> என் ராஜபாட்டை : Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..

.....

.

Friday, September 7, 2012

Facebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு ..இன்று மிக பெரிய சமுக வலைத்தளம் என்றால் அது Facebook தான். தினம்தோறும் பலர் அதில் இணைத்து வருகின்றனர். தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் , தனது பழைய நண்பர்களை தேடி கண்டுபிடிக்கவும் , தனது ரசனையுடன் ஒத்துபோகும் நண்பர்களை கண்டுபிடிக்கவும் இது உதவுகிறது. இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளது .

குறிப்பாக பெண்கள் இந்த Facebook இல் படும்பாடு சொல்லிமாலாதது . Facebook ஆல் வாழ்க்கையை தொலைத்த , பல கஷ்டங்களை அனுபவித்த பெண்கள் பலர் உள்ளனர் . சமுகத்திற்கு பயந்து அவர்கள் சொல்லுவதில்லை . பிறரால் நீங்கள் கஷ்டப்பட்ட கூடாது என நினைத்தால் , உங்களுக்காக சில யோசனைகள் ...


 1. தயவு செய்து உங்கள் புகைப்படங்களை பதிவேற்றாதிர்கள் . அந்த படங்கள் சில சமுக விரோதிகளால் ஆபாச படமாக மாற்ற வாய்ப்புள்ளது .


 1. எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் உண்மையான முகவரி , தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்கள் .


 1. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் உங்கள் கடவு சொல்லை (Password) மாற்றி கொண்டே இருங்கள் .

 1. கடவு சொல் எளிதில் யூகிக்க முடியாததாக வையுங்கள் . உங்கள் பிறந்த நாள் , மொபைல் நம்பர் , பெற்றோர் பெயரை வைக்காதீர்கள் .

 1. என்ன நெருங்கிய உறவினராக இருந்தாலும் , நன்பர்களாக இருந்தாலும் கடவு சொல்லை கொடுக்காதீர்கள் . திருமணம் நிச்சயமான பெண்கள் கூட கொடுக்காதீர்கள் .

 1. நன்றாக தெரிந்தவர்களின் Friend Request மட்டும் Accept செய்யுங்கள் .

 1. உங்கள் நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை Tag செய்வதை தடுங்கள். அப்படி Tag செய்தாலும் அது உங்கள் அனுமதி கிடைத்த பின்தான் உங்கள் Wall இல் தோன்ற வேண்டும் என Setting கில் மாற்றம் செய்யுங்கள் .

மாற்றம் செய்ய :Home -> Privacy setting ->Timeline and Tagging 

 1. தவறான படங்கள் அல்லது ஆபாசமான Status போடும் நண்பர்களை உடனே Unfriend செய்யுங்கள் .

 1. உங்கள் கணக்கில் Mobile Notification option Enable செய்யுங்கள் .
Enable செய்ய : Home -> Account setting ->security setting -> login notification

 1. மற்றவருடன் Chat செய்யுன் போது உங்களின் உண்மை தகவல்களை சொல்லவேண்டாம் . அதுபோல உங்களின் பலவினங்களை சொல்லாதீர்கள் .

 1. இதையும் மீறி எதாவது தவறு வந்தால் உடனடியாக உங்கள் Account ஐ அழித்துவிடுங்கள் .


ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கபடுவதால் இந்த பதிவு .

டிஸ்கி : விரைவில் Facebook ஆல் நிம்மதி இன்றி வாழும் இளம் பெண் உண்மை கதை ..


21 comments:

 1. நன்றி.. ஆலோசனைகள் அனைத்தும் பயனுள்ளவையே. ஆனால் நன்கு தெரிந்தவர்களை மட்டும் நட்பில் இணைத்துக்கொள்ளலாம் என்பது சரிபட்டு வராது. நட்பில் சேர்த்துக்கொண்ட பிறகு எதாவது ஏடாகூடமாகக் கண்டுவிட்ட பின் சம்பந்தப்பட்டவரை நட்பு வட்டத்தில் இருந்து அகற்றிவிடலாம். இதை ஏன் சொல்கிறேனென்றால், அறிமுகமே இல்லாத பலரை நட்பாக ஏற்றுக்கொண்ட பிறகுதான் பல வழிகளில் பயன் (நன்மை தீமை) பெற வழிவகுத்தது. இன்று எனக்கு அங்கே நல்ல வழிக்காட்டியாக இருப்பவர்கள், ஆரம்பத்தில் எனக்கு அறவே அறிமுகமில்லாதவர்கள்தான். நிறைய கற்றுக்கொண்டேன்.. எழுத்துத்துறையில் இருப்பதால், முகநூல் பலவழிகளில் எனக்கு துணைபுரிந்தது வந்துள்ளது. வலைத்தளத்தில் உலாவுவதற்குக்கூட, அறிமுகமே இல்லாத ஒரு நண்பர்தான் காரணம். எவ்வளவு வாசிக்கின்றேன் தெரியுமா! எல்லாம் முகநூல் சித்தமே. தீமை தீமை என்று ஒரேடியாக புறக்கணிக்காமல், நல்லவற்றையும் சீர்த்தூக்கிப்பார்க்கவேண்டும்.

  ReplyDelete
 2. @ஹிஷாலீhttp://www.wikihow.com/Permanently-Delete-a-Facebook-Account இந்த லிங்க்.ல போய் பாருங்க நண்பா

  ReplyDelete
 3. சமுகத்துக்கு தேவையான நல்ல தகவல்களை கூறி ஆசிரியர் என்று நிருபித்து விட்டீர்கள்

  ReplyDelete
 4. சமுகத்துக்கு தேவையான நல்ல தகவல்களை கூறி ஆசிரியர் என்று நிருபித்து விட்டீர்கள்

  ReplyDelete
 5. மிகவும் நல்ல தகவல்கள்... அனைவருக்குமே பயன் தரும்...

  ReplyDelete
 6. //உங்கள் கணக்கில் Mobile Notification option ஐ Enable செய்யுங்கள் //

  இந்த வசதி எதற்காக செய்யணும்?
  காரணம் சொன்னா இன்னும் உபயோகமா இருக்கும்.

  ReplyDelete
 7. //இந்திரா said... Reply To This Comment

  //உங்கள் கணக்கில் Mobile Notification option ஐ Enable செய்யுங்கள் //

  இந்த வசதி எதற்காக செய்யணும்?
  காரணம் சொன்னா இன்னும் உபயோகமா இருக்கும்.

  //

  உங்கள் கணக்கில் யாராவது log in செய்தால் உங்களுக்கு sms வரும் , நீங்கள் login செய்தால் கூட

  ReplyDelete
 8. விழிப்புணர்வு பதிவிற்கு நன்றி தல!

  ReplyDelete
 9. Very very usefull information .Thank sir

  ReplyDelete
 10. Very very usefull information .Thank U sir

  ReplyDelete
 11. Very very usefull information .Thank U sir

  ReplyDelete
 12. நல்ல விழிப்புணர்வு பதிவு..சார்..

  ReplyDelete
 13. பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 14. \\ தயவு செய்து உங்கள் புகைப்படங்களை பதிவேற்றாதிர்கள் . அந்த படங்கள் சில சமுக விரோதிகளால் ஆபாச படமாக மாற்ற வாய்ப்புள்ளது .\\

  சிலரது வேலையே இது தான். நான் நண்பனாக ஏற்றுக்கொண்ட ஒருவர் தொடர்ந்து பல பெண்களின் படங்களையே பகிர்ந்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரை நீக்க வேண்டியதாயிற்று!

  \\ எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் உண்மையான முகவரி , தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்கள் .\\

  அவசியமான அறிவுரை!


  ReplyDelete
 15. தகவலை தெரிவித்தமைக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 16. ஒரு சகோதரனின் அக்கறையோடு கொடுக்கப்பட்ட தகவல்கள் நிறைந்த நல்லதோர் பதிவு

  ReplyDelete
 17. அன்பின் ராஜா - பல ப்யனுள்ள தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...