஒரு தரமான பதிப்பகம் என்றும் , பல ஆயிரகணக்கான நூல்களை வெளியிட்ட பெரிய பதிப்பகம் என்பதும் அனைவருக்கும் தெரியும் .இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைதான் இந்த இலவச நூல்கள் .

எப்படி பெறுவது ?


  • முதலில்  இங்கு  கிளிக் செய்து கிழக்கு பதிப்பகத்தின் அபிஷியல் வலைத்தளம் செல்லவும் .

  •  இங்கு பல நூல்களின் விவரங்கள் இருக்கும் . அதில் உங்களுக்கு பிடித்த புத்தகத்தை தெரிவு செய்யவும் .

  • அதன் கிழே ஒரு படிவம் இருக்கும் . அதனை கவனமாக நிரப்பவும் .
  • "submit" பட்டனை அழுத்தவும் .
  •  அவ்வளவுதான் .நான்குநாட்களில்நீங்கள்கேட்டபுத்தகம்உங்கள்இல்லம்வந்துசேரும் .

நிபந்தனை :

  • இலவசமாக வாங்கும் புத்தகத்தை படித்து அதை பற்றி 400 - 1000 வார்த்தைகளுகுள் ஒரு மதிப்புரை எழுத வேண்டும் .
  • நீங்கள் எழுதும் மதிப்புரை அவர்கள் தளத்தில் வெளியிடப்படும் .

டிஸ்கி : ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகங்கள் வாங்கலாம் . ( நான் இதுவரை இரண்டு வாங்கியுள்ளேன் )

Tuesday, November 4, 2014

சில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்




கடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. 

பிரபல பதிவர் , கவிதை மன்னன் அரசன் , கன்னி பெண்களின் அண்ணன் சாரி கண்ணன் “கோவை ஆவி” மற்றும் பதிவுலக மார்கேண்டயன் துளசிதரன் அய்யா நடித்துள்ளனர் . இயக்கம் குடந்தை மண்ணின் மைந்தர் R.V.சரவணன் அவர்கள் .


கதை :

கதை மிக சிறியதுதான் . (சின்ன கதைய எடுத்தாதாம் அது குறும்படம் , பெரிய கதைனா அது பெரும்படம் !!!). ஆட்டோவில் ஒனன்றாக வரும் இருவர் ஐந்து ரூபாய் சில்லறை பாக்கியில் நண்பர்களாகின்றனர். உறவினர் காரில் வந்ததால் தான் நண்பனையும் அழைத்து செல்ல தேடும் ஒருவரும் , பஸ்ஸில் கஷ்டபட்டு ஏறி நண்பருக்காக சீட்டு போட்டு காத்திருக்கும் ஒருவர் என சில நொடிகளில் ஏற்பட்ட நட்பு எப்படி ஆழமாக மாறியது என்பதுதான் கதை .


+ பாயிண்ட்ஸ்


இயக்கம் மிக அருமை , முதல் படம் போலவே இல்லை .


அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் / கடக்கும் சம்பவத்தை எடுத்தது 


மிக குறைவான கதாபாத்திரங்கள் .


மூவரின் அருமையான நடிப்பு .


மிக இயல்பான வசனங்கள் .


- பாயின்ட் :

குழந்தை எழுந்து நடக்க ஆரம்பித்த உடனே அது ரஜினிபோல நடக்கவில்லை என குறை கூற கூடாது எனவே முதல் முயற்சி என்பதால் எந்த குறையையும் சொல்ல மனமில்லை .


ஆச்சரியம் :

ஆவி ஓடும் பஸ்ஸில் ஏறியது .



டிஸ்கி : திரைப்படத்தில் இயக்குனர்கள் ஒரு காட்சியில் தலையை காட்டுவார்கள் அதுபோல இதிலும் இயக்குனர் சரவணன் ஒரு காட்சியில் வருகிறார் .



Wednesday, October 15, 2014

நட்பு நீடிக்க ...





உலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பான் காரணம் அவன் நண்பர்கள் அவன் கஷ்ட படுவதை பார்த்துகொண்டு இருக்க மாட்டார்கள் . அப்படிபட்ட நட்பு நீண்ட நாள் நீடிக்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்வதே இந்த பதிவு ...

நண்பர்களிடம் சாதி மதம் பார்க்காதிர்கள் , எக்காரணம் கொண்டும் அவர்கள் சாதி மதத்தை அவர்கள் முன் கிண்டல் செய்தீர்கள் .


நண்பர்களின் பிறந்த நாள் , திருமண நாள் போன்றவற்றிற்கு முடிந்தவரை நேர்ல லாது தொலைபேசியில் வாழ்த்து சொல்லுங்கள் . இல்லாவிட்டால் ஒரு SMS அனுப்புங்கள் .


நல்ல காரியங்களுக்கு செல்கிறோமோ இல்லையோ நண்பர்களின் வீடுகளில் நடக்கும் துக்க காரியங்களுக்கு செல்லுங்கள் . அப்பொழுதுதான் சோகத்திலும் நண்பன் கூட  இருக்கிறான் என்ற ஆறுதல் இருக்கும்


நண்பர்களின் உடலை அல்லது அவர்களின் பழக்க வழக்கங்களை போது இடத்தில் கிண்டல் செய்யாதிர்கள் (முக்கியமாக பெண்கள் இருக்கும் போது )


விசேஷ நாட்களில் அவர்கள் வீட்டிற்கும் , அவர்களை உங்கள் வீட்டிற்கும் அழையுங்கள் .


கூடுமான வரை நண்பர்களிடம் கடன் வாங்காதீர்கள் , பல நட்புகள் பிரிய கடந்தான் முக்கிய காரணம் .


நண்பர்களின் தவறுகளை எடுத்து கூறுங்கள் ஆனால் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள் .


நண்பர்கள் பேசுவதை கவனியுங்கள் நாம் பேசுவதை அவர்கள் கவனிக்க வேண்டும் என நாம் ஆசை படுவதை போல அவர்களும் ஆசை படுவார்கள் அல்லவா ?


நண்பர்களிடம் பொய் சொல்லாதீர்கள் அது பின்பு உங்களுக்கே பிரச்சனையாக வரலாம் .


பெண்கள் தங்கள் தோழிகளிடம் நகைகள் கடன் வாங்காதீர்கள் .

நண்பர்களின் மொபைல் போனை நொண்டாதிர்கல் . மிகவும் அவசியம் என்றால் மட்டுமே அவர்கள் போனை பயன்படுத்துங்கள் .

அவர்கள் அனுமதியின்றி அவர்கள் மொபைல் நம்பரை யாருக்கும் அளிக்காதிர்கள் .



இவை கொஞ்சம் தான் இன்னும் இன்னும் பல விஷயங்கள்  உள்ளது .பதிவின் நீளம் கருதி எழுதவில்லை . உங்களுக்கு தோன்றும் கருத்தை சொல்லுங்கள் .

இது ஒரு மீள் பதிவு

Wednesday, September 17, 2014

இந்தியா முழுவதும் இலவசமாக பேச ஒரு ANDROID APPLICATION





          இன்றைய மொபைல் உலகில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது போல அதில் பயன்படுத்த படும் அப்ளிகேஷன்களும் தினம் தினம் புதுசு புதுசாக வந்துகொண்டே உள்ளது . அதில் மிக உபயோகமான சில அப்ளிகேஷன்களை நாம் அடிகடி பார்த்துவருகிறோம். 

             இன்று நாம் பார்க்க போவது இந்தியா முழுவதும் இலவசமாக பேச உதவும் ஒரு அருமையான அப்ளிகேஷனை பற்றிதான். அதன் பெயர் DINGALING. சமிபத்தில் வெளியாகி சக்கைபோடு போடும் VOIP அப்ளிகேஷன் இது.


பயன்கள் :


  • ·         இந்தியா முழுவதும் இலவசமாக பேசலாம் .

  • ·         மாதம் 1 ½ மணி நேரம் இலவசமாக பேசலாம் .
  • ·         மொபைல் , லேன்ட்லைன் என எதுக்கு வேண்டுமானாலும் பேசலாம் .
  • ·         உங்கள் சொந்த எண்ணையே பயன்படுத்த முடியும் .
  • ·         இதை DINGALING WEBSITE மூலமாகவும் பயன்படுத்தலாம் . ஆண்ட்ராய்ட் போன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை .
  • ·         வெளிநாடுகளுக்கு மிக குறைவான கட்டணத்தில் பேசலாம் .
  • ·         மிக குறைந்த அளவு INTERNET DATA பயன்பாடு .
  • ·         மிக விரைவாக இணைப்பு கிடைகிறது .
  • ·         இதுவரை நீங்கள் பயன்படுத்திய நிமிடங்கள் , மீதி உள்ள நிமிடங்கள் என விவரத்தை எளிதில் அறியும் வசதி .


குறைகள் :


  • ·         குரல் மிக தெளிவாக உள்ளது என சொல்ல முடியாது , ஆனாலும் ரொம்ப மோசமில்லை .
  • ·         சில சமயங்களில் புது எண்ணை காட்டுகிறது .
  • ·         இணைப்பு அளிக்கும் முன் ஒலிக்கும் குரல் தமிழில் இல்லை .


மற்றபடி மிக அருமையான அப்ளிகேஷன் இது . நான் பயன்படுத்திவருகிறேன் . நீங்களும் பயன்படுத்தி பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .


தரவிறக்கம் செய்ய :

FOR ANDROID   :: DINGALING

FOR IPHONE   :: DINGALING

FOR WEBSITE   :: DINGALING


·          

Tuesday, September 9, 2014

அல்சர்






இன்றைய அவசர வாழ்க்கை சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்னை தான் அல்சர்(குடல் புண்).
குடல் புண் எதனால் ஏற்படுகிறது?

உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே குடல்புண் எனப்படும்.

அதாவது வயிறு மற்றும் குடல்களின் சுவர்களில் ஏற்படும் புண் என்றும் கூறலாம்.


பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம்.

குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும், நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.

கலப்பட உணவு, அசுத்த குடிநீர், மோசமான சுற்று சூழலாலும் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல் புண் ஏற்படுகிறது.


குடல் புண்ணுக்கான அறிகுறிகள்


* வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி

* நெஞ்செரிச்சல்

* வயிறு வீங்குதல்

* பசியின்மை, உடல் எடை குறைதல்

* வாந்தி, குமட்டல், வாயுக்கோளாறு

எதை தவிர்க்க வேண்டும்?

* காரமான உணவுப் பொருட்களை தவிர்த்து, உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும், பின் இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

* புகைபிடிக்கக் கூடாது, மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

* சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

* காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

* டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.

* மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

சாப்பிட வேண்டியவை

* சத்தான சரிவிகித உணவு, குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.

* பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

* பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

* உடல் எடை குறைய, அல்சர், கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு சிறந்த டானிக். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம்புல்தான்.

* கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல டானிக் ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

* மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது வல்லாரை. தினமும் 2 வேளை சிறிதளவு இலைகளை சாப்பிடலாம்.

* மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றை கட்டுப்படுத்தலாம்.

டிஸ்கி : நன்றி மெயில் அனுப்பிய நண்பருக்கு 

Thursday, August 21, 2014

மனைவி அமைவதெல்லாம் ....





“மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் “ என்பார்கள். அது 100/100 சரியான கருத்து. சரியில்லாத மனைவியால் அழிந்த குடும்பங்கள் பல, நல்ல மனைவியால் சாதித்த கணவர்கள் பலர். என்னடா திடிர்னு மனைவியை பற்றி தத்துவம்லாம் சொல்றானேன்னு பார்கின்றிர்களா ? ஒண்ணுமில்ல நாளை  (22-8-14) எனது அன்பு மனைவியை கைபிடித்த நாள் .

வெற்றிகரமான வாழ்வில் ஐந்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம்.

நான் அதிகமாக செலவு செய்கிற ஆள் இல்லை. வெளியில் சென்றால் டீ குடிக்க கூட யோசிப்பேன். நூறு ரூபாய் கொடுத்துபார்த்தாலும் அதே சினிமாதான் ஐம்பது ரூபாய் கொடுத்தாலும் அதே சினிமாதான் என குறைந்த கட்டண டிக்கெட் தான் எடுப்பேன். ஆயிரம் ரூபாய் போட்டு ஒரு சட்டை எடுப்பதைவிட இருநூறு ரூபாய் என ஐந்து சட்டை எடுக்கலாமே என யோசிப்பேன். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அடிகடி என்னிடம் சொல்வது (சபிப்பது ) “நீ செய்ற கஞ்ச தனத்துக்கு உனக்கு வாய்ப்பவள் பயங்கர செலவுகாரியா இருப்பாள் பாரு “ என்றுதான். ஆனால் கடவுள் நல்லவர்களை கை விடமாட்டார் என்ற கொள்கையின் அடிப்படையில் என்னையும் கைவிடவில்லை .

சிக்கனமாக இருப்பதில் எனக்கு சமமானவள். இதுவரை தனக்கு என எதையும் (நகை , புடவை ) கேட்டதில்லை. என்னையும் வீண் செலவு செய்ய வைத்ததில்லை. அதுபோல வீட்டில் உள்ளவர்களுக்கு செலவு செய்வதை என்றுமே தடுத்ததில்லை , ஏன் என கேட்டதும் இல்லை.

“கட்டுன பொண்டாடி கண்ணுல தண்ணி வந்தா
அவன் ஆம்பளையே இல்லை “
என்ற சூப்பர் ஸ்டாரின் வரிகளை இன்றுவரை கடைபிடிக்கிறேன். அவளும் இதுவரை எனக்கு கண்ணிர்  வர அளவு அடித்ததில்லை ( அய்யயோ உண்மைய உளறிடேனா ??). இனியும் இது தொடரும் என நெனைக்கிறேன்.

நிம்மதியான , சந்தோஷமான வாழ்க்கைக்கு ...

  • விட்டு கொடுங்கள்
  • மனம்விட்டு பேசுங்கள்
  • ஆபிஸ் கோவத்தை வீட்டில் காட்டாதிங்க
  • அவளையும் ஒரு குழந்தையா நினையுங்கள்
  • அருமையான தோழியாக பாருங்கள்
  • இரண்டாவது தாயாக பாவியுங்கள்

                                           உங்கள் வாழ்த்துக்களை எதிர்நோக்கி ..
                                                                   K.ராஜா
                                                                   R.சக்தி பிரியதர்ஷினி
                                                                   R.S.சரண்

Tuesday, August 12, 2014

ஆண்ட்ராய்ட் போனில் இருக்க வேண்டிய முக்கியமான அப்ளிகேஷன்கள்





     இன்று மொபைல் பொன் பயன்படுத்தாத நபர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . இப்போது கல்லூரி மற்றும் நடுத்தர மக்களின் கைகளில் தவழ்வது ஆண்ட்ராய்ட் எனும் சுமார்ட் போன்தான். அப்படி வாங்கி பயன்படுத்தும் போனில் என்ன என்ன அப்ளிகேஷன்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்ததில் தோன்றியதில் எழுதிய பதிவுதான் இது . இங்கு சொல்லப்படும் அனைத்து அப்ளிகேஷன்களும் நன் பயன்படுத்தி பார்த்தவைதான் .

TUBEMATE

      யூ டுப் விடியோக்களை விரைவில் தரவிறக்கம் செய்ய உதவும் அப்ளிகேஷன் இது. சில காரணங்களால் இது கூகிள் ப்ளே ஸ்டோரில் தடை செய்யபட்டுள்ளது. ஆனாலும் மற்ற தளங்களில் கிடைகிறது. ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் அப்ளிகேஷனைவிட பலமடங்கு பயனுள்ள , வசதியுள்ள அப்ளிகேஷன் இது. இது இருந்தால் விடியோக்களை மிக எளிதாக தரவிறக்க முடியும்.

இதை தரவிறக்க : TUBEMATE


=========================================================================

APPSAVER:


   உங்கள் போனில் உள்ள அனைத்து அப்ளிகேஷங்களையும் BACKUP எடுத்து வைத்துகொள்ள உதவும் அப்ளிகேஷன் இது. இதனால் தவறாக அழிக்கபட்ட அப்ளிகேஷன்களை மீண்டும் தரவிறக்க வேண்டாம் , இதில் உள்ள BACKUP மூலம் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். போனை ரீசெட் செய்தால் கூட பரவாயில்லை இதில் இருந்து அனைத்து அழிந்த அப்ளிகேஷங்களையும் எடுத்துக்கொள்ளமுடியும் .
இதை தரவிறக்க : APPSAVER

 =================================================

BLACKMART ALPHA



 கூகுளே பலி ஸ்டோரில் பணம் கொடுத்து வாங்க வேண்டிய அனைத்து அப்ளிகேஷங்களையும் இங்கு இலவசமாக தரவிறக்கம் செய்யலாம். பெயருக்கு ஏற்றார் போல இது பிளாக் மார்கெட் தான். நாம் ஆசைபட்ட ஆனால் பணம் கொடுக்க விரும்பாத அப்ளிகேஷன்களை தரவிறக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .

இதை தரவிறக்க : BLACKMART ALPHA


====================================================================
YOSI (யோசி )


   தமிழில் விடுகதைகள் , புதிர்கள் , பழமொழிகள் , சிந்தனைகள் , பாடல்கள் என அனைத்தையும் ஒருங்கே கொண்ட அழகான அப்ளிகேஷன் இது. பல புதிய கருத்துகள் மூலம் நம் சிந்தனையை துண்டுகிறது. பழமொழில் பல நாம் அறியாதது. நல்ல பொழுதுபோக்கு அப்ளிகேஷன் இது .
இதை தரவிறக்க : YOSI (யோசி )

===============================================



RACE  THE TRAFFIC (GAME)


   விளையாட்டு பிரியர்களுக்கானது இந்த அப்ளிகேஷன். அழகான 3D யில் அருமையான இசையில் கார் ஓட்டும் விளையாட்டு இது. மிக சிறிய அளவுள்ள , நினைவகத்தில் கொஞ்சமே எடுத்து கொள்ளும் ஆனால் அருமையான விளையாட்டு இது. இது குழந்தைகளை மிகவும் கவரும்.

இதை தரவிறக்க : RACE THE TRAFFIC (GAME)