என்னடா எல்லாரும் , எல்லா ஊடகமும் மறக்காம நாளை ஓட்டு போடுங்கனு கத்திக்கிட்டு இருக்கு நீ ஓட்டு போடாதிங்கனு சொல்ற என்ன ஆச்சு உனக்குன்னு பார்கின்றிர்களா ? மேலே படியுங்கள் ..
தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
- நம்ம சாதி , மதத்தை சார்த்தவர்னு சொல்லி யாருக்கும் தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
- கட்சிமேல் பாசம் இருக்கட்டும் , அதுக்காக அந்த கட்சி எவ்வளவு ஊழல் செய்தாலும் பரவாயில்லை அவனுக்கு தான் என் ஓட்டு என எண்ணி தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
- கடவுள் இருக்குனு சொல்றவனை நம்பலாம் , இல்லைன்னு சொல்றவனையும் நம்பலாம் , அதுபோல தான் மதமும் . இந்த மதசார்பின்மையை பேசி ஒரு குறிபிட்ட மதத்திற்கு ஜால்ரா அடிக்கும் கட்சிக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
- எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிகொள்ளுங்கள் ஆனா அவர்களுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
- முன்பே உங்கள் தொகுதில் வெற்றிபெற்றவராக இருந்தால் அவர் செய்த நன்மைகளை எண்ணிப்பாருங்கள் , அப்படி ஒண்ணுமே செய்யலைனா அவருக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
- தன் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல் அடுத்தவரை குறைசொல்லியே ஒட்டுகேட்கும் , கேட்ட கட்சிகளுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
- நமக்கு பிடிக்காத முடிவு என்றாலும் அதில் உறுதியா உள்ள கட்சியை நம்புங்கள் , ஆனா டெல்லியில் ஒரு முடிவு , இங்கே வந்தா பல்டி என இருக்கும் கட்சிகளுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
- நமது தொகுதியில் நிற்பவர் யாரும் சரியில்லை என எண்ணி நோட்டாவுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
- நோட்டாவுக்கு பதில் சுயேட்சைக்கு போடுங்கள் , இரண்டுமே வீணாகத்தான் போகும் , ஆனால் சரியில்லாத வேட்பாளர்க்கும் மட்டும் தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
நமது ஓட்டை நல்லவர்களுக்கு போட்டு நாட்டை நல்வழி படுத்துவோம் . மறக்காமல் ஓட்டு போடுங்கள் .
Tweet |
அருமை ராஜா .அப்படியே யாருக்குஆதரவுன்னும் ..
ReplyDeleteஅருமை ராஜா .அப்படியே யாருக்குஆதரவுன்னும் ..
ReplyDeleteஅருமை! நானும் புதியவர் ஒருவருக்கு வாக்கிட முடிவு செய்துள்ளேன்! பார்க்கலாம்!
ReplyDeleteசரிதான் ...
ReplyDelete