> என் ராஜபாட்டை : credit card

.....

.
Showing posts with label credit card. Show all posts
Showing posts with label credit card. Show all posts

Friday, March 11, 2011

கணக்குமிகுதியை காட்டும் புதியவகை கிரடிட் கார்டுகள்



தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிக மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. அந்தவகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்ட் நிதித் துறையை இலகுபடுத்துவதில் அடுத்த புரட்சியொன்றை ஏற்படுத்தவுள்ளது என்றால் மிகையாகாது. புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கிரடிட் கார்டில் அப்படி என்னதான் விசேடம் என அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? இந்த புதிய வகை கிரடிட் கார்டில் ஒரு திரை உண்டு.
 
அதில் எமது கணக்கு மிகுதியை காட்டும். மிக மெல்லிய நுண்செயலியுடன் கூடிய இந்த கிரடிட் அட்டை பெட்டரி (மின்கலம்) மூலம் இயங்குகிறது. இந்த பெட்டரிகள் (மின்கலம்) 3 வருடம் வரை நீடித்த பாவணை கொண்டதாம். இந்த புதியவகை கிரடிட் கார்டை அதன் சொந்தக்காரருக்கு மாத்திரமே பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய கிரடிட் கார்டின் வருகைக்குப்பின்னர் இனிமேல் கிரடிட் கார்ட் கொள்ளையர்களுக்கு இலகுவாக பணத்தை திருட முடியாதாம்.
 
அதாவது தனிப்பட்ட இரகசிய குறியீட்டை வழங்கிய பின்னரே இதன் திரை செயற்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை “சிடி வங்கி” புதிய வகை 2ஜி கார்டை வெளியிட்டுள்ளது. இது காந்த அமைப்பு கொண்ட கீலம். இதில் பொத்தான்கள் அமைந்துள்ளன. உலகளாவிய ரீதியில் 1.7 பில்லியன் மக்கள் கிரடிட் கார்டை பாவிக்கிறார்களாம்.
 
thanks : kingtamil