இன்று முகநூல் கணக்கு இல்லாதவர்களையும், ஆண்ட்ராய்ட் போன் இல்லாதவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு இரண்டும் பிரபலமாக உள்ளது. முகநூல் உள்ள வீடியோகளை அப்படியே பார்க்கும் வசதி இப்போது உள்ளது. ஆனால் தேவையான வீடியோகளை டவுன்லோட் செய்ய சில அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. இதில் மிக எளிதான அப்ளிகேஷனை பற்றிதான் பார்க்க போகிறோம்.
MyVideoDownloader :
1. இந்த அப்ளிகேஷனை இங்கே தரவிறக்கவும். அல்லது play store இல்
தரவிறக்கவும்.
2. அப்ளிகேஷனை திறந்து உங்கள் முகநூல் கணக்கின் மூலம்
உள்நுழையவும்.
3. News Feed என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.
4. நீங்கள் டவுன்லோட் செய்யவேண்டிய வீடியோவை தெரிவு செய்யவும்.
5. மேலே உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.
6. உங்கள் வீடியோ தானாக உங்கள் போன் மெமரி கார்டில் சேமிக்கப்படும்.
நீங்கள் விரும்பினால் மாற்றிகொள்ளலாம்.