> என் ராஜபாட்டை : புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை

.....

.

Tuesday, September 17, 2013

புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை



6,00,000 லட்சத்திற்கு மேல் ஹிட்ஸ் வாரி வழங்கிய அன்பு நண்பர்களுக்கு நன்றி



நவ கிரகங்களில் இரண்டு எங்கள் ஊர் அருகிலேயே உள்ளது . பலமுறை சென்று இருந்தாலும் ஏனோ அதைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம வந்ததில்லை . சென்ற வாரம் புதன் ஸ்தலம் சென்றேன் . அதைபற்றிய பதிவே இது .


நாகை மாவட்டம் , சீர்காழி வட்டத்தில் உள்ளது திருவெண்காடு . மயிலாடுதுறையில் இருந்து 25 KM , சீர்காழியில் இருந்து 13 KM தூரமும் உள்ளது இந்த கோவில் .சுவேதாரண்யா சுவாமிகள் கோவிலுடன் இணைந்து இந்த ஸ்தலம் உள்ளது .


திருமதி வித்யாம்பாள் சன்னதியின் அருகில் உள்ளது புதன் ஸ்தலம் . மூன்று களங்கள் உள்ள ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று .

பலன்கள் :

  • கல்வியில் மேன்மை
  • உடல்நலம்
  • குடும்ப சந்தோசம் அதிகரிப்பு
  • செல்வம் பெருக
  • தொழில் வளர்ச்சி


வழிப்பாட்டு முறைகள் :


  • அகல்விளக்கு வைத்து வழிபடலாம்
  • வில்வ இலையால் பூஜை
  • துளசி வழிபாடு



பார்க்கவேண்டியவை :

நீங்கள் எங்கு நின்று பார்த்தாலும் ரயில் உங்களை நோக்கி வருவதுபோல வரையபட்ட ஓவியம



வாயிலில் உள்ள நந்தி



சந்திர தீர்த்தம் (புதன் ஸ்தலம் எதிரே உள்ளது )



திருமதி வித்யாம்பாள் சன்னதி




ஆனந்த தாண்டவம் ஓவியம்


சுவேதார்ணய சுவாமிகள் ஆலயம்


பிரகாரம்





சகித்து கொள்ளமுடியாத விஷயம் :


புதனுக்கு அர்ச்சனை செய்ய டிக்கெட் 15 ரூபாய் என்று வாங்குகின்றனர் .ஆனால் டிக்கெட் விலை 5  மட்டுமே , மீதி 10 க்கு கொஞ்சம் வில்வ இலையை கொடுக்கின்றனர் . இந்த 10 ரூபாய் எந்த கணக்கில்வரும் , யார் யார்க்கு போகும் , இது அரசு அனுமதியுடன் நடக்கிறது என்பது அந்த புதனுக்கே வெளிச்சம் .








7 comments:

  1. ஞாயிற்றுக் கிழமை புதன் கோவிலுக்கு போனா அது புதன் கிழமை ஆயிடுமா??

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோ மேலும் மேலும் இந்தப் பார்வையாளர் தொகை
    அதிகரிக்கட்டும் !! சிறப்பான சுவாமி தரிசன அனுபவம் .பின்குறிப்பில்
    இட்ட விசயம் கசப்பான உண்மையே .இது தெய்வத்தின் பெயரால்
    நிகழ்த்தப் படும் அரசியல் கண்டுக்காதீர்கள் பின் கோவிலுக்குச் செல்லும்
    உணர்வுகள் குன்றிவிடும் .

    ReplyDelete
  3. அன்பின் ராஜா - ஆன்மீகச் சுற்றுலா - திருவெண்காடு சென்று வந்தது பற்றிய பதிவு - புகைப்படங்களூடன் பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. முக்கிய இடங்களை வியாபாரத் தலங்களாக மாற்றி வருவதை என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  5. இவை தவிர மேலும் ஒரு விஷயம் ரூ 15/- பெற்றுக் கொண்டு தரும் சீட்டில் வஸ்திரம் (துணி) சாற்ற என்று ரூ 5/-என்று அனைவரிடமும்பெறுகிறார்கள், ரூ 15/-கொடுத்து அர்ச்சனை சீட்டுடன்,வில்வமும் வாங்கி வந்து தந்தால் அர்ச்சகர்தேங்காய், பழம், வாங்கிவந்தால் தான் அர்ச்சனை செய்துதர முடியும் என்று கூறுகிறார். இது நியாயமா..

    ReplyDelete
  6. இவை தவிர மேலும் ஒரு விஷயம் ரூ 15/- பெற்றுக் கொண்டு தரும் சீட்டில் வஸ்திரம் (துணி) சாற்ற என்று ரூ 5/-என்று அனைவரிடமும்பெறுகிறார்கள், ரூ 15/-கொடுத்து அர்ச்சனை சீட்டுடன்,வில்வமும் வாங்கி வந்து தந்தால் அர்ச்சகர்தேங்காய், பழம், வாங்கிவந்தால் தான் அர்ச்சனை செய்துதர முடியும் என்று கூறுகிறார். இது நியாயமா..

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...