> என் ராஜபாட்டை

.....

.

Sunday, December 30, 2012

Facebook கலாட்டா




சமிபத்தில்  நான் முக புத்தகத்தில் ரசித்தவை. உங்கள் பார்வைக்கும் 



கைபேசியில்  துவங்கிய 
நம்  காதல் - உன் அண்ணன் 
கை பேசியதால் 
முறிந்தது .

# என்னா அடி ????
=======================================================================

கடவுள் : உனக்கு என்ன வரம் வேண்டும் ?

பக்தன் : அழகான மனைவி வேண்டும்.

கடவுள் : நி முஸ்லிம்னா கத்ரினா தாரேன், இந்துனா அனுஷ்கா தாரேன், கிருத்துவன்னா ஜெனிலியா தாரேன். உன் பெயர் என்ன?

பக்தன் : அப்துல் நாராயன பெர்ணாட்டஸ்

கடவுள் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!

====================================================================

அம்மா : ஹிட்லர்னா யாரு ?

மகன்  : தெரியாது..

அம்மா : கொஞ்சம் படிப்புல கவனமா இரு.

மகன் : பிரியா ஆண்டினா யாரு?

அம்மா : தெரியாது..

மகன் : கொஞ்சம் அப்பா மேல கவனமா இரு.
========================================================================

OFFICER : யோவ்… உன் வீட்டுல பீஃஸ் போயி ஒரு மாசம் ஆகுது இப்பதான் வந்து COMPLIANT பன்னுற ?

சதிஷ் : சாரி  சார் .. நான் வழக்கமான POWER CUT ணு நினைத்தேன்.

(சதிஷ் தமிழ் நாட்டுகாரர் என்பது குறிப்பிடதக்கது)
===============================================================

கவிதை  :

அருகம்புல் போல நாம் வளர்த்த காதலை
உங்க அப்பன்
எருமை மாடு போல மேய்த்து விட்டான் ..

=====================================================================



இஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பெண்கள் தப்ப முடியும், பாலியல் குற்றங்களையும் குறைக்க முடியும் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார்.

#நீங்களும் உங்க பழைய இளைய ஆதினம் நித்தியும் மூடிக்கிட்டு இருந்தாலே பாதி பிரச்சினை பெண்களுக்கு இருக்காது
===================================================================
கருணாநிதி சொன்னதுபோல் விரைவில் பிரதமராவேன் -ப.சிதம்பரம்.

என்னது கருணாநிதி சொன்னது போல விரைவிலா?அய்யயோ மன்மோகன்ஜி இனி தனியா வாக்கிங் போகாதிங்க.எதோ ப்ளான் இருக்கு.
======================================================================


அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ்
விளையாட்ட
பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ
வேனும்ன எதாவது கேட்டு பாரு

இந்தியன் : சொல்லு டென்னிஸ்
நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?

அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம -்
நல்ல சாவே வராதுடா !
======================================================================================

ஹலோ சூரியன் FM ஆ..??

வணக்கம் சார்.. நான் செங்கோட்டைல இருந்து வரதராஜன் பேசுறேன்..!!

சொல்லுங்க சார் நீங்க யாருக்கு மெசேஜ் சொல்ல விரும்புறீங்க..??

என் பொண்டாட்டி என் கூட சண்டை போட்டுட்டு கதவை பூட்டிட்டு கோச்சிக்கிட்டு உள்ள இருக்கா சார்.. அவளை கதவை திறக்க சொல்லுங்க..

அப்புறம் அவளுக்காக "வாடி பொட்டப்புள்ள வெளியே.. என் வாலிபத்தை நோகடிச்ச கிளியே" பாட்டை டெடிகேட் பண்ணுங்க..!!
==========================================================================

இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்

#முதல ...நீ சட்டை போடுய்யா ....
=====================================================================================
 
சர்வர்: சார்...என்ன சாப்பிடுறீங்க?

சாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...
 
சர்வர்: ?.....!.....?.
==================================================================================

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 
  இதையும் படிக்கலாமே :

தண்ணி அடிப்பவர்கள் கவனத்திற்கு ...

 


உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.":


அஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25":

Saturday, December 29, 2012

தண்ணி அடிப்பவர்கள் கவனத்திற்கு ...


மது அருந்துபவர்கள் தெரிந்து கொல்லோவேண்டியவை  , அருந்தாதவர்கள் மற்றவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய தகவல் இது 

நாம் மது (இனி ஆல்கஹால் அல்லது சாராயம் என்று சொல்வோம்) அருந்தும்பொழுது சிறிது அளவினை நம் வயிறு உறிஞ்சிக் கொள்ளும். பெரும்பாலான அளவை சிறுகுடல் உறிஞ்சிக்கொள்ளும். அதனால்தான் உணவு உண்டபின்னர் மது அருந்தினால் போதை ஏற சற்று நேரமாகின்றது.

சாராயத்தின் செறிவினைப் பொறுத்து அது எத்தனை வேகத்தில் நம் உடல் உறிஞ்சிக்கொள்கின்றது என்பது மாறுபடும். உதாரணமாக பீரை விட விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்றவைகள் அதிவேகமாக உறிஞ்சிக்கொள்ளப்படும்.

உறிஞ்சப்பட்ட சாராயம் உடனடியாக நம் ரத்தத்தில் கலந்து உடலெங்கும் ஓடத் துவங்கும். அதே சமயத்தில் நம் உடலும் அதனை வெளியேற்ற சற்று பிரயத்தனப்பட்டு வேலை செய்யத் துவங்கும். சிறுநீரகம் தன் பங்கிற்கு ஓரளவைச் சிறுநீரில் கலந்து வெளியேற்றும். நுரையீரல் தன் பங்கிற்குச் சில அளவை மூச்சுக்காற்றில் வெளியேற்றும். (அதனால்தான் Breath Analyserல் கண்டு பிடிக்கின்றார்கள்)

கல்லீரல் தன் பங்கிற்கு பெரும்பாலான அளவை ஆல்கஹாலை உடைத்து அசிட்டிக் அமிலமாக மாற்றும். இத்தனை பேர் சேர்ந்து அந்த ஆல்கஹாலை வெளியேற்றப் போராடிக்கொண்டிருக்கையில் நாம் அதனை விட வேகமாக அதிக அளவில் மது அருந்தினால்... என்னாகும்?

அதனால்தான் அவைகள் விரைவில் தம் இயல்பில் குன்றி வலுவிழந்து செயலிழந்து போகின்றன. இதுவே ஒரு வகையில் மெதுவான தற்கொலை முயற்சி மாதிரிதான்.

சரி, இனி ஆல்கஹாலின் செயல்பாடு மூளையினை எப்படிப் பாதிக்கின்றது. இரத்தத்தில் கலந்து உடலில் பயணிக்கும் ஆல்கஹால் நம் மூளைக்கும் ஒரு பயணம் போகும்.

அதன் அளவை BAC என்பார்கள். அதாவது Blood Alcohol Concentration. இரத்தத்தில் ஆல்கஹாலின் செறிவு.

BAC 0.03ல் இருந்து 0.12 சதவீதம் இருக்கையில், தான் ஒரு பெரிய பலசாலி, தன்னால் எதுவும் முடியும் என்று ஒரு எண்ணம் வரும். உலகில் எது வந்தாலும் சமாளிக்கும் தைரியம் தன்னிடம் உள்ளது என்று தோன்றும். இந்நிலையில் சரியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. ஏனெனில், மனதில் முதலில் எது படுகின்றதோ அதுவே சரியானதாகத் தெரியும். அந்தச் சூழ்நிலையில் யாராவது எதாவது சொன்னாலும், அதற்கேற்றவாறே மனம் செயல்படத் தோன்றும்.

BAC 0.9ல் இருந்து 0.25 சதவீதம் இருக்கையில், தூக்கம் தூக்கமாக வரும். நினைவுகள் மழுங்கும். சற்று முன் நடந்த நிகழ்வுகள் கூட நினைவில் இருக்காது. வேகமாக இயங்க முடியாது. கையில் இருக்கும் மதுவைத் தடுமாறிக் கொட்டிவிட்டு அதனை வெறித்துப் பார்ப்பார்கள். உடல் ஒத்திசையாது. நிலை தடுமாறும். நடக்கையில் உடல் தள்ளாடும். கண் பார்வை மங்கும். கேட்கும் திறன், சுவை உணர்தல், தொடுதல் போன்ற உணர்வுகளில் தடுமாற்றம் அல்லது இல்லாமல் போய்விடும்.

BAC 0.18ல் இருந்து 0.30 சதவீதம் இருக்கையில், தான் என்ன செய்கின்றோம் என்று அவருக்கே தெரியாது. குழப்பமாக இருக்கும். ஒன்று அதீத பாசக்காரராக மாறி விடுவார் அல்லது அதீத கோபக்காரராக மாறிவிடுவார். அதிகம் உணர்ச்சிவசப்படுவார். பார்வை தெளிவாக இருக்காது. பேச்சுக் குளறும். உடலின் Reflex செயல்படாது. தொடு உணர்வு நன்கு மழுங்கிவிடும். எதையேனும் எடுக்க வேண்டும் என்றால் கை அந்தப் பொருளின் பக்கத்தில் போய்த் துழாவிக்கொண்டிருக்கும். காரணம் பார்வை, மூளை, கை இவற்றிற்கிடையேயான ஒத்திசைவு இல்லாமல் போயிருக்கும். வலி தெரியாது.

BAC 0.25ல் இருந்து 0.4 சதவீதம் இருக்கையில், மட்டையாகி விடுவார். எந்தவொரு வெளித்தூண்டல்களும் அவரைப் பாதிக்காது. எழுந்து நிற்க முடியாது, நடக்க முடியாது. வாந்தி எடுக்கலாம். நினைவு தப்பிவிடலாம்.

BAC 0.35ல் இருந்து 0.50 சதவீதம் இருக்கையில், நினைவு முழுவதும் தப்பிவிடும். Reflex சுத்தமாகப் போய்விடும். கருவிழிகூட வெளிச்சத்தில் சுருங்காது விரியாது. உடல் சில்லிட்டுப் போகும். மூச்சு விடுதல் குறைந்து போகும். இதயத் துடிப்பு குறைந்து விடும். இறந்து போக அதிக வாய்ப்புள்ளது.

 நன்றி : திரு. Babu Pk FACEBOOK நண்பர்

Tuesday, December 25, 2012

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.





நம்து வாழ்கையில் நாம் ரசித்த, எந்த கவலையும் இன்றி துள்ளிதிரிந்த காலம் என்றால் அது பள்ளி பருவம் தான். இப்போதும் பள்ளி காலங்களையும், பள்ளி பருவ நண்பர்களையும் நாம் அசைபோடாமல் இருக்கமாட்டோம். அந்த காலத்தில் பன வசதி காரணமாகவோ,அல்லது எதேனும் காரனத்தால் பள்ளியில் எடுத்த புகைபடங்கள்களை வாங்காமல் இருந்திருபோம்.

இப்போது பணம் இருக்கும் ஆனால் புகைபடம் கிடைகாது. நமது பள்ளி புகைபடம் மற்றும் நம்து நண்பர்களுடன் நாம் இருந்த புகைபடங்களை நமக்காக வழங்குகிறது ஒரு இனையதளம்.

வெளி நாட்டில் மட்டுமே இருந்த இந்த வசதியை இப்போது இந்தியாவிற்க்கும் வழங்கி உள்ளது.இந்த வசதியை பெற கிழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்.

  1. கிளிக் http://www.worldschoolphotographs.com/
  2. உங்கள் நாடு, மாநிலம், மாவட்டத்தை தெரிவு செய்யவும்.
  3. உங்கள் பள்ளி பெயர், படித்த வருடம் தெரிவு செய்யவும்
  4. ஒகே பட்டனை கிளிக் செய்யவும்.

உங்களுக்கு லக் இருந்தால் , உங்கள் பள்ளி புகைபடம் இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.


இதையும் படிக்கலாமே :

அஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25


இது ஒரு மீள் பதிவு

Monday, December 24, 2012

அஜித்தின் அடுத்த படம் ? விஜய் 25


அஜித்தின் அடுத்த படம் ? 


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜீத், அப்படம் முடித்த உடனே தனது அடுத்த படத்தினை துவங்க திட்டமிட்டு இருக்கிறார்.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி என பெரிய பட்டாளத்தை வைத்து விஷ்ணுவர்தன் ஒரு படத்தினை இயக்கி வருகிறார். இப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. நடுவில் அஜீத்திற்கு காலில் ஏற்பட்ட காயத்தால் சிறிது காலம் படப்பிடிப்பு தடைப்பட்டது. இப்போது சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.

எப்போதுமே ஒரு படத்தினை முடித்தவுடன் சிறிது கால ஒய்விற்கு பின்னரே தனது படத்தினை துவங்குவார் அஜீத். ஆனால் இம்முறை விஷ்ணுவர்தன் படப்பிடிப்பு முடிந்தவுடனேயே 'சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் முதன் முறையாக அஜீத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தமன்னா.

இப்படம் குறித்து இயக்குனர் 'சிறுத்தை' சிவா " என்னுடைய இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு கதாநாயகி தேடல் முடிந்துவிட்டது. இப்படத்தில் முதன்முறையாக அஜீத்துடன் தமன்னா ஜோடி சேர்கிறார். மற்றும் விதார்த், பாலா, முனீஷ், சோஹில் என இளம் நாயகர்களும் அஜீத்தோடு இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தில் ஜெயராம், சந்தானம் கூட்டணியில் நகைச்சுவை களைகட்டும். ஜெயப்பிரகாஷ், இளவரசு ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள்.
இப்படம் குறித்து அஜித்திடம் ஒவ்வொரு முறை பேசும்போதும், அவரது கதாபாத்திரத்தின் தன்மை வலுவாகிக் கொண்டே இருக்கிறது. இந்த படம் நிச்சயமாக அஜித் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் ! " என்று கூறியுள்ளார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை தேவி ஸ்ரீபிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.  படத்திற்கான வேலைகள் மும்முரமாக தொடங்கி விட்டன.


========================================================================

விஜய் பாடவிருக்கும் 25வது பாட்டு!



'துப்பாக்கி' தியேட்டர்களில் வசூலை குவித்துக் கொண்டிருக்க, அப்படத்தின் பாடல்களைப் பொருத்தவரை  விஜய் பாடிய ' GOOGLE GOOGLE ' பாடல் தான் அனைத்து தரப்பு மக்களிடம் வரவேற்பு பெற்று இருக்கிறது.
பல படங்களில் விஜய் பாடினாலும் 'சச்சின்' படத்திற்கு பின் 7 ஆண்டுகள் கழித்து 'துப்பாக்கி' படத்தில் தான் பாடினார். 'GOOGLE GOOGLE' பாடல் விஜய் பாடிய 24வது பாடலாகும்.

இயக்குனர் விஜய் - விஜய் இணைந்திருக்கும் படத்திலும் விஜய் ஒரு பாடலை பாட சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இப்பாடலை நா.முத்துகுமார் எழுதி இருக்கிறார்.

விஜய்யிடம் பாடல் வரிகளையும் பாடலுக்கான டியூனையும் கொடுத்து விட்டார்கள். விஜய் எப்படி பாட வேண்டும் என்று தற்போது பயிற்சி எடுத்து வருகிறாராம். அடுத்த வாரம் மும்பையில் ஒரு ஸ்டூடியோவில் இப்பாடல் பதிவு நடைபெற இருக்கிறது.

நன்றி : விகடன்

Thursday, December 20, 2012

FACEBOOK இல் ரசித்தவை ....

 
 
 
பொது இடங்களில் பெண்களை தரக் குறைவாக திட்டக் கூடாது - உயர்நீதி மன்ற நீதிபதி.

# அப்போ எங்கேயாவது சந்து, பொந்துல வச்சித் திட்டலாமா யுவர் ஹானர்?!

============================================================================================

சிக்கன் 65 பக்கத்தில்
வைக்கப்படும் வட்ட வட்ட
வெங்காயம், இறந்து போன
கோழிக்கு வைக்கப்படும்
மலர்வளையம்...

போதைத்தத்துவம்
===================================================================================
 தியேட்டர் ல நின்னு டிக்கெட்
கூட வாங்கிடலாம்
போல.சனிகிழமை பெருமாள்
கோவில் ல பொங்கல் வாங்க
முடியறது இல்ல
என்னா கூட்டம்??
என்னா கூட்டம்?
============================================================================
 துரைதயாநிதி நீதிமன்றத்தில்
ஆஜர்..!

தனது வேற்றுகிரக
அனுபவத்தை பற்றி பயணக்
கட்டுரை ஒன்றை விரைவில்
எழுதுவாரென பேசப்படுகிறது.
============================================================================
 
கவிதை எழுத நினைத்த என் கற்பனை குதிரையை தட்டி எழுப்பினேன்.

கொலை வெறியோடு உதைத்து விட்டு சொன்னது

"மடப்பயலே நான் கழுதை"!!
(கொய்யால என்னா அடி )
=============================================================================
பொண்ணுங்க கிட்ட லவ்
பண்றியான்னு கேக்குறதும் கண்டக்டர்
கிட்ட சில்லறை கேக்குறதும் ஒன்னுதான்

இருந்தாலும் இல்லைன்னு தான் சொல்லுவாங்க ..!!
 
==========================================================================
 
வெற்றிக்கான முதல் படி, எப்படி வெல்வது என்று அடுத்தவனிடம் ஆலோசனை கேட்காமல் இருப்பதே
===========================================================================
 #ஒரு முறை பவர்ஸ்டார் வீட்டு காலண்டரை கரையான் அரித்து டிசம்பர் 21க்கு மேல் தேதிகள் இல்லாமல் போயின,பவர்ஸ்டார் புது காலண்டர் வாங்கி மாட்டி விட்டு அந்த பழைய காலண்டரை தூக்கி போட்டார்.

அதுவே நாளடைவில் மாயன் காலண்டர் எனப்பட்டது ;-)
 
================================================================================
 #சரக்கு வாங்கி வைத்து கால் பண்ணினால் மிக்சிங்குக்கு வாட்டர் பாட்டில் கூட வாங்காமல் வெறும் கையுடன் வரும் நண்பன் கர்நாடககாரனை விட மோசமானவன்.
=================================================================================
#ஏழு கோடி இந்தியர்களுக்கு வேலை இல்லை-மத்திய அரசு.

எங்க ஊரு பிரதமரே வேலை இல்லாமல் தான் இருக்காரு,நாங்க எதாவது சொன்னோமா?
======================================================================================== 
இதையும் படிக்கலாமே :

FACEBOOK TRICKES