தேர்தல்
வரும் சமயம் அரசியல்வாதிகளால் அதிகமாக உபயோகிக்கப்படும் வார்த்தை “மதசார்பின்மை “.
இவர்கள் முழுமனதுடன் தன இதை சொல்கிறார்களா ? இல்லை அரசியல் நாடகமா என மக்களுக்கே
தெரியும் . உண்மையில் எது மதசார்பின்மை , இவர்கள் சொல்லும் வாதங்கள் சரியா என
பார்க்கலாம் வாங்க .
எனது கேள்விகள் :
1.
தனது கட்சி அல்லது இயக்கத்து பெயரில் சாதி
/ மத பெயரை இணைத்து கொண்ட இயக்கம் / கட்சி எப்படி மதசார்ப்பற்ற கட்சியாகும் .
உதாரணம்
: இந்து மக்கள் முன்னணி , முஸ்லிம் முனேற்ற கழகம்
2.
ஒரு மதத்தின் பண்டிக்கைக்கு வாழ்த்து
சொல்லுவது தவறு என சொல்லிவிட்டு மற்ற மத பந்திக்கு சாரி பண்டிக்கைக்கு முந்துவது
(வாழ்த்து சொல்ல ) எப்படி மத சார்பின்மை யாகும் ?
உதாரணம்
: திபாவளி, கிருஷ்ண ஜெயந்திக்கு “விடுமுறை தின “ சிறப்பு நிகழ்சி என போடும்
கலைஞ்சர் டிவி மற்ற மத பண்டிக்கைக்கு அந்த பண்டிகை பெயரில் சிறப்பு நிகழ்சி
போடுவது .
3.
ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்களை
கிண்டல் செய்து விட்டு அடுத்த மதத்து அடையாளங்களை ஓட்டுக்காக மாட்டிகொள்வது எப்படி
மதசார்ப்பின்மையாகும் ?
உதாரணம்
: ஒரு M.L.A குங்குமம் வைத்ததை கிண்டல் செய்துவிட்டு ரம்ஜான் கஞ்சி குடிக்க குல்லா
போடுவது .
4.
ஒரு மதத்தின் நம்பிக்கையை அல்லது அவர்கள்
கடவுள்களை கிண்டல் செய்துவிட்டு மற்ற மதத்தினரிடம் நற்பெயர் வாங்க எந்த கேள்வியும்
கேட்காமல் வாய்மூடி இருப்பது எப்படி மதசார்ப்பின்மையாகும் ?
“ராமன்
என்ன இஞ்சினியரா ?” என புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து கேள்வி கேட்பது . மற்ற
மதத்தில் இது போல பல கேட்கலாம் ஆனால் மற்றவர்கள் நம்பிக்கை கெடுக்க நான்
அரசியல்வாதியில்லை )
5.
ஒரு மதத்திற்கு எதிரான கலவரத்தை /
பிரச்சனையை மட்டும் ஊதி பூதாகரமாகி , மற்ற பிரச்சனைகளை மறக்கடிப்பது எப்படி
மதசார்ப்பின்மையாகும் ?
குஜராத்
கலவரத்தை பற்றி வாய்கிழிய பேசும் காங்கிரஸ் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை
பற்றி வாய்திறப்பதில்லை .காங்கிரஸ் மட்டுமல்ல குஜராத் கலவரத்தை பற்றி பேசும் பலர்
வசதியாக சீக்கியர்களை மறந்துவிடுகின்றனர் . கலவரம் , உயிர் , கஷ்டம் ,நஷ்டம் எது
என்றாலும் அது அனைவருக்கும் போது தானே ? இரண்டு கலவரத்திலும் பாதிக்கபட்ட
மக்களுக்குத்தானே குரல் கொடுக்க வேண்டும் . பிரதமராக ஒரு சீக்கியர் இருந்தும் கூட
அதைப்பற்றி வாய்திறக்காமல் குஜராத்தை பற்றி பேசுகிறார் .
கடைசியாக
ஒரு வார்த்தை ..
“என் மதம் பெரிது என
சொல்வது பிரச்சனை இல்லை
என் மதம் மட்டும்தான்
பெரியது என சொல்வதுதான் பிரச்சனை “
==============================================================
மாணவர்களுக்காக ஒரு தளம் சென்று பாருங்கள்
==============================================================
மாணவர்களுக்காக ஒரு தளம் சென்று பாருங்கள்