> என் ராஜபாட்டை : பதிவர் சந்திப்பு

.....

.
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Monday, December 16, 2013

இந்த வருடம் : திரும்பி பார்க்கிறேன் (தொடர்பதிவு )





பதிவுலகில் தொடர் பதிவு வந்து நீண்ட நாள் ஆகிவிட்டது என சில நண்பர்கள் சொல்லியதால் , இந்த வருடத்தில் எனக்கு நடந்த சில நல்ல , கஷ்டமான , சந்தோஷமான , துக்கமான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . இதுபோல நீங்களும் தொடருங்கள் .

நல்ல விஷயங்கள் :
  • எங்கள் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது .
  • கணினி பாடத்தில் 200/200  எடுத்து எனது மாணவன் என் பெயரை காப்பாற்றியது .
  • சென்னை பதிவர் சந்திப்பில் பல நண்பர்களுடன் உரையாடியது .
 
  • சீனு , அரசன் ,சிவா , ரூபக் , குடந்தை சரவணன் , ஸ்கூல் பையன் , சதீஷ் , ரேவதி சதீஷ் , மதுமதி , கே .ஆர்.பி செந்தில் ,சதீஷ் சங்கவி ,ஆரூர் மூனா செந்தில் , கேபிள் சங்கர் , அப்துல் பாசித் ,சங்கரலிங்கம் சார் , பிரபு கிருஷ்ணா , வெற்றி வேல், கணேஷ் சார், வீடு சுரேஷ் , பிரகாஷ் (தமிழ்வாசி),சென்னை பித்தன் , பட்டிகாட்டான் ,உண்மைத்தமிழன் ,மயிலன் ,ராஜி , சசிகலா ,  கோகுலத்தில் சூரியன் வெங்கட் , இனியவை கூரல் , இவர்களுடன் அரட்டை .
 
  • பிலாசபி பிரபாவின் உபசரிப்பு . (நக்ஸ் மூலம் பிரியாணி ஊட்டியது ).
 
 

  • கோவை ஆவியின் அறிமுகம் . பல புகழ்பெற்ற பதிவர்கள் சந்திக்க முடிந்தது .
 

  • விகியுலகம் வெங்கட் அவர்களை முதல் முறையாக சந்தித்தது ..

விரும்பத்தகாத நிகழ்வுகள் :

  • சொந்தக்காரன் என நம்பி வீட்டுக்குள் விட்ட ஒருவனால் 13 பவுன் நகைகள் திருட்டு போனது . திருட்டுப்போனது ஒருபுறம் என்றால் அவனே எங்கள் கூட சேர்ந்து தேடியது , அவனை வீட்டுக்கு காவல் வைத்துவிட்டு நாங்கள் காவல் நிலையம் சென்றது . அதை தனி பதிவாக போடலாம் .

  • சரண் வெண் நீரை கையில் ஊற்றி கொண்டது . ஒருவாரம் மிகவும் மனுளைசலை தந்தது . மூன்று நாட்கள் மருத்துவமையில் அவன் இருந்ததும் , அங்கு கையை சுத்தம் செய்து கட்டுபோடும் பொது அவன் கதறியதை கேட்க்கபிடிக்காமல் வெளியே வந்துவிடுவேன் . எங்க அப்பா மரணத்திக்கு பின் அதிகம் அழுதது அப்போதுதான் .
 
 

  • எங்கள் பள்ளி மாணவன் (முன்னாள் ) ஒருவன் மழை நேர விபத்தில் இறந்தது , மாணவி (முன்னாள் ) தற்கொலை செய்து கொண்டது மறக்கமுடியாத விஷயம் .
  • காலையில் சரணுடன் விளையாடி விட்டு போன நண்பன் இரவு சாலை விபத்தில் மரணம் . அவன் சிரிப்பு அப்படியே கண்ணில் நிற்கின்றது .

டிஸ்கி : நண்பர்களே உங்களுக்கு இதுபோல சில அனுபவங்கள் இருக்கும் அதை தொடருங்கள் .

டிஸ்கி : இதை யார் வேண்டுமானாலும் தொடரலாம் . நான் சிலரை அழைக்கிறேன் அவர்களும் நேரம் இருந்தால் தொடரலாம் .

கோவை ஆவி

தளிர் சுரேஷ்

ஸ்கூல் பையன்

காணமல் போன கனவுகள் ராஜி

Sunday, September 1, 2013

பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன ?

வாசலில் வரவேற்ற பாசித் , கலாகுமாரன் ,கோகுல்



பாசமுடன் வரவேற்ற தலைகள் , சிவா , நக்ஸ் , சென்னை பித்தன்


கோவை சதீஷ் மற்றும் தீவிரவாதி சதீஷ்


குழந்தை பதிவர் (ஹீ .. ஹீ நான்தான் ) சுய அறிமுகம்

தல சீனு , தீவிரவாதி சதீஷ் , வெற்றிவேல்

பதிவர் திருவிழாவில் நடந்ததை பற்றி எழுத வேண்டுமென்றால் நிறைய எழுதவேண்டும் . அதை அடுத்த பதிவில் பார்க்கலாம் .

நன்றி :

சீனு
சிவா
ரூபக் ராம் 
மதுமதி
சதீஷ்
வெற்றி வேல்
அப்துல் பாசித்
தமிழ்வாசி
ஆரூர் மூனா செந்தில்
சதீஷ்
சங்கவி பிரபா
சங்
கரலிங்கம் ஐயா
பிரபு கிருஷ்ணா

ஸ்கூல் பையன் 
மற்றும் பலர்


விரைவில் விரிவான பதிவு

Tuesday, August 27, 2013

பதிவர் திருவிழாவில் தனித்திறமை காட்டபோகும் பதிவர்கள் விவரம்







இரண்டாவது வருடமாக தொடர்ந்து சிறப்பாக நடக்க உள்ளது பதிவர்கள் திருவிழா . இதில் வெறும் பதிவர்கள் சந்திப்பு மட்டும் இல்லாமல் பல முக்கியநிகழ்சிகள் நடைபெற யுள்ளது . 

1. புத்தகவெளியிடு 
2. பதிவர்களின் தனித்திறன் காட்டும் நிகழ்ச்சி 
3. சிறப்பு விருந்தினர் பேச்சு 

பதிவர்களின் தனித்திறன் காட்டும் நிகழ்ச்சி :

இதில் பல பதிவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தயுள்ளனர் . அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது ரகசியமாக வைத்திருந்தனர் . ஆனால் சில நல்ல உள்ளங்களால் அது இப்போது தெரிந்துவிட்டது அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்சிகள் உங்களுக்காக இதோ ..


"பிலாசபி பிரபா "



          இவர் தலைமையில் அழகில் சிறந்தவள்  காஜலா ? ந்ஸ்ரியாவா ? என்ற பட்டிமன்றம் நடைபெற போகிறது . இதில் சிறப்பு என்ன வென்றால் இருவர் சார்பாகவும் இவரே பேசுவார் . நடுவர் கூட இவர்தான் .


"மெட்ராஸ் பவன் " சிவா , கவிதைவிதி சௌந்தர் , கேபிள் சங்கர் :


            "மெட்ராஸ் பவன் " சிவாகேபிள் சங்கர் நடத்தும் கையேந்திபவனில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சண்டை போட அங்கு "மாமூலாக " சாப்பிட வரும் போலீஸ்கார் (!!!) சௌந்தர் என்ன செய்கிறார் எனபதே நிகழ்ச்சி .


"மயிலிறகு " மயிலன் :

          தன்னை பார்க்கவரும் பேஷண்டுகளுக்கு கவிதை சொல்லியே குணபடுத்த முயற்ச்சி செய்யும் மயிலன் காதல் தோல்வியில் தற்கொலை முயற்சியில் தோற்ற ஒருவருக்கு கவிதை சொல்கிறார் .

           " அருகம்புல் போல
            நாம் வளர்த்த - காதலை
           உன் அப்பன்
          எருமை மாடு போல
         மேய்ந்துவிட்டான் "

( அந்த பேஷன்ட் அவுட் என்பது தனி கதை )



 "காணாமல் போன கனவுகள் " ராஜி :

          வீட்டில் தான் சமைப்பதில்லை என்ற உண்மையை பதிவர்களிடம் இருந்து மறைக்க "வெந்நீர் " போடுவது எப்படி என சொல்லிதர போகிறார் . இதற்காக இவர் கடந்த சில மாதங்களாக பயிற்சி எடுத்துவருகிறார் என்பது சிறப்பு செய்தி .

"கரை சேரா அலைகள் " அரசன் மற்றும் தீவிரவாதி "சதீஷ் " :

                இருவரும் பாட்ஷா படத்தில் வரும் காட்சியை நக்கல் செய்ய போகிறார்கள் . "என் பேரு அரசன் , எனக்கு இன்னொரு பேரு இருக்கு ..." என அதிரடி டயலாக் விடபோகிறார் . அவர் ஒத்திகை பார்க்கும் போது எடுத்த படம் தான் கீழே உள்ளது .





ஆரூர் மூனா  செந்தில் :

            இவர் ஒரு திறமையான (!!!!) குச்சிபிடி நடன கலைஞ்சர் . "தகிட திகட தந்தான " என்ற கமலின் பாடலுக்கு நடனமாட போகிறார் . ஆடுவதற்கு சரியான குச்சி கிடைக்காமல் தடுமாறுவதாக கேள்வி . அல்லது சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு ஆடலாமா என குழப்பத்தில் உள்ளார் .








சீனு மற்றும் மதுமதி :

சீனு ஹீரோவாக நடிக்க போகும் "தலைவா " பார்ட் II க்கு பாடல் எழுத நம்ம மதுமதியை அழைக்கிறார்கள் . சீனுவை பார்த்ததும் பாட்டு எழுத முடியாது வேண்டுமாலாம் ஒப்பாரி எழுதுறேன் என சொல்ல , சீனு கோவமாக (கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சி ) கேட்டதால் அவர் பாடல் எழுதுகிறார் . படத்தின் துவக்க பாடலாக இது உள்ளது .

"சீனுனா சும்மா இல்லடா
அவன் இல்லாம இந்த கூட்டம் இல்லடா

கண்ணாடி போட்டவண்டா - பல
கன்னி பெண்களை கட்டி போட்டவண்டா

அடிச்சா அதிரடி
கடிச்சா வெறி கடி

............."

 


இறுதியாக திரு நக்ஸ் அவர்களும் பன்னிகுட்டி அவர்களும் :

              இருவரும் விஜய் நடித்த சுறா படத்தை பார்த்துவிட்டு மயக்கத்தில் இருக்கு, போது கஷ்டமர் கேரில் இருந்து வரும் போனுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என மக்ஸ் பண்ணிகுட்டிக்கு ட்ரைனிங் தரும் நிகழ்ச்சி .





டிஸ்கி : இது முற்றிலும் நகைசுவைகாகவே (!!!!) . சிரிப்பு வராட்டியும் சிரிச்சுடுங்க ஆனா கோவபடாதிங்க ..


Friday, April 27, 2012

நெல்லை : பதிவர்கள் செய்த கலக்கல்கள்







அன்பு நண்பர் யானைகுட்டியுடன் உங்கள் தலைவர் (ஹீ ஹீ நான்தான் )- பெயர்தான் யானை குட்டி ஆனால் ஆளு பூனைக்குட்டி போல பொறுமை .



நண்பர் சௌந்தர் , துபாய் ராஜாவுடன் , சிபி


GPRS இல்லாத மொபைல்ல கூட போஸ்ட் போடுற சி பி இன் திறமையை கண்டு வியக்கும் நக்கீரன் , விட்டா போதும் என இருக்கும் சம்பத்


பிகரை பார்த்ததும் கண்ணாடி போட்டுதான் போஸ் குடுப்பேன் என அடம்பிடித்த மனோ , சி பி , இவர்களுடன் பச்சகுழந்தைகள் கூடல் பாலா மற்றும் நான் .


நண்பேண்டா ...


இந்த தண்டவாளத்துல “சரக்கு” ரயில் வருமா என ஆவலுடன் பார்க்கும் நக்கீரன் .

ஒரு  கல்யாணத்துக்கு போய்ட்டு வந்து இவனுங்க பண்ணற அழும்பு தாங்கலா ....


டிஸ்கி : நாங்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டாலும் பரிசு பொருளில் “ தமிழ் பிளாக்கர்ஸ்” என்றுதான் போட்டோம் .