> என் ராஜபாட்டை : கதம்பம் 05-08-13

.....

.

Monday, August 5, 2013

கதம்பம் 05-08-13


கடந்த மாத கதம்பம் பதிவுக்கு ஆதரவளித்த  நல்ல உள்ளங்களுக்கு நன்றி . இதோ இந்த வாரமும் . ( அடிகடி தொடரும் கொஞ்சம் சகித்துக்கொள்ளவும் )


இது சரியா ? தவறா ? 


இயக்குனர் சேரனின் மகள் காதல் விஷயத்தில் பலர் பல்வேறு விதமாக பேசுகின்றனர் . படங்களில் காதலை வாழவைத்தவர் தனது குடுப்பத்தில் எதிர்ப்பது சரியா என்று . இது சரியான வாதமாக படவில்லை . தொடர் கொலைகளை படமாக எடுப்பவர் கொலை செய்தால் தப்பில்லை என்பது போல உள்ளது . 

சேரன் தன மகள் காதலிக்கும் காதலன் சரியில்லை என தான் சொல்கிறார் . காதலை எதிர்க்கவில்லை . ஒரு அப்பா தன மகளின் வாழ்கையை நல்ல படியாக அமைத்து கொடுக்க வேண்டும் என விரும்புவது தவறா ? காரணமே இல்லாமல் அல்லது சாதியை , மதத்தை காட்டி எதிர்த்தால் அதை தவறு என சொல்லலாம் .

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் இது போல சென்று இப்போது படும் பாடு  நாடறிந்தது . காதல் எதிர்காலத்தை பார்க்காது . "குழோ , கஞ்சியோ எதுவானாலும் நான் தயார் என சொல்லும் பக்குவம் திருமணம் முடிந்து தொடரும் என சொல்லமுடியாது .


========================================================================

முக நூலில் பலர் பல விஷயங்களை பகிர்கின்றனர் . அது காமெடியாக இருக்கலாம் ,தத்துவங்களாக இருக்கலாம் .கலை இலக்கியம் , அரசியல் சம்பத்தபட்டதாக கூட இருக்கலாம் . ஆனால் சிலர் எழுதும் பதிவுகள் நம்மை யோசிக்க வைக்கும் , சிரிக்க வைக்கும் அப்படிபட்ட பதிவுகள் சில உங்களுக்காக ...

பள்ளிக்கூடம் படிக்கையில கேட்ட ஜோக் இது... இப்பவும் சுத்திக்கிட்டு இருக்கு...

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?

இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது
சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க
டாக்டர் – தினமும் மூணு வேளை
நர்ஸ் – நார்மலாத்தான்
பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது
போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது
வேலைக்காரி – பிசு பிசுன்னு
அட்டை – விடாம பெய்யுது
ஆமை- வெளியே தலை காட்டா முடியலை
குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது
தேள் – கொட்டு கொட்டுன்னு
நண்டு – பிடி பிடின்னு
 
==============
தமிழ் சினிமாவின் விதிகள்

1.ரேப் ஸீனுக்கு புலி, மானைக் காட்டுறது. முதலிரவு ஸீனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கப்பறம் லைட்டை ஆஃப் செஞ்சிடறது. மேக்ஸிமம் ரேப் ஸினுக்கு நம்ம ஹீரோயின் சேலைதான் கட்டியிருப்பாங்க...

2.பனி பொழியுற நாட்டுப் பாடல் காட்சிகள்ல, ஹீரோ மட்டும் கோட்டு, சூட்டு, கிளவுஸ் எல்லாம் போட்ருப்பாரு, ஆனா ஹீரோயின் அம்மணிக்கு மட்டும் டூபீஸ்....சே...என்னமாதிரி சமுகத்தில் வாழ்கிறோம் நாம்..?

3.படத்தோட உச்சக்கட்டமா வில்லன் எங்கேயாவது பாம் வச்சுடுவான். அதை டிஃப்யூஸ் பண்ண வர்ற ஹீரோ எந்த கலர் வயர வெட்டுறது அப்படின்னு டென்ஷனாகி செவப்பா நீலமான்னு மாத்தி மாத்தி யோசிப்பார். ஆனா அவர் கவலையே பட வேண்டாம். ஏன்னா அவர் எந்த வயர வெட்டினாலும் பாம் அமந்து போகும். (தக்காளி ..நீ புடுங்குற எல்லாமே தேவையில்லாத ஆணிதான்..)

4.நல்லதொரு ரேப் சீனை நாசமாக்க வரும்நம்ம ஹீரோ, வந்ததும் மொதோ வேலையா தன்னோட சட்டையையோ ஜெர்கினையோ கழட்டி பொண்ணு மேல போர்த்துவார்.(அடேய் உன்ன யார்ர இங்க வரச்சொன்னது ச்சே )

5.ஹீரோ ரெட்டைப்புள்ளையா இருந்தா அதுல ஒருத்தர் கண்டிப்பா ரொம்பக் கெட்டவனா இருப்பாரு. ஆனா கிளைமாக்ஸ்ல“நான் ஏன் அப்படி இருந்தேன் தெரியுமா”ன்னு ஒரு பாடாவதி டயலாக் பேசி நல்லவனா மாறிடுவார்..
 
======================================================================================
 தற்பொழுது படித்த புத்தகம் ;

நண்பர் பிலாசபிபிரபா சில நாட்களுக்கு (மாதங்களுக்கு ???) முன் வாங்கி தந்த சுஜாதா நாவலில் ஒன்று  டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு . நண்பர் ஒருவர் வாங்கி சென்றுநேட்று தான் தந்தார் . அருமையான கதை .  வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு E-BOOK LINK  இதோ :


டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு
 
 ==========================================================================================
 
ரசித்த புகைப்படம் :
 
 

10 comments:

  1. சுவையான பகிர்வு! சுஜாதா கதை குமுதத்தில் வந்ததாக நினைவு! சேரன் மகள் விசயம் தந்தை மகளுக்கிடையே நடக்கும் ஒரு குடும்ப நிகழ்வு! இதில் மீடியாக்களும் சாதிய அமைப்புக்களும் தேவையில்லாமல் உள்ளே புகுவது அநாகரீகமாக தோன்றுகிறது!

    ReplyDelete
  2. அன்பின் ராஜா - சேரனின் கருத்திற்கு சரியான விளக்கம் - ஜோக் மற்றும் தமிழ் சினிமாவின் விதிகள் நன்று - படித்து மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. சேரனின் தரப்பில் நியாயம் இருக்கத்தான் செய்யுது. அடுத்த தற்கொலை விழாம விடமாட்டாங்க போல இருக்கு!!

    ReplyDelete
  4. சேரன் மகள் விசயம் தந்தை மகளுக்கிடையே நடக்கும் ஒரு குடும்ப நிகழ்வு! இதில் நாம் வெறும் பார்வையளர்கள் தான் வீனாக இரு குடும்பம் மீது அத்துமீறல் செய்வது ஆகாது!

    ReplyDelete
  5. கடைசி படம் சூப்பர்....

    ReplyDelete
    Replies
    1. அப்போ பதிவை படிக்கலைதானே ஒய் ?

      Delete
  6. நல்லவன் எல்லாம் நல்லவனும் இல்லை கெட்டவன் எல்லாம் கெட்டவனும் இல்லை, சேரன் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

    இன்னொரு இளவரசன் உருவா[க்கா]காமல் இருந்தால் சந்தோசம் வேறென்னத்தை சொல்ல, ஒட்டுமொத்த சினிமாவும், மீடியாவும் சேரனுக்கே சப்போர்ட்டாக இருந்து பையனின் குடும்பத்தின் மானத்தை வாங்குகிறார்களே - ஏன் அவர்கள் இவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடரக்கூடாது ?

    ReplyDelete
  7. எழுத்துக்கும் செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது...அதுவும் அடுத்தவருக்கு அட்வைஸ் செய்வதும் தனக்குன்னு வரும்போது தடுக்குவதும் மனித இயல்பே...பொண்ண வச்சி காப்பாத்த வக்கு இருந்தா தாராளமா பொண்ணு கொடுக்கலாம் அத தான் அவரு சொல்றாரு...பல பெண்களோட தொடர்புல இருக்கவனுக்கு எம் புள்ளயா இருந்தா நான் கொடுப்பனா!...அதுவே நிதர்சனம்...நன்றி

    ReplyDelete
  8. சேரன் விடயத்தில் ஊடகங்கள் செய்வது முற்றிலும் தவறுதான்... சினிமா விதிகள் மாற்றப் பட வேண்டும்... இன்றைய பதிவி அருமை...!

    ReplyDelete
  9. தமிழ் சினிமாவின் விதிகள் இன்னும் கொஞ்சம்....

    நாட்டமை தீர்ப்பு சொல்ல வரும் பொழுது நெஞ்சு நெறைய சந்தனம். மூஞ்சி நெறைய பவ்டரு....வாயிலா வெத்தல... உதட்டுக்கு நெறைய லிப்ஸ்டிக்.....கைல செம்பு .... பின்னாடி ஒருத்தர் கொடை கொண்டு வருவார்....

    காதலர்கள் மரத்தை சுத்தி தான் லவ் பண்ணனும்....காதலி மரத்து மேல சாயணும்..... காதலரும் மரத்து மேல சாய்வாறு.. அப்ப ரெண்டு பெரிய சூரிய காந்தி பூ ஒன்னு மேல ஒன்னு மொதிக்கிரும். (இது பழைய படத்துக்கு மட்டும் தான் பொருந்தும்).

    இப்ப வர்ற படத்தில காதலர்கள் பாரின்ல லவ் பண்ண போயருவாங்க....

    எப்பவுமே காதிலி வசதியா இருப்பாரு.... அனா அவங்க அய்யா சொரட்டை வேல பாப்பாரு.... அதாங்க கள்ள கடத்தல் பிஸ்னஸ்.இல்லன்ன அவங்க அய்யன் மினிமம் மினிஸ்டர் ( நோ எம்.எல்.ஏ ....)... அப்படி இல்லன்ன்ன முதல்வர்......இது ரெண்டும் இல்லைன்னா நாட்டாமை .....



    பிரசவ ஸீன் இருந்தா , டாக்டர் கண்ணாடிய கழட்டி ஒரு கைல வச்சிக்கிட்டு உங்க பொண்ண எங்களால காப்பாத்த முடியல... பிள்ளைய மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சதுன்னு சொல்லுவார்.(எல்லா டாக்டரும் ஏன் கண்ணாடிய கழட்ட்ரங்க ..............)

    பிரசவ ஸீன்ல பிள்ள செத்து பொண்ணு உயிர் பிழைக்கக் வாய்ப்பே தமிழ் சினிமால இல்ல.

    காதலி நடக்கும் பொழுது "பொத்"ன்னு கைல வச்சிருக்க புக் எல்லாத்தையும் கீழ போட்டுருவாங்க.... அப்ப தான் நம்ப ஹீரோ என்ட்ரி... எதுக்கு விழுந்த புக எல்லாத்தையும் எடுக்க வேணாமா... (ஏம்மா நல்ல தான போய்க்கிட்டு இருந்த.... எதுக்கு புக்கு எல்லாத்தையும் பொசுக்குன்னு கீழ போட்ட )

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...