> என் ராஜபாட்டை : தலைவா : திரைவிமர்சனம்

.....

.

Friday, August 9, 2013

தலைவா : திரைவிமர்சனம்இளைய தளபதி விஜய் , அமலாபால் மற்றும்காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் ,சத்தியராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் "தலைவா " இயக்குனர் தெய்வமகன் "விஜய் ". படத்தை வெளியிட்டு இருப்பவர் வேந்தன் மூவிஸ் .ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடனும் , விஜய்யின் அரசியல் நகர்வுக்கு அடித்தளம் அமைக்க போகும் படம் என்ற எதிர்பார்ப்பும் இணைந்து எல்லா தரப்பு மக்களும் எதிர்பார்த்த படம் எப்படி இருந்தது என பார்ப்போம் .

கதை :


ஆஸ்திரேலியவில் நடன குழு வைத்து நடத்துபவர் விஜய் . அவரின் நண்பர் சந்தானம் . அவரிடம் நடம கற்று கொள்ள வருபவர் அமலா பால் . இந்தியாவில் , மும்பையில் ஏழைகளின் பாதுகவலாரக , ஒரு டானாக வாழ்ந்துவருபவர் சத்தியராஜ் . சத்தியராஜின் மகன்தான் விஜய் .

சில சதிகரர்களால் சத்தியராஜ் கொல்லப்பட , அப்பாவின் வேண்டுகோளுக்கிணங்க (!!) அவரின் இடத்தில் இருந்து மக்களுக்கு எப்படி நல்லது செய்கிறார் , தனது அப்பாவை கொன்றவர்களை எப்படி பழி வாங்குகிறார் , அமலா பால் யார் ? கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதை தைரியம் இருந்தா வெள்ளி திரையில் காணுங்கள்+ பாயிண்ட்ஸ் : 1. விஜயின் நடனம் . வழக்கம போல விஜய் நடத்தில் கலக்கி உள்ளார் .
 2. சண்டைகாட்சிகள் அருமை
 3. ஒளிப்பதிவு அருமை . சண்டை காட்சிகளை நன்றாக படமாக்கி யுள்ளனர் .
 4. சந்தானத்தின் காமெடி .
 5. வாங்கன்னா , வணக்கமன்ன பாடல் .
 6. ரசிகர்களை விசிலடிக்க வைக்கும் சில வசனங்கள் .- பாயிண்ட்ஸ் :
 1. அருதபழசான கதை .
 2. பல படங்களில் இருந்து உருவபட்ட காட்சிகள் .
 3. சந்தானத்தை முழுமையாக பயன்படுத்தாதது . கடந்த பல படங்களில் வெற்றிக்கு சந்தானமே முக்கியகாரணம் .
 4. இடைவேளைக்கு பின் இழுவையான கதை .
 5. நல்ல நடிகர் சத்தியராஜை வீணடித்தது .
 6. இது விஜய் அரசியலுக்கு அடிஎடுத்து வைக்க போகும் படம் என பில்டப் கொடுத்தது .

ஆகமொத்தத்தில் :விஜய் ரசிகர்கள் விஜய்க்காக ஒரு முறை பார்க்கலாம் . இனி விஜய் SAC மற்றும் இயக்குனர் விஜய் பேச்சை கேட்காமல் ஒழுங்கா துப்பாக்கிபோல நல்ல படத்தில் நடித்தால் ரஜினி இடத்தை பிடிக்கலாம் .

ஆனந்தவிகடன் மார்க் : 42

குமுதம் ரேட்டிங்  : பார்க்கலாம்

ராஜபாட்டை  ரேட்டிங்  : 5 / 10
டிஸ்கி : வெளிநாட்டில் வசிக்கும் தீவிர விஜய் ரசிகர் (எனது நண்பர் ) சொன்னதன் அடிப்படையில் எழுதபட்டது .


இதையும் படிக்கலாமே :தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

1 comment:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...