நல்ல நூல்கள் மிக சிறந்த நண்பர்களுக்கு சமம் என சொல்வார்கள். நம்ம தலைவர் சுஜாத்தா கூட "தினமும் குறைந்தது 20 பக்கங்கள் படிப்பதை வாடிக்கையாக கொள்ளுங்கள் , அது எந்த நூலாக இருந்தாலும் பரவாயில்லை " என சொல்லுவர் . ஆனால் இன்று நூல்கள் விற்கும் நிலையில் காசு கொடுத்து நூல் வாங்குவது சிலருக்கு கஷ்டமாக உள்ளது .(விலைவாசி அப்படி ...)
படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும், படித்த நூலை பற்றி விரிவாக விவாதிக்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு இலவசமாக நூல்கள் வழங்க ஒரு பதிப்பகம் முடிவுசெய்துநூல்களை இலவசமாக வழங்கிவருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா ?
ஆம் , கிழக்கு பதிப்பகம் தான் அந்த வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது . இது ஒரு தரமான பதிப்பகம் என்றும் , பல ஆயிரகணக்கான நூல்களை வெளியிட்ட பெரிய பதிப்பகம் என்பதும் அனைவருக்கும் தெரியும் .இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைதான் இந்த இலவச நூல்கள் .
எப்படி பெறுவது ?
- முதலில் இங்கு கிளிக் செய்து கிழக்கு பதிப்பகத்தின் அபிஷியல் வலைத்தளம் செல்லவும் .
- இங்கு பல நூல்களின் விவரங்கள் இருக்கும் . அதில் உங்களுக்கு பிடித்த புத்தகத்தை தெரிவு செய்யவும் .
- அதன் கிழே ஒரு படிவம் இருக்கும் . அதனை கவனமாக நிரப்பவும் .
- "submit" பட்டனை அழுத்தவும் .
- அவ்வளவுதான் .நான்குநாட்களில்நீங்கள்கேட்டபுத்தகம்உங்கள்இல்லம்வந்துசேரும் .
நிபந்தனை :
- இலவசமாக வாங்கும் புத்தகத்தை படித்து அதை பற்றி 400 - 1000 வார்த்தைகளுகுள் ஒரு மதிப்புரை எழுத வேண்டும் .
- நீங்கள் எழுதும் மதிப்புரை அவர்கள் தளத்தில் வெளியிடப்படும் .
டிஸ்கி : ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகங்கள் வாங்கலாம் . ( நான் இதுவரை இரண்டு வாங்கியுள்ளேன் )