> என் ராஜபாட்டை : கதம்பம் 14-08-13

.....

.

Wednesday, August 14, 2013

கதம்பம் 14-08-13
நடிகர் விஜய் செய்தது சரியா ?தலைவா படம் பல தடங்கல்களால் தமிழ் நாட்டில் வெளிவரமுடியாமல் தவிக்கிறது . இதுக்கு முக்கியகாரணம் விஜயின் அப்பா சொன்ன ஒருவார்த்தை தான் காரணம் . "நான் அண்ணா விஜய் M.G.R ". இதனால் பல த டைகள் வந்து படம் முடங்கி யுள்ளது . இந்த நிலையில் விஜய் விட்ட ஒரு அறிக்கை அவரின் ஹீரோ இமேஜ்அய் பதம் பார்த்துள்ளது .

"புரட்சி தலைவி அம்மா மிக சிறப்பான ஆட்சி தருகிறார் என துவங்கி அவரை பயங்கரமாக புகழ்ந்து ஒரு அறிக்கை தந்துள்ளார் . வடிவேலுக்கு ஒத்து போல ஒரு நிலைமை ஏற்பட்டபோது ,ஏன் இன்னும்  சினிமாவில் அவரின் எதிர்காலமே கேள்வி குறி ஆகும்போதும் கூட அவர் தனது நிலையை மாற்றி முதல்வருக்கு ஜால்ரா அடிக்கவில்லை .

கமல் தனது பிரச்சனையை மீடியா மற்றும்மக்களிடம் சொன்னார் . ஆனால் சினிமாவில் எல்லாரையும் எதிர்த்து பெயர் வாங்கிய அடுத்த முதல்வர் கனவில் உள்ள விஜய் இப்படி அறிக்கை விட்டது கஷ்டமாக உள்ளது . ஆனால் சினிமாவில் உள்ள பலர் இது போன்ற பிரச்னைகளுக்கு குரல் குடுப்பதில்லையே ஏன் ?

========================================================================

எனது முக புத்தகத்தில் இருந்து ..

கேக்குறவன் கேன பயலா இருந்தா கேஸ்ட்ரால் கம்பெனி ஓனர் ஃபிடல் கேஸ்ட்ரோனு சொல்வானுங்க. . . .

‪#‎மொக்கை‬ 2013


====================================================================
தெரியுமா??

TITMOUSE என்பது ஒரு வகை பறவை.

PRAIRIE DOG என்பது ஒரு வகை அணில்.
  

========================================================================

தல அஜித்தின் அடுத்த பட தலைப்பு "VEERAM ":

- செய்தி.

அய்யயோ !! V ல ஆரம்பிச்சாலே பிரச்சனை வருமே??
(VIJAYKANTH, VIJAY, VADIVELU , VISWARUPAM. . . .),


===================================================================

"V" ல ஆரம்பிக்கும் நடிகர்களுக்கும் , அம்மாக்கும் ஒத்து போகாதோ??

VIJAY KANTH
VADIVEL

இப்போ. . .

VIJAY. . .

எதுக்கும் விக்ரம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கட்டும். . .

=================================================================

நீங்கள் சொல்லும் அணைத்து கருத்துகளுக்கும் யாருமே எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை என்றால் எல்லாரும் உங்களுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என அர்த்தம்.
 

===================================================================

ரசித்த சிறுகதை :

ஓர் இரவுநேரம் ஒருவன் தன் மூன்று வயது மகன்
தூங்கிக்கொண்டிருக்கும் போது தன்
மனைவியின் மேல்உள்ள கோபத்தில் அவளைக்
கொன்று யாருக்கும் தெரியாமல்
பினத்தை புதைத்து விடுகிறான்.
மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவைப்
பற்றி கேட்டால் என்ன
சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்கி
ஆனால் மகன் அம்மாவைப்பற்றி கேட்க வில்லை.
இரண்டாம் நாளாவது கேட்பான் என
நினைத்தான்.ஆனாலும் கேட்கவில்லை.வழக்கம்
போல மகன் சந்தோசமாக இருந்தான்.
மூன்றாம் நாள் மெதுவாக மகனிடம்
பேச்சு கொடுத்தான்.
"உனக்கு நம்ம வீட்ல எதாவது மாற்றம்
தெரியுதா? எங்கிட்ட ஏதாவது கேக்கனும் போல
இருந்தா கேளு"
மகன் மெல்லக்கேட்டான்:
"மூனுநாளா அம்மா ஏன் உங்க
பின்னாடியே நிக்கிறாங்கப்பா?"==================================================================

அதிர்ச்சி :


மயிலாடுதுறையை கூட பெரிய சிட்டியா மதிச்சு தாக்குதல் நடத்த திட்டம் போட்டவன் கண்டிப்பா தீவிரவாதியா இருக்கமாட்டான்.=================================================================

     
 ரசித்த புகைப்படம் :

 
இன்றைய தத்துவம் :இதையும் படிக்கலாமே :


தலைவா : திரைவிமர்சனம் 

 


இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?
 

 
4 comments:

 1. நீங்கள் சொல்லும் அணைத்து கருத்துகளுக்கும் யாருமே எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை என்றால் எல்லாரும் உங்களுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என அர்த்தம்
  >>
  நிஜம்தான்

  ReplyDelete
 2. சிறுகதை நல்லா இருக்கு

  ReplyDelete
 3. சினிமால தான் எல்லா பன்ச் எல்லாம் நிஜத்துல்ள உஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 4. பெத்த பிள்ளைக்கே சூனியம் வைக்கிற கிரேட் அப்பா.... விஜய் அப்பா...

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...