> என் ராஜபாட்டை : கடவுள்

.....

.
Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts

Thursday, September 29, 2011

காசு இருந்தால்தான் கடவுள் தரிசனமா ?



இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் உள்ள மனைவி வீட்டிற்க்கு சென்றேன். அவர்கள் வீட்டு அருகே உள்ள திருவானைகாவல் கோவிலுக்கு செல்வோம் என மனைவி ஆசைப்பட்டதால்( மிரட்டியதாக யாரும் நினைக்க வேண்டாம்) சென்றேன். அங்கு நடந்த சில விஷயங்கள் மனதுக்கு கஷ்டமாக இருந்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கட்டண தரிசனம் :

சாமியை அருகில் காண 10 ரூபாய் கட்டனம், இன்னும் அருகே சென்று பார்க்க 50 ரூபாய். விஷேஷ நாட்களில் கூட்டத்தை கட்டுபடுத்த வேண்டுமானல் கட்டனம் விதிக்கலாம். கூட்டமே வராத, சாதாரன நாட்களில்கூட ஏன் எந்த நடைமுறை?



அப்படியே கட்டணம் விதித்தே தீரவேண்டுமெனில் ஒரு முறை எடுக்கும் டிக்கெட் அந்த கோவிலில் உள்ள அனைத்து சாமியையும் தரிசிக்க போதுமானது என வைக்கலாமே. ஒவ்வொறு சாமிக்கும் ஒவ்வொறு டிக்கெட் எடுக்கவேண்டும் என்பது எந்தவிததில் சரி ?

சில்லரைக்கு பதில் விபூதியா?

கடைகளில் ஒரு ரூபாய் சில்லரை இல்லையெனில் அதற்க்கு பதில் சாக்லெட் தருவார்கள். அதுபோல 10 ரூபாய் குடுத்து அர்ச்சனை டிக்கெட் வாங்கினால், 3 ரூபாய்க்கு குங்கும பொட்டலம் தருகிறார்கள். அர்ச்சனை முடிந்து பூசாரியே குங்குமம் தரும் போது இது வேறு எதுக்கு?




திருமணஞ்சேரி கொடுமை :

இதைவிட பெரிய கொடுமை திருமணஞ்சேரியில் சாமி கும்பிடுவது.
ஊருக்குள் வரும் போதே ஊள்ளுர்வாசிகள் கோவில் நிதி என ஒரு amount ஆட்டை போடுவார்கள். 

பார்க்கிங் வசதியே இருக்காது ஆனால் பார்கிங் கட்டணம் என கொள்ளை. 

அர்ச்சனை டிக்கெட் 20 

விளக்கு ஏற்ற 20 

பூஜை முடிந்ததும் மோளம் அடித்தவர்களுக்கு 20(கோவிலில் சம்பளம் தனி)

ஊள்ளே விளக்குக்கு தனி amount 

          ஒருமுறை சாமிதரிசனம் செய்ய குறைந்தது 100 வேண்டும்.






ஏங்க !! கடவுள் எல்லாருக்கும் சமம்னா காசு குடுத்தாமட்டும் நல்ல பாக்கலாம் என்பது என்ன நீயாயம் ? என சமதர்மம் ?








Sunday, September 25, 2011

விநாயகரை கைது செய்து விசாரணை நடத்தும் ஹிட்லரின் நாஜி உளவுத்துறை : ஆஸ்திரேலிய அட்டூழியம்



ஆஸ்திரேலியாவில் இந்து கடவுள்களை அவமதிப்பது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் பெண் கடவுள் லட்சுமியின் படத்தை நீச்சல் உடையில் பொறித்து சிட்னியில் நடந்த பேஷன் ஷோவில் உலா விட்டனர். அதற்கு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய பின் மன்னிப்பு கேட்கப்பட்டது. இந்நிலையில் விநாயகரை அவமதித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் வருகிற 29-ந்தேதி திருவிழா நடக்கிறது.
 
இதை தொடர்ந்து அங்குள்ள ஒரு நிறுவனம் ஒரு காமெடி நாடகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதில், இந்து கடவுள் விநாயகரை கேலி கிண்டல் செய்து காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது விநாயகரை கைது செய்யும் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி உளவுத்துறை அவரிடம் விசாரணை நடத்தி துன்புறுத்துவது போன்ற கதை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரபரப்பு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
அமெரிக்காவை சேர்ந்த இந்து பிரமுகர் ராஜன்சேத் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். விநாயகர் உலகம் முழுவதும் வாழும் இந்துக்களின் கடவுள். அவரை ஹிட்டலரின் நாஜி உளவுத்துறை விசாரணை நடத்துவது போன்று கற்பனை செய்து பார்ப்பது கற்பனைக்கும் எட்டாதது. விநாயகரை கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபட வேண்டுமே தவிர மேடையில் ஏற்றி கேலி செய்து சிரிக்ககூடாது.
 
அவர் ஒரு கேலி பொருள் அல்ல. இந்துக்களால் வணங்கப்படும் கடவுள் என தெரிவித்துள்ளார். இது குறித்து நாடக தயாரிப்பாளர் ஆலிஷ் நாஷ், இந்துக்களை அவமதிப்பது எங்கள் நோக்கம் அல்ல. மக்களை மகிழ்விப்பதற்காக தான் இந்த நாடகத்தை நடத்துகிறோம். அந்த காட்சிகளை மிகவும் கவனத்துடன் கையாள இருக்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார். 
 
நன்றி : KINGTAMIL.Com