> என் ராஜபாட்டை : கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...

.....

.

Monday, April 23, 2012

கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...


இலவசமாக அரசு கொடுக்க வேண்டியது கல்வியும், மருத்துவமும் தான் .......

ஆனால்

அரசு கொடுப்பதுவோ

  • ரேஷன் அரிசி 
  • வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆடுகள்
  • இலவச மிக்சி
  • இலவச கிரைண்டர்
  • இலவச பேன்
  • இலவச காஸ் அடுப்பு
  • இலவச சிலிண்டர்
  • இலவச சீமெண்ணெய்(மண்ணெண்ணெய் )
  • தேசிய ஊரக உழைப்பாளிகள் திட்டத்தில் மாதம் கமிசன் போக 115 ரூபாய்
  • இலவச மின்சாரம் ஒற்றை பல்பு
  • விலை குறைப்பு செயப்பட்ட கோதுமை, பாமாயில்,சர்க்கரை, மைதா, துவரம் பருப்பு.

இதில் உச்சகட்டம் ஓட்டுக்கு 200ரூபாய் முதல் 5000  ரூபாய் வரை .

இதனால் ஏற்படும் பாதிப்புகள்

உழைக்கும் மக்கள் வேளைக்கு செல்லாமல் சோம்பேறிகள் ஆக்குவது
செயற்கை மின்சார தட்டுப்பாடு ( இலவச கிரைண்டர், மிக்சி, தொலைகாட்சி, பேன் )

ஊரக வேலைவாய்பு திட்டத்தின் கீழ் வேலைபாக்க கூலிஆட்கள் செல்வதால் விவசாயம் நடக்காமல் மனமொடிந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுதல்

விவசாயத்திற்கு ஆள் கிடைக்காமல் விவசாய நிலங்கள் அடுக்குமாடி குடியிருப்பாக மாறுதல்.

இலவசங்கள் கொடுக்கலாம் , கொடுக்க வேண்டியது

  • அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி மருத்துவம் , பொறியியல் , சட்டம் , கலை அறிவியல் படிப்புகளை மாணவர்களுக்கு இலவசமாக தரலாம்
  • அனைத்து தனியார் மருத்துவ நிறுவங்களையும் அரசுடைமையாக்கி இலவச மருத்துவம் தரலாம்
  • விவசாயிகளுக்கு இலவச நிலம் , இலவச மின்சாரம் அளித்து ஒரு பசுமை புரட்சியை உண்டாக்கலாம்

அனால் இதெலாம் இந்த ஜென்மத்தில் நடக்காது ...காரணம் தெரியுமா ?
இதெல்லாம் சட்டமாக கொண்டு வர அதிகாரம் படைத்த சட்டமன்ற , நாடாளமன்ற உறுபினர்கள் பலர் தனியார் கல்வி , மருத்துவ , ரியல் எஸ்டேட் ஓனர்கள் ஆவர் ........

பின்ன எப்டி இந்தியா உருப்படும் ???

இதற்கு காரணம் "ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்த தெரியாதா நாம்"

இதை பகிர்ந்து (share) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.


டிஸ்கி : Facebook  ல படித்தது ... 

இதையும்  படிக்கலாமே :


கதம்பம் 19-04-2012

 

உங்களுக்கு வயதாகிவிட்டதா ? ஒரு டெஸ்ட்

 


16 comments:

  1. ஜனநாயகம் கேலிக்கூத்தாகி வருகிறது ....

    ReplyDelete
  2. இது நாம் யோசிக்க வேண்டிய விஷயம் அல்ல .., ஆச்சியாளர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் ..!

    ReplyDelete
  3. You know government is came accross these mentioned points.
    நாம வல்லரசு ஆகப்போறம். அக்னி-5 விட்டாச்சு... இனி நாம வல்லரசுதான்...

    என்னது சோத்துக்கே இல்லியா?

    அடப்போய்யா, அப்போ வறுமைக்கோட்டை அழிச்சிட்டு, 32 லிருந்து 20ரூவாயாப் பண்ணிரு..

    #வாழ்க ஜனநாயகம்.

    ReplyDelete
  4. இதற்கு காரணம் "ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்த தெரியாதா நாம்"/////

    உண்மைதான்

    ReplyDelete
  5. தனியாரை அரசுடமையாவது இருக்கட்டும்... அரசு பள்ளிகளும் அரசு மருத்துவமனைகளும் முழுவதும் இலவசமாக இயங்குகிறதா? என் அப்பா அரசு பள்ளி தலைமை ஆசிரியர்... நான் அரசு மருத்துவர்... நேரடி அனுபவத்தில் சொல்கிறேன்... நிச்சயம் இல்லை... இன்னமும் தேர்வு கட்டணம்,சேர்க்கை கட்டணம் எல்லாம் அமலில் தான் இருக்கிறது... அரசு மருத்துமனைகளில் அன்றாடம் ஆயிரமாயிரம் விபத்து சார்ந்த அனுமதி நடக்கிறது..xray 20 ரூபாய்...ct scan 350 ரூபாய்.. MRI 2500 ரூபாய்... தலையில் அடிபட்டு உயிருக்கு மோசமான நிலையில் சேரும் ஒருவருக்கு CT scan (brain) எடுக்காத நிலையால் அவசர அறுவை சிகிச்சை தாமதிக்க படும் அவலம் அன்றாடம் காண்கிறேன்...

    ReplyDelete
  6. //கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...//

    நிறைய சிந்தித்து இழந்தது கோடிகணக்கில் முடிகளை தான் 'மொட்டையாகி' விட்டது. இன்னும் கொஞ்சம் சிந்திக்க சொல்வது ஹே ஹே ஹே காமடி போங்க

    ReplyDelete
  7. ம்ம்ம் ..
    உண்மையிலேயே சிந்திக்க வேண்டிய விஷயம்

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு...
    யோசிக்க வேண்டிய விஷயம்....

    ReplyDelete
  9. இதற்கு காரணம் "ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்த தெரியாதா நாம்"
    >>
    நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு சரி. ஓட்டுக்கு காசும், பொருட்களும் வாங்கும்போதே நம்ம சுய மரியாதையை அவங்ககிட்ட கொடுத்துட்டோம். எங்க குடும்பத்தார் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பைசா வாங்கலை(வாங்க கூடாதுன்னு என் பையனோட ஆர்டர்.

    ReplyDelete
  10. இதற்கு காரணம் "ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்த தெரியாத நாம்

    நிறைய சிந்திக்கவேண்டிய விஷயம்..

    ReplyDelete
  11. மிஸ்டர்.. என்ன இது...

    அரசு எதையும் இலவசமாக கெர்டுக்க வில்லை...
    விலையில்லாமல் தான் தருகிறார்கள்...
    அதனால் இனி இலவசம் என்று சொல்லாதீர்கள்..

    விலையில்லா ஆடு
    விலையில்லா மிக்ஸி...

    புரிகிறதா?

    ReplyDelete
  12. மயிலன்Apr 23, 2012 03:09 AM
    தனியாரை அரசுடமையாவது இருக்கட்டும்... அரசு பள்ளிகளும் அரசு மருத்துவமனைகளும் முழுவதும் இலவசமாக இயங்குகிறதா? என் அப்பா அரசு பள்ளி தலைமை ஆசிரியர்... நான் அரசு மருத்துவர்... நேரடி அனுபவத்தில் சொல்கிறேன்... நிச்சயம் இல்லை... இன்னமும் தேர்வு கட்டணம்,சேர்க்கை கட்டணம் எல்லாம் அமலில் தான் இருக்கிறது... அரசு மருத்துமனைகளில் அன்றாடம் ஆயிரமாயிரம் விபத்து சார்ந்த அனுமதி நடக்கிறது..xray 20 ரூபாய்...ct scan 350 ரூபாய்.. MRI 2500 ரூபாய்... தலையில் அடிபட்டு உயிருக்கு மோசமான நிலையில் சேரும் ஒருவருக்கு CT scan (brain) எடுக்காத நிலையால் அவசர அறுவை சிகிச்சை தாமதிக்க படும் அவலம் அன்றாடம் காண்கிறேன்...
    /////////////////////////////////////
    நமது அரசின் லட்சனம் இதோ இவர் வாயிலாக தெரிகிறதே........

    ReplyDelete
  13. சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்!

    ReplyDelete
  14. மிகவும் உண்மை!

    ReplyDelete
  15. சபாஷ் சரியான விழிப்புணர்வு பதிவு இனிமேலாவது தமிழக மக்கள் திருந்துவார்களா

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...