இன்று
பெரும்பாலான மக்களிடம் இருக்கும் ஒன்று மொபைல். “செல் இல்லாத
மனிதன் அரைமனிதன் “ எனும் நிலை
வந்துவிட்டது . அதிலும் சுமார்ட் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை இப்போது
அதிகரித்துக்கொண்டே வருகிறது . இன்னொரு பக்கம் மொபைல் திருட்டு போவது அல்லது தவற
விடுவதும் அதிகமாகிறது .
இவ்வாறு
திருட்டு / காணாமல் போன உங்கள் மொபைலை எளிதில் கண்டுபிடிக்க ஒரு அப்ளிகேஷன் உள்ளது
. அதுதான் 360 SECURITY,
- இதை GOOGLE PLAY STORE இல் அல்லது இங்கே கிளிக் செய்து தரவிரக்கிகொள்ளவும் .
- இதை உங்கள் போனில் நிறுவிக்கொள்ளவும் .
- அதில் உள்ள மெனுவில் ANTI-THEFT என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும் .
- அதில் உங்கள் விருப்பமான கடவு சொல்லை (PASSWORD) அமைக்கவும் . இதுக்கு ANTI-THEFT CODE என பெயர்.
- ENABLE ANTI-THEFT என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- உங்கள் மொபைல்லில் சிம் மாற்றபட்டால் எந்த எண்ணுக்கு SMS வரவேண்டும் என செட் செய்யவும் .( உங்கள் வீட்டு எண்ணை அல்லது நண்பர்கள் என்னை கொடுக்கவும் ).
அவ்வளவுதான் , இனி உங்கள் மொபைல் காணாமல் போய் யாராவது அதில் வேறு சிம் கார்ட்
போட்டால் அந்த என்னில் இருந்து நீங்கள் செட் செய்த எண்ணிற்கு ஒரு SMS வரும் . இதன்
மூலம் யார் உங்கள் போனை பயன்படுத்துகிறார்கள் என கண்டுபிடிக்கலாம் .
இதன் பயன்கள் :
·
நீங்கள் SMS மூலம்
உங்கள் போனில் உள்ள தகவல்களை உடனே அழிக்கலாம் .
·
SMS மூலம் போனை
லாக் செய்யலாம் .
·
GOOGLE MAP மூலம்
போனின் இடத்தை கண்டுபிடிக்கலாம் .
·
போனில் அலாரத்தை
உடனே செயல்படவைக்கலாம் . இதனால் எடுத்தவர்கள் அருகே இருந்தால் எளிதில்
கண்டுபிடிக்கலாம் .
·
இதில் தேவையில்லாத
கால் , SMS பிளாக் செய்யமுடியும் .
·
வைரஸ் எதிர்ப்பு
புரகிராம் உள்ளடங்கியது .
·
தேவையில்லாத JUNK
FILE, TEMP FILE ஆகியவற்றை அழிக்க வசதி உண்டு .
·
போனின் வேகத்தை
அதிகரிக்க உதவுகிறது .
குறிப்பு :
நீங்களே ஏதாவது காரணத்தால் சிம் மாற்ற வேண்டி இருந்தால் ANTI-THEFT ஐ DISABLE
செய்துவிட்டு மாற்றவும் . இல்லை எனில் நீங்கள் போடும் சிம்மில் இருந்தும் SMS
போகும் . SMS க்கு காசும் போகும் ..
Tweet |
பயனுள்ள பகிர்வு! நன்றி!
ReplyDeleteTHANKS GOOD ARTICLE VERY USEFULL
ReplyDeletethankz for your information ;)
ReplyDelete