> என் ராஜபாட்டை : பதிவர் திருவிழாவில் தனித்திறமை காட்டபோகும் பதிவர்கள் விவரம்

.....

.

Tuesday, August 27, 2013

பதிவர் திருவிழாவில் தனித்திறமை காட்டபோகும் பதிவர்கள் விவரம்இரண்டாவது வருடமாக தொடர்ந்து சிறப்பாக நடக்க உள்ளது பதிவர்கள் திருவிழா . இதில் வெறும் பதிவர்கள் சந்திப்பு மட்டும் இல்லாமல் பல முக்கியநிகழ்சிகள் நடைபெற யுள்ளது . 

1. புத்தகவெளியிடு 
2. பதிவர்களின் தனித்திறன் காட்டும் நிகழ்ச்சி 
3. சிறப்பு விருந்தினர் பேச்சு 

பதிவர்களின் தனித்திறன் காட்டும் நிகழ்ச்சி :

இதில் பல பதிவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தயுள்ளனர் . அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது ரகசியமாக வைத்திருந்தனர் . ஆனால் சில நல்ல உள்ளங்களால் அது இப்போது தெரிந்துவிட்டது அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்சிகள் உங்களுக்காக இதோ ..


"பிலாசபி பிரபா "          இவர் தலைமையில் அழகில் சிறந்தவள்  காஜலா ? ந்ஸ்ரியாவா ? என்ற பட்டிமன்றம் நடைபெற போகிறது . இதில் சிறப்பு என்ன வென்றால் இருவர் சார்பாகவும் இவரே பேசுவார் . நடுவர் கூட இவர்தான் .


"மெட்ராஸ் பவன் " சிவா , கவிதைவிதி சௌந்தர் , கேபிள் சங்கர் :


            "மெட்ராஸ் பவன் " சிவாகேபிள் சங்கர் நடத்தும் கையேந்திபவனில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சண்டை போட அங்கு "மாமூலாக " சாப்பிட வரும் போலீஸ்கார் (!!!) சௌந்தர் என்ன செய்கிறார் எனபதே நிகழ்ச்சி .


"மயிலிறகு " மயிலன் :

          தன்னை பார்க்கவரும் பேஷண்டுகளுக்கு கவிதை சொல்லியே குணபடுத்த முயற்ச்சி செய்யும் மயிலன் காதல் தோல்வியில் தற்கொலை முயற்சியில் தோற்ற ஒருவருக்கு கவிதை சொல்கிறார் .

           " அருகம்புல் போல
            நாம் வளர்த்த - காதலை
           உன் அப்பன்
          எருமை மாடு போல
         மேய்ந்துவிட்டான் "

( அந்த பேஷன்ட் அவுட் என்பது தனி கதை ) "காணாமல் போன கனவுகள் " ராஜி :

          வீட்டில் தான் சமைப்பதில்லை என்ற உண்மையை பதிவர்களிடம் இருந்து மறைக்க "வெந்நீர் " போடுவது எப்படி என சொல்லிதர போகிறார் . இதற்காக இவர் கடந்த சில மாதங்களாக பயிற்சி எடுத்துவருகிறார் என்பது சிறப்பு செய்தி .

"கரை சேரா அலைகள் " அரசன் மற்றும் தீவிரவாதி "சதீஷ் " :

                இருவரும் பாட்ஷா படத்தில் வரும் காட்சியை நக்கல் செய்ய போகிறார்கள் . "என் பேரு அரசன் , எனக்கு இன்னொரு பேரு இருக்கு ..." என அதிரடி டயலாக் விடபோகிறார் . அவர் ஒத்திகை பார்க்கும் போது எடுத்த படம் தான் கீழே உள்ளது .

ஆரூர் மூனா  செந்தில் :

            இவர் ஒரு திறமையான (!!!!) குச்சிபிடி நடன கலைஞ்சர் . "தகிட திகட தந்தான " என்ற கமலின் பாடலுக்கு நடனமாட போகிறார் . ஆடுவதற்கு சரியான குச்சி கிடைக்காமல் தடுமாறுவதாக கேள்வி . அல்லது சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு ஆடலாமா என குழப்பத்தில் உள்ளார் .
சீனு மற்றும் மதுமதி :

சீனு ஹீரோவாக நடிக்க போகும் "தலைவா " பார்ட் II க்கு பாடல் எழுத நம்ம மதுமதியை அழைக்கிறார்கள் . சீனுவை பார்த்ததும் பாட்டு எழுத முடியாது வேண்டுமாலாம் ஒப்பாரி எழுதுறேன் என சொல்ல , சீனு கோவமாக (கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சி ) கேட்டதால் அவர் பாடல் எழுதுகிறார் . படத்தின் துவக்க பாடலாக இது உள்ளது .

"சீனுனா சும்மா இல்லடா
அவன் இல்லாம இந்த கூட்டம் இல்லடா

கண்ணாடி போட்டவண்டா - பல
கன்னி பெண்களை கட்டி போட்டவண்டா

அடிச்சா அதிரடி
கடிச்சா வெறி கடி

............."

 


இறுதியாக திரு நக்ஸ் அவர்களும் பன்னிகுட்டி அவர்களும் :

              இருவரும் விஜய் நடித்த சுறா படத்தை பார்த்துவிட்டு மயக்கத்தில் இருக்கு, போது கஷ்டமர் கேரில் இருந்து வரும் போனுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என மக்ஸ் பண்ணிகுட்டிக்கு ட்ரைனிங் தரும் நிகழ்ச்சி .

டிஸ்கி : இது முற்றிலும் நகைசுவைகாகவே (!!!!) . சிரிப்பு வராட்டியும் சிரிச்சுடுங்க ஆனா கோவபடாதிங்க ..


13 comments:

 1. படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சுங்க ராஜா சில வரிகள் படிச்சிட்டு சிரிச்சிட்டேன்

  ReplyDelete
 2. "காணாமல் போன கனவுகள் " ராஜி : // சிறப்பு பயிற்சி வேறயா??? ஜூப்பரோ ஜூப்பர்.
  "மயிலிறகு " மயிலன் : கலக்கல் கவுஜ.. ஆனா டாக்குடருக்கு தெரியாம பார்த்துக்கங்க ….

  ReplyDelete
 3. ஆரூர் மூனா செந்தில் :

  இவர் ஒரு திறமையான (!!!!) // அது என்ன ஆச்சர்யக்குறி?? இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.. இவன் – ஆரூர்.மூனா. தற்கொலைப்படை……

  ReplyDelete
 4. வெந்நீர் வைக்குறதும் ஒரு கலைதான் பிரதர். அதிக சூடும் இருக்க கூடாது. குறைச்சலான சூடும் இருக்க படாது.

  ReplyDelete
  Replies
  1. ஆமா ரொம்ப முக்கியம்..

   Delete
 5. சிரிச்சிட்டேன்...

  அதிலயும் சீனு பத்தின மதுமதி பாட்டு சூப்பர்..

  ReplyDelete
 6. ஆரூர் மூனா செந்தில் குச்சி நான் எடுத்து வருகிறேன். ராஜி போடப்போகும் வெந்நீருக்கு தண்ணீரும் எடுத்து போகிறேன்.

  ReplyDelete
 7. அருமையான சந்தர்ப்பம் ..
  கலந்துகொள்ள இயலவில்லை என
  மனம் துடிக்கிறது..
  விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள...

  ReplyDelete
 8. நகைசுவை நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. ராஜிAugust 27, 2013 at 8:02 PM
  "வெந்நீர் வைக்குறதும் ஒரு கலைதான் "
  இந்த அரிய பெரிய விஷயத்தைக் கற்றுக்கொள்ள ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்- கலக்குங்க

  ReplyDelete
 10. ஹா ஹா சூப்பரப்பு,சீனு அண்ணா பற்றிய ஜோக் செம.
  அழகில் சிறந்தவர் யாரு? போட்டியில் சமந்தாவை கழட்டிவிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் :p

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...