> என் ராஜபாட்டை : சுஜாதா

.....

.
Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Monday, September 30, 2013

ரசித்து படிக்க வேண்டிய கிரைம் நாவல்கள் (Free E-Books)




நாவல்கள் பிடிக்காத நபர்கள் மிக மிக குறைவு . அதுவும் கிரைம் நாவல் பிடிக்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் . நாவல் உலகில் கொடிகட்டி பறப்பவர்கள் , பறந்தவர்கள் என சிலரின் நாவல் தொகுப்புகளை உங்களுக்கு வழங்குகிறேன் . இவையனைத்தும் நண்பர் வடகரை தாரிக்கின் சேமிப்புகள் ஆகும் . அவருக்கு நன்றி .

சுஜாதா நாவல்கள் :

24 ரூபாய் தீவு



 

ஆதலினால் காதல் செய்வீர்


 

அனிதா இளம் மனைவி


அனிதாவின் காதல்கள்


ஆயிரத்தில் இருவர்


டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு


டிராமா



சுபா நாவல்கள் 



ஆரம்பம் புதிது



அச்சமாளிகை

 

அனல்மேலே பனிதுளி
 

அன்பின் வலிமை , இமைக்காத இமைகள்

 

ஆட்டநாயகன், உலவுகாறி, தேசதுரோகி

 

உயிர் விடுகதை, புதை மணல், பெயர் முகவரி அன்பு


இதையும் படிக்கலாமே :


புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை



பாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Download)







Rs 2000 மதிப்புள்ள MiniTool Power Data Recovery Software இலவசமாக ...

 

தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்ப... 

 

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .





Monday, August 5, 2013

கதம்பம் 05-08-13


கடந்த மாத கதம்பம் பதிவுக்கு ஆதரவளித்த  நல்ல உள்ளங்களுக்கு நன்றி . இதோ இந்த வாரமும் . ( அடிகடி தொடரும் கொஞ்சம் சகித்துக்கொள்ளவும் )


இது சரியா ? தவறா ? 


இயக்குனர் சேரனின் மகள் காதல் விஷயத்தில் பலர் பல்வேறு விதமாக பேசுகின்றனர் . படங்களில் காதலை வாழவைத்தவர் தனது குடுப்பத்தில் எதிர்ப்பது சரியா என்று . இது சரியான வாதமாக படவில்லை . தொடர் கொலைகளை படமாக எடுப்பவர் கொலை செய்தால் தப்பில்லை என்பது போல உள்ளது . 

சேரன் தன மகள் காதலிக்கும் காதலன் சரியில்லை என தான் சொல்கிறார் . காதலை எதிர்க்கவில்லை . ஒரு அப்பா தன மகளின் வாழ்கையை நல்ல படியாக அமைத்து கொடுக்க வேண்டும் என விரும்புவது தவறா ? காரணமே இல்லாமல் அல்லது சாதியை , மதத்தை காட்டி எதிர்த்தால் அதை தவறு என சொல்லலாம் .

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் இது போல சென்று இப்போது படும் பாடு  நாடறிந்தது . காதல் எதிர்காலத்தை பார்க்காது . "குழோ , கஞ்சியோ எதுவானாலும் நான் தயார் என சொல்லும் பக்குவம் திருமணம் முடிந்து தொடரும் என சொல்லமுடியாது .


========================================================================

முக நூலில் பலர் பல விஷயங்களை பகிர்கின்றனர் . அது காமெடியாக இருக்கலாம் ,தத்துவங்களாக இருக்கலாம் .கலை இலக்கியம் , அரசியல் சம்பத்தபட்டதாக கூட இருக்கலாம் . ஆனால் சிலர் எழுதும் பதிவுகள் நம்மை யோசிக்க வைக்கும் , சிரிக்க வைக்கும் அப்படிபட்ட பதிவுகள் சில உங்களுக்காக ...

பள்ளிக்கூடம் படிக்கையில கேட்ட ஜோக் இது... இப்பவும் சுத்திக்கிட்டு இருக்கு...

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?

இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது
சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க
டாக்டர் – தினமும் மூணு வேளை
நர்ஸ் – நார்மலாத்தான்
பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது
போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது
வேலைக்காரி – பிசு பிசுன்னு
அட்டை – விடாம பெய்யுது
ஆமை- வெளியே தலை காட்டா முடியலை
குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது
தேள் – கொட்டு கொட்டுன்னு
நண்டு – பிடி பிடின்னு
 
==============
தமிழ் சினிமாவின் விதிகள்

1.ரேப் ஸீனுக்கு புலி, மானைக் காட்டுறது. முதலிரவு ஸீனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கப்பறம் லைட்டை ஆஃப் செஞ்சிடறது. மேக்ஸிமம் ரேப் ஸினுக்கு நம்ம ஹீரோயின் சேலைதான் கட்டியிருப்பாங்க...

2.பனி பொழியுற நாட்டுப் பாடல் காட்சிகள்ல, ஹீரோ மட்டும் கோட்டு, சூட்டு, கிளவுஸ் எல்லாம் போட்ருப்பாரு, ஆனா ஹீரோயின் அம்மணிக்கு மட்டும் டூபீஸ்....சே...என்னமாதிரி சமுகத்தில் வாழ்கிறோம் நாம்..?

3.படத்தோட உச்சக்கட்டமா வில்லன் எங்கேயாவது பாம் வச்சுடுவான். அதை டிஃப்யூஸ் பண்ண வர்ற ஹீரோ எந்த கலர் வயர வெட்டுறது அப்படின்னு டென்ஷனாகி செவப்பா நீலமான்னு மாத்தி மாத்தி யோசிப்பார். ஆனா அவர் கவலையே பட வேண்டாம். ஏன்னா அவர் எந்த வயர வெட்டினாலும் பாம் அமந்து போகும். (தக்காளி ..நீ புடுங்குற எல்லாமே தேவையில்லாத ஆணிதான்..)

4.நல்லதொரு ரேப் சீனை நாசமாக்க வரும்நம்ம ஹீரோ, வந்ததும் மொதோ வேலையா தன்னோட சட்டையையோ ஜெர்கினையோ கழட்டி பொண்ணு மேல போர்த்துவார்.(அடேய் உன்ன யார்ர இங்க வரச்சொன்னது ச்சே )

5.ஹீரோ ரெட்டைப்புள்ளையா இருந்தா அதுல ஒருத்தர் கண்டிப்பா ரொம்பக் கெட்டவனா இருப்பாரு. ஆனா கிளைமாக்ஸ்ல“நான் ஏன் அப்படி இருந்தேன் தெரியுமா”ன்னு ஒரு பாடாவதி டயலாக் பேசி நல்லவனா மாறிடுவார்..
 
======================================================================================
 தற்பொழுது படித்த புத்தகம் ;

நண்பர் பிலாசபிபிரபா சில நாட்களுக்கு (மாதங்களுக்கு ???) முன் வாங்கி தந்த சுஜாதா நாவலில் ஒன்று  டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு . நண்பர் ஒருவர் வாங்கி சென்றுநேட்று தான் தந்தார் . அருமையான கதை .  வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு E-BOOK LINK  இதோ :


டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு
 
 ==========================================================================================
 
ரசித்த புகைப்படம் :
 
 

Wednesday, June 12, 2013

தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகள்



இப்பொழுதெல்லாம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது . அதுவும் காசு கொடுத்து வாங்கி படிப்பது என்பது மிகவும் குறைந்து விட்டது . முன்பெல்லாம் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் வெளியிட்டால் நிறைய பிரதிகள் விற்கும் . அவரும் சந்தோஷமாக இருப்பார் , வெளியிடும் பதிப்பகமும் சந்தோஷமாக இருக்கும் . ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது . எல்லா புத்தகத்தையும் மின் புத்தகமாக மாற்றி விட்டதால் அனைவரும் கணினியில் படித்து விடுகின்றனர் .

இதோ உங்களுக்காக தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை தொகுப்புகள் .

1. சுஜாதா சிறுகதைகள் 


                 சுஜாதாவை தெரியாத தமிழர்களே இல்லை என சொல்லலாம் . அறிவியலை பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாக தனது கதைகளில் சொன்னவர் . அவரின் எழுத்து நடை தனியாக தெரியும் . கதை , சிறுகதை , நாவல் , ஆன்மிக புத்தகம் , திரைப்படம் என அனைத்து துறையிலும் தடம் பதித்தவர் இவர் .

இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD



=======================================================================


2. ஜெயகாந்தன் 



              இவரூம தமிழில் குறிப்பிட தகுந்த ஒரு எழுத்தாளர் . பல புத்தகங்கள் எழுதி யுள்ளார் . இவரின் தமிழ் எழுத்துக்கள் இவரின் அனைத்து படைப்புகளையும் படிக்க ஊக்குவிக்கும் .


இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD



=======================================================================



3. அகிலன் 



          இவர் பல வரலாறு கதைகள் எழுதியுள்ளார் . பல சிறுகதைகளும் எழுதியுள்ளார் . தமிழ் மொழியில் சிறுகதைகள் செழித்தோங்க ஐவரும் ஒரு காரணம் .


இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD



=======================================================================



இதை படித்திர்களா ?

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .
 
படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 


FACEBOOK இல் இதெல்லாம் படித்து இருக்கின்றிர்களா ?