குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்
ஒரு நாளைக்கு ஆறு முறை சிறுநீர் கழித்தால் குழந்தைக்கு போதுமான தாய் பால் கிடைக்கின்றது என அர்த்தம்
ஊரல்மருந்து , உறமருந்து , போனிசான் , கிரப்வாட்டர் , குளுகோஸ் தண்ணீர் , டப்பா பால் தேன் இவைகளை கொடுக்க கூடாது
தாய் முருங்கைகாய் , முள்ளங்கி , அவரைக்காய், கொத்தவரங்காய் , மாங்காய் , மாம்பழம் இவைகளை சாப்பிட கூடாது .
தொப்புள்கொடி விழுந்த பின் அந்த இடத்தில் துணி வைத்து கட்டவோ , பவுடர் வைத்து அழுத்தவோ கூடாது .
பேபி சோப்பைவிட பயித்தமாவு தேய்த்து குளிப்பாட்டுவது நல்லது
தலைக்கு நல்ல தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள் , பேபி ஆயில் வேண்டாம்
ஆறு மாதத்திற்கு பின் வீட்டில் தயாரித்த திட உணவுகள் கொடுக்கலாம்
எக்காரணம் கொண்டும் குழந்தைக்கு சுய வைத்தியம் செய்யாதீர்கள்
டிஸ்கி : இந்த பதிவில் உள்ள படங்கள் முதல் மூன்றும் என் மகன் சரண் , மீதி உள்ளவை என் தங்கை மகள் ஸ்ரீ தர்ஷினி
இதையும் படிக்கலாமே :

