> என் ராஜபாட்டை : பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய்

.....

.

Sunday, April 8, 2012

பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய்


வணக்கம் தமிழ் நெஞ்சங்களே இன்றைய சூழலில் நமது தமிழ்நாட்டு மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலைப்பற்றியும் அந்த காய்ச்சல் வருவதற்கான காரணங்கள் வந்தால் பாதிக்கப்பட்டவரை என்னென்ன செய்ய வேண்டும் என்பதினையும் விரிவாக அலசுவோம்.


கடந்த சில நாட்களுக்கு முன் விலைமதிப்பற்ற ஓர் உயிரை இந்த நோயினால் இழந்தது நாம் அனைவரும் அறிந்ததே.எனவே வருமுன் காப்பதுதானே நலம்.பொதுவாகவே பன்றிக்காய்ச்சல் என்பது சாதாரண ஒரு நோயின் அறிகுறியாகவோ அல்லது மிக மோசமான ஒரு நோயின் அறிகுறியாகவோ இருக்கலாம். சில குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும்போது வலிப்பு வரும். இல்லையென்றால் உயிருக்கேகூட ஆபத்து நேரிடலாம்.பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ”இன்ஃபுளூ யன்ஸா” என்ற வைரஸ் கிருமியாகும்.இக்காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் கிருமி, வட அமெரிக்க பன்றி, அமெரிக்க பறவை, பன்றி ஆகியவற்றில் இருந்து உற்பத்தி ஆகிறது.

பன்றிக் காய்ச்சல் பரவும் முறை
 • இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போது வெளிப்படும் எச்சில் துளிகள் மூலமும், அவர் அணிந்திருக்கும் துணிகள் மூலமும் மற்றவர்களுக்கும் பரவுகிறது.
 • ஒருவருடைய உடலுக்குள் இந்த வைரஸ் கிருமிகள் நுழைந்த ஒன்று முதல் ஏழு நாட்களுக்குள் நோய் அறிகுறிகளும் நோயும் ஏற்படும்.
 • பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து ஆறாவது நாளில் இருந்து வைரஸ் கிருமிகள் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கும். இந்த நோய் ஏழு நாட்களுக்கு மேல் இருந்தால் நோய் குணமாகும் வரை கிருமிகள் பரவிக் கொண்டே இருக்கும்.
 • இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் என்று உறுதியாகத் தெரிந்த ஒருவருடன் வேறு யாராவது நெருங்கிப் பழகினால் அவருக்கு ஏழு நாட்களுக்குள் பன்றிக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
 • இந்தக் காய்ச்சல் பாதிப்பு உள்ள இடத்திற்குச் சென்று வந்த ஏழு நாட்களுக்குள் அந்த நோய் ஏற்படலாம்.
 • பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்கள், வசிக்கும் பகுதிகளில் இருக்கும் மற்றவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் வரலாம்.
இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் பின் விளைவுகள்
 • பொதுவான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, தலைவலி, உடல் வலி, பேதி, வாந்தி, உடல் அசதி போன்றவை.
 • காது வலி
 • நிமோனியா
 • தீவிரமான ஆஸ்துமா
 • இதய பதிப்பு
 • இதயத்தைப் பாதுகாக்கும் ஜவ்வு பாதிப்பு
 • தசை பாதிப்பு
 • வைரஸ் நோயால் வரும் மூளைக் காய்ச்சல்
 • வலிப்பு
 • பாக்டீரியாவால் வரும் நிமோனியா போன்றவை.
முக்கியமாக இந்த நோய், குழந்தைகளுக்கும், வயதானவர் களுக்கும் எதிர்பாராத மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

இந்த நோய்க்கான பரிசோதனைகள் :

ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் என்பதை உறுதி செய்வதற்கு கீழ்காணும் வழிமுறைகளில் கண்டறியப்படுகிறது
 • வைரஸ் கல்ச்சர்
 • ரத்தப் பரிசோதனை
 • பயோகெமிக்கல் பரிசோதனை
 • எக்ஸ்ரே
 • நுண்ணுயிர் பரிசோதனை
 • தொண்டைக்குள் துளி எடுத்து பரிசோதித்தல்
 • மூக்கின் உட்பகுதியில் இருந்து துளி எடுத்துப் பரிசோதித்தல்
 • மூச்சுக் குழாய்க்குள் இருந்து சளியை எடுத்துப் பரிசோதித்தல்
பன்றிக்காய்ச்சலை தடுக்கும் முறைகள் :
 • முக்கியமாக நோய்க் கிருமிகள் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்
 • உடனடியாக சிகிச்சை அளித்து நோயாளியை மரணத்தில் இருந்து மீட்பது
 • பாதிக்கப்பட்டவர்களைத் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் இல்லாவிட்டால் நல்ல காற்றோட்டம் உள்ள அறையில் ஒரு படுக்கைக்கும் மற்றொரு படுக்கைக்கும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு படுக்க வைத்து சிகிச்சை அளிக்கலாம்
 • இரத்தக் குழாய் சிரை மூலம் மருந்து, சத்துள்ள திரவங்களைக் கொடுப்பது.
 • செயற்கை சுவாசிப்பான் வழியாக ஆக்ஸிஜன் செலுத்துதல்.
 • உடலுக்கு வலுவூட்ட ஆன்டிபயாடிக் கொடுப்பது.
 • காய்ச்சல், உடல் வலி மற்றும் தலைவலி இருந்தால் பாரசிட்டமால் மருந்தைக் கொடுக்கலாம்.
 • குடிக்க நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும்.
 • நோயாளி உள்ள இடத்திலோ அல்லது அறையிலோ யாரும் சிகரெட் பிடிக்கக் கூடாது.
 • மூச்சு செல்லும் வழி, மூச்சு விடுதல் மற்றும் ரத்த ஒட்டம் ஆகியவற்றை ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும்.
 • நோயின் தன்மை குறைந்த பிறகு பதினான்கு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பலாம்.
 • நோய்ப் பாதிப்பில் இருந்து மீண்ட குழந்தைகளை உடனேயே பள்ளிக்கு அனுப்பக் கூடாது.
 • பன்றிக் காய்ச்சலுக்கு ஒசெல்டாமிவீர் (OSELTAMIVIR) என்ற மருந்துதான் பரவலாகப் பயன் படுத்தப்படுகிறது.
வாசிக்கும் நண்பர்களே பன்றிக்காய்ச்சலால் கண்முன்னே பல உயிர்களை பறிகொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் மேலே கூறிய பன்ரிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் வந்தாலோ அல்லது தென்பட்டாலோ அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்
நன்றி : மருத்துவ நண்பர் ஜான் ஆபிரஹாம்

அன்புடன்
உடும்பன்

பன்றிக்காய்ச்சலுக்கு போடப்படும் தடுப்பூசிகள்

ஃப்ளூ தடுப்பூசிகள், மூன்றுவகையான வைரஸ்களிடம் (Type A = H1N1, H3N3 and type B) இருந்து பாதுகாக்கும் விதமாக தயாரிக்கப்படுகின்றன. சென்ற மாதத்தில் நான்கு வகை வைரஸ்களிடம் இருந்து 

பாதுகாக்கும் தடூப்பூசி அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகளைப் பொறுத்தவரை அவை ஒரு சீசனுக்கு மட்டுமே வேலை செய்யும் (அதிக பட்சம் 6 மாதம்). ஏனென்றால் இந்த வைரஸ் அதிவேகமாக மாறும் தன்மை வாய்ந்தது. சீசனுக்கு சீசன் வைரஸ் தன்

அமைப்பை மாற்றிவிடும். அதனாலேயே ஒரு சீசனில் போடப்பட்ட வேக்சின் மறுசீசனில் வேலை செய்யாது. ஒவ்வொரு சீசனுக்கு ஒரு தடுப்பூசி போடவேண்டி இருக்கும்.

கீழ்கண்டவர்கள் கட்டாயம் இந்த தடுப்பூசியை நோய்த் தொற்று பரவும் சீசனில் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவ அமைப்புகள் பரிந்துரைக்கின்றன.


1. ஆஸ்த்மா நோயாளிகள்
2. இதய நோயாளிகள்
3. சர்க்கரை நோயாளிகள்
4. ஈரல் நோய் உள்ளவர்கள்
5. கிட்னி நோய் இருப்பவர்கள்
6. எய்ட்ஸ் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் நோயுள்ளவர்கள்
7. கூட்டமாக தங்கி இருப்பவர்கள் (விடுதிகள், ஹோட்டல்கள்)
8. பெரிய நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் (மாநாடுகள், ஒலிம்பிக் போட்டிகள் போன்ற நிகழ்வுகள்)
9. ராணுவ வீரர்கள்
10. மருத்துவத் துறையில் வேலை செய்பவர்கள்
11. கர்ப்பிணிகள்
12. குழந்தைகள் ( 6 மாதத்தில் இருந்து 2 வயது வரை)
13. வயதானவர்கள் (65 க்கு மேல்)

இந்த தடுப்பூசி மூக்கு வழியாகவும் ஊசி மூலமாகவும் கொடுக்கலாம். ஆரோக்கியமானவர்களுக்கு 2-49 வயது வரை மூக்கு வழியாக தரலாம் (கர்ப்பிணிகளுக்கு கூடாது).

பொதுவான பக்கவிளைவுகள்: ஊசி போட்ட இடத்தில் சிவந்து வீங்குதல், புண்ணாகுதல், காய்ச்சல், உடம்பு வலி ஏற்படலாம்.

இது தகவலுக்காக மட்டுமே. தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் முன் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறவும்.


வாசிக்கும் நண்பர்களே பன்றிக்காய்ச்சலால் கண்முன்னே பல உயிர்களை பறிகொடுத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் மேலே கூறிய பன்ரிக்காய்ச்சல் நோயின் அறிகுறிகள் வந்தாலோ அல்லது தென்பட்டாலோ அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி தக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்
 
Updates : நன்றி திரு.பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள்

13 comments:

 1. நன்றி ராஜா.எங்கள் பதிவை நீங்கள் re share பண்ணதர்க்கு.
  எங்கள் எடக்கு மடக்கு டீம் உங்களுக்கும் வாசக தமிழ் நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

  ReplyDelete
  Replies
  1. பகிர அனுமதி தந்தமைக்கு நன்றி நண்பா

   Delete
 2. இன்றைய சூழலில்
  தேவையான பதிவு நண்பரே..
  பகிர்வுக்கு நன்றிகள் பல..

  ReplyDelete
 3. nalla thagaval....
  avaciyamaanathu...kooda...

  ReplyDelete
 4. இப்போதைக்கு தேவையான தகவல்கள் - பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா....

  ReplyDelete
 5. எங்களுடைய பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி உயர்திரு இராஜபாட்டை ராஜா! எங்களுடைய விழிப்புணர்வு பதிவுகளை யார் வேண்டுமானால் தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்....நன்றி!

  ReplyDelete
 6. உபயோகமான பதிவு. எல்லோரும் படித்து கவனமாக இருக்க வேண்டிய பதிவு. ஆண்ட்டி பயாடிக் உடலுக்கு வலுவூட்ட அல்ல, நோய் எதிர்ப்புக்கு... பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களை இந்த நோய் அண்டத் தயங்கும் என்று படித்தேன். H1N1 வைரஸ் ஊசி முன்னேற்பாடாகப் போட்டுக் கொள்ளலாம். வந்த பிறகு என்றால் டேமிஃப்ளூ மாத்திரை தருகிறார்கள். ஆனால் மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம்.

  ReplyDelete
 7. பன்றிக்காய்ச்சலைப் பற்றி எல்லோருக்கும் சென்றடைந்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இத்தனை தகவல்களுடன் எழுதிப்பகிர்ந்தமைக்கு நன்றி...

  ReplyDelete
 8. எல்லோருக்கும் பயனுள்ள தகவல் ராஜா சார் ..! அதுவும் தற்போதைய சூழ்நிலையில் எல்லோருக்கும் தேவைப்படும் தகவலும் கூட ..!

  ReplyDelete
 9. அவசியமான நேரத்தில அருமை பதிவு...!!! நன்றி

  ReplyDelete
 10. தக்க நேரத்தில் பயனுள்ள பதிவு .

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...